பிரான்சிய அகாதமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரான்சிய அகாதமி
Académie française
குறிக்கோளுரைÀ l'immortalité
(அழிவற்றமை நோக்கி)
துவங்கியது22 பெப்ரவரி 1635
தலைமையகம்பாரிசு, பிரான்சு
உறுப்புரிமை40 உறுப்பினர்கள் - லெ இம்மார்டெல்சு (அழிவற்றவர்கள்) என அறியப்படுகின்றனர்
பொதுச் செயலாளர்எலென் கார்ரெரெ டி'யான்கவுசு
வலைத்தளம்பிரான்சிய அகாதமி வலைத்தளம்

பிரான்சிய அகாதமி (Académie française (பிரெஞ்சு உச்சரிப்பு: ​[akademi fʁɑ̃ˈsɛz]), அல்லது பிரெஞ்சு அகாதமி, பிரான்சிய மொழியினைக் குறித்த அனைத்து விடயங்களுக்குமான முதன்மை பிரான்சிய அறிவுக் கழகமாகும். இது 1635ஆம் ஆண்டு லூயி XIII மன்னருக்கு முதன்மை அமைச்சராகவிருந்த கர்தினால் ரிசெலியுவினால் அலுவல்முறையாக நிறுவப்பட்டது.[1]1793ஆம் ஆண்டிலிருந்து பிரெஞ்சுப் புரட்சியின் போது இயங்காதிருந்த இந்த அகாதமியை 1803ஆம் ஆண்டில் நெப்போலியன் மீளமைத்தார்.[1] பிரான்சியக் கழகத்தின் ஐந்து அகாதமிகளில் மிகவும் தொன்மை வாய்ந்ததாகும்.

அகாதமியில் லெ இம்மார்டெல்சு (அழிவற்றவர்கள்) என அறியப்படும் 40 உறுப்பினர்கள் உள்ளனர்.[2] புதிய உறுப்பினர்களை அகாதமியின் உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கின்றனர். உறுப்பினர்கள் தங்கள் வாழ்நாள் முழுமைக்கும் பதவியிலுள்ளனர்; ஆனால் தீயநடத்தைக்காக நீக்கப்படலாம். முதல் உலகப் போரில் வெர்தூன் வெற்றியை அடுத்து பிரான்சின் மார்ஷலாக அறிவிக்கப்பட்ட பிலிப் பெடான் 1931இல் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்; ஆனால் இரண்டாம் உலகப் போரின் போது விஷியிலிருந்து செயல்பட்ட செருமனியின் கைப்பாவை பிரான்சிய அரசுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து 1945இல் பதவி விலக நேரிட்டது.[3] இந்த அமைப்பு பிரான்சிய மொழி குறித்த அலுவல்முறை ஆணையகமாகச் செயல்படும் பொறுப்பு கொண்டுள்ளது; இம்மொழியின் அலுவல்முறை அகரமுதலியை வெளியிடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பிரான்சியக் கழகக் கட்டிடம்

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "L’histoire". Academie Française official website. http://www.academie-francaise.fr/histoire/index.html. பார்த்த நாள்: 2010-01-13. 
  2. "Les immortels". Academie Française official website. http://www.academie-francaise.fr/immortels/index.html. பார்த்த நாள்: 2014-01-07. 
  3. Sanche de Gramont, The French: Portrait of a People, G.P. Putnam's Sons, New York, 1969, p. 270

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Académie française
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சிய_அகாதமி&oldid=3221215" இலிருந்து மீள்விக்கப்பட்டது