உள்ளடக்கத்துக்குச் செல்

பிராந்திய வளையச் சாலை, ஐதராபாத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை HRRR
HRRR
ஐதராபாத் பிராந்திய வளையச் சாலை
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 63
பராமரிப்பு பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி,
ஐதராபாத்து பெருநகர்ப் பகுதி,
ஐதராபாத்து நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம்
நீளம்:210 mi (340 km)
பயன்பாட்டு
காலம்:
2018 –
முக்கிய சந்திப்புகள்
Ring road around ஐதராபாத்து
South முடிவு:கண்டி
North முடிவு:சங்கரெட்டி
நெடுஞ்சாலை அமைப்பு

ஐதராபாத்து பிராந்திய வளையச் சாலை (Regional Ring Road, Hyderabad) என்பது இந்தியாவின் தெலுங்காணாவின் ஐதராபாத்து நகரத்தைச் சுற்றி திட்டமிடப்பட்ட வளையச் சாலை ஆகும்.[1] இது 340 கிலோமீட்டர் நீளமுள்ள (210 மைல்) 6 வழிப்பாதைச் சாலையாகும். இது தற்போதுள்ள சாலை வலையமைப்பை வலுப்படுத்தவும், இணைப்புகள் இல்லாத இடங்களில் புதிய இணைப்புகளைச் சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.[2] இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பிராந்திய வளையச் சாலையை பான்-இந்தியா பாரத்மாலா பரியோஜனா கட்டம்-2 இல் சேர்த்துள்ளது.[3][4] இது ஐதராபாத்து நகரத்தைச் சுற்றியுள்ள மாவட்டங்களை இணைக்க உதவுகிறது. தேசிய நெடுஞ்சாலை 65, தேசிய நெடுஞ்சாலை 44, தேசிய நெடுஞ்சாலைகள் 163, தேசிய நெடுஞ்சாலை 765 போன்ற முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்க இது உதவுகிறது.

இணைப்புகள்

[தொகு]

முக்கிய நகரங்கள், கிராமங்கள் ரங்காரெட்டி, புவனகிரி, சித்திபேட் மற்றும் சங்காரெட்டி மாவட்டங்களில் உள்ளன.

இத்திட்டம் இரண்டு பகுதிகளாக உருவாக்கப்படும்.

சுமார் 164 கிலோமீட்டர் நீளமுடைய வடக்குப் பகுதியின் கட்டுமானச் செலவு ரூ. 9,500 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதி, சங்காரெட்டி, நர்சாபூர், தூப்ரான், கஜ்வேல், பிரக்னாபூர், யாதகிரிகுட்டா மற்றும் புவனகிரி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

சுமார் 182 கிலோமீட்டர் நீளமுடைய தெற்கு பகுதியின் கட்டுமானச் செலவு ரூ. 6,480 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதி, புவனகிரி, சௌட்டுப்பல், மால், அமங்கல், ஷாத்நகர், செவெல்லா, சங்கர்பள்ளி மற்றும் சங்காரெட்டி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

  • புவனகிரி, தெலுங்கானா
  • யாதகிரிகுட்டா
  • வலியூர்
  • சங்கீதம்
  • சௌத்துப்பால்
  • சமஸ்தான் நாராயணபூர்
  • சிவண்ணகுடா
  • மர்ரிகுடேம்
  • மால்-குர்மாபள்ளி
  • நாகில்லா
  • அமங்கல்
  • கேசம்பேட்டை
  • சாத்நகர்
  • சாபாத்
  • செவல்லா
  • நவாப்பேட்டை
  • சங்காரெட்டி
  • தௌலதாபாத்
  • நரசாபூர்
  • சிவம்பேட்டை
  • தூப்ரான்
  • நாச்சாராம்
  • கஜ்வெல்
  • ஜகதீபூர்

வரைவு

[தொகு]

முதற்கட்ட வரைவு முன்மொழிவில், இத்திட்டம் பெரிபெரல் ரிங் ரோடு எனப் பெயரிடப்பட்டிருந்தது. பின்னர், சுமார் 330 கிலோமீட்டர் நீளமுடைய இந்த வளையச் சாலைக்கு ரீஜனல் ரிங் ரோடு அல்லது டிரிப்பிள் ஆர் எனப் புதிய பெயர் சூட்டப்பட்டது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Regional ring road work unlikely to start before LS polls".
  2. Proposed regional ring road to be wider - Times Of India. Articles.timesofindia.indiatimes.com (2011-06-13). Retrieved on 2013-12-06.
  3. "Hyderabad: RRR may dent ORR revenue, fear bidders".
  4. "Bharatmala project: Hyderabad's RRR set for expansion".
  5. HMDA to prepare integrated master plan - Times Of India. Articles.timesofindia.indiatimes.com (2011-04-01). Retrieved on 2013-12-06.

வெளி இணைப்புகள்

[தொகு]