பிராந்திய ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கூட்டுறவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிராந்திய ஒட்டுமொத்தப் பொருளாதார கூட்டாண்மை (ஆர்சிஈபி) (Regional Comprehensive Economic Partnership) என்பது ஆசிய-பசிபிக் நாடுகளுக்கிடையிலான தடையற்ற பொருளாதார ஒப்பந்தமாகும். இதில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் ( புரூணை, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ) பத்து நாடுகள் மற்றும் ஐந்து எஃப்.டி.ஏ கூட்டாளி நாடுகள் ( ஆத்திரேலியா, சீனா, யப்பான், நியூசிலாந்து, தென் கொரியா ) உறுப்பினராக உள்ளன. ஆசியானின் ஆறாவது எஃப்டிஏ கூட்டாளியான இந்தியா, 2019 இல் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியது.

ஆர்சிஈபி பேச்சுவார்த்தைகள் 2012 நவம்பரில் கம்போடியாவில் நடந்த ஆசியான் உச்சி மாநாட்டில் முறையாக தொடங்கின. [1] 2017 ஆம் ஆண்டில், எதிர்பார்புடன் கையொப்பமிட்ட 16 நாடுகளானது (இந்தியா உட்பட) 3.4 பில்லியன் மக்களைக் கொண்டுள்ளன. இவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி, பிபிபி) 49.5 டிரில்லியன் டாலர், 3.4 பில்லியன் மக்களைக் கொண்டுள்ளன, உலக மக்கள்தொகையில் பாதி மற்றும் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 39 சதவீதம். [2]

உறுப்பினர்[தொகு]

ஆர்சிஈபி-இன் 15 உறுப்பு நாடுகள்
நீலம்: தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு
ஊதா: ஆசியான் பிளஸ் திரி
மொத்தம்: ஆசியான் பிளஸ் சிக்ஸ் (இந்தியாவைத் தவிர)

நடு ஆசியாவில் உள்ள நாடுகள் மற்றும் தெற்காசியா மற்றும் ஓசியானியாவில் மீதமுள்ள நாடுகள் போன்ற பிற வெளி பொருளாதார கூட்டளிகளுக்கும் இதில் இணையலாம். [3]

நாடுகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "RCEP: Challenges and Opportunities for India, 25 July 2013, RSIS, Singapore" (PDF). rsis.edu.sg. Archived from the original (PDF) on 30 December 2013. பார்க்கப்பட்ட நாள் 24 April 2018.
  2. Stefani Ribka/Linda Yulisman (7 December 2016). "RCEP talks speed up amid TPP failure".
  3. "What is the Regional Comprehensive Economic Partnership (RCEP)? Ministry of Trade and Industry Singapore November 2012" (PDF).
  4. "Regional Comprehensive Economic Partnership (RCEP) Joint Statement The First Meeting of Trade Negotiating Committee". 10 May 2013. Archived from the original on February 19, 2015.