பிராணா கிருட்டிணா பரிஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராணா கிருட்டிணா பரிஜா
பிறப்பு(1891-04-01)1 ஏப்ரல் 1891
பாலிகுடா, ஜகத்சிம்மபூர், வங்காள மாகாணம், பிரிதானிய இந்தியா
(தற்போது ஒடிசா, இந்தியா)
இறப்பு2 சூன் 1978(1978-06-02) (அகவை 87)
தேசியம்இந்தியன்
துறைதாவரவியல்
பணியிடங்கள்இராவென்சா பல்கலைக்கழகம்
பனாரசு இந்து பல்கலைக்கழகம்
உத்கல் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்இராவென்சா பல்கலைக்கழகம்
மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
விருதுகள்பத்ம பூசண் (1955)
பிரித்தானிய பேரரசின் ஆணை அதிகாரி(OBE; 1944)
முதல் ஒடிசா சட்டமன்றத்தின் உறுப்பினர்.
பதவியில்
1952–1957
தொகுதிபாலிகுடா சட்டமன்றத் தொகுதி

பிராணா கிருஷ்ணா பரிஜா (Prana Krushna Parija) (பிரித்தானியப் பேரரசின் ஒழுங்கு அதிகாரி) (பிறப்பு:1891 ஏப்ரல் 1 - இறப்பு: 1978 சூன் 2) [1] ஒடிசாவின் ஜகத்சிம்மபூரின் பாலிகுடாவில் பிறந்த [2] [3] இவர் தாவரவியல் பேராசிரியராவார். இவரது ஆராய்ச்சிப் பணிகள் முக்கியமாக தாவர உடலியல், சோதனை தாவர உருவவியல் மற்றும் தாவர சூழலின் சுற்றுச்சூழல் ஆய்வுகள் ஆகியவற்றின் அடிப்படை மற்றும் பயன்பாட்டு அம்சங்களை உள்ளடக்கியது. நீர் பதுமராகம் மற்றும் பிற நீர்வாழ் களைகள், இலைகள் மற்றும் ஆப்பிள்களில் சுவாசம், தாவரங்களில் உருமாற்றம் மற்றும் வெப்ப எதிர்ப்பு, அரிசி மற்றும் பாசிகள் மற்றும் ஆப்பிள்களின் சேமிப்பு ஆகியவற்றை இவர் ஆய்வு மேற்கொண்டார். [4]

தொழில்[தொகு]

உத்கல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினார். கட்டாக்கின் இராவன்சா பல்கலைக்கழகத்தில் (முன்னர் இராவன்சா கல்லூரி ) முதல்வராகவும் பணியாற்றினார் [5] பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் சார்பு துணைவேந்தராகவும், வாரணாசி மற்றும் புவனேஸ்வர் உத்கல் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார். பல்கலைக்கழகத்தின்நூலகத்திற்கு "பரிஜா நூலகம்" என்று இவரது பெயரிடப்பட்டது. இவர் 1960 இல் இந்திய அறிவியல் காங்கிரசு சங்கத்தின் [6] தலைவராக இருந்தார்.

அரசியல்[தொகு]

இவர் முதல் ஒடிசா சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருந்தார். [7]

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்[தொகு]

 • பியர்ன்சைட்ஸ் ஸ்காலர்ஷிப் (1918), கேம்பிரிட்ஜ், கிறிஸ்துக் கல்லூரி, நரம்பு மண்டலத்தின் கரிம நோய்கள் துறையில் மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் உதவித்தொகை. [8]
 • பிரித்தானிய பேரரசின் ஆணை (OBE), 1944 புத்தாண்டு மரியாதை
 • பத்ம பூசண், 1955 [9]

குறிப்புகள்[தொகு]

 1. 1948-1981. பார்க்கப்பட்ட நாள் 5 March 2013.
 2. "Directory of Eminent Personalities of the District". jagatsinghpur.nic.in. Archived from the original on 19 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 5 March 2013. Dr. Pranakrushna Parija Balikuda
 3. Balikuda locals remember son of the soil Dr Parija
 4. "INSA :: Deceased Fellow Detail". insaindia.res.in. Archived from the original on 2019-11-07. பார்க்கப்பட்ட நாள் 2019-11-07.
 5. "Vanivihar Homepage". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-01-20.
 6. "Government of India,Indian Science Congress". sciencecongress.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2019-11-07.
 7. List of members of OLA, 1951-2004 பரணிடப்பட்டது 2013-12-17 at the வந்தவழி இயந்திரம்
 8. The historical register. Supplement. University of Cambridge; University of Cambridge. Cambridge University calendar. Supplement; University of Cambridge. Index to tripos lists, 1748–1910. Supplement. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். University of Cambridge. 1911–1920
 9. "Padma Bhushan Awardees". Ministry of Communications and Information Technology. பார்க்கப்பட்ட நாள் 28 June 2009.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராணா_கிருட்டிணா_பரிஜா&oldid=3563550" இலிருந்து மீள்விக்கப்பட்டது