பிராணகிதா வனவிலங்கு சரணாலயம்
பிராணகிதா வனவிலங்கு சரணாலயம் | |
---|---|
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
அமைவிடம் | தெலங்காணா, இந்தியா |
அருகாமை நகரம் | மஞ்செரியல் |
ஆள்கூறுகள் | 19°01′32″N 79°54′19″E / 19.0256091°N 79.9053466°E[1] |
பரப்பளவு | 136.2 km2 (52.6 sq mi) |
நிறுவப்பட்டது | 1980 |
forests |
பிராணகிதா வனவிலங்கு சரணாலயம் (Pranahita wildlife sanctuary) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் மஞ்செரியல் மாவட்டத்தில் (பழைய ஆதிலாபாத் மாவட்டம்) அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.[2]
இந்த சரணாலயம் பிராணகிதா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது மஞ்செரியல் நகரத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது. இது புல்வாய் மற்றும் 20க்கும் மேற்பட்ட ஊர்வன, 50க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், 40க்கும் மேற்பட்ட பாலூட்டிகளுக்குப் பிரபலமானது.
வரலாறு
[தொகு]பிராணகிதா 13 மார்ச் 1980-ல் நிறுவப்பட்டது. இதன் பரப்பளவு 136.02 சதுர கி.மீ. ஆகும். பிராணகிதா தெற்கு வெப்பமண்டல உலர் இலையுதிர் காடுகள், உலர்ந்த புதர் காடு மற்றும் புல்வெளிகள் நிறைந்தது.[3]
பார்வை நேரம்
[தொகு]நவம்பர் முதல் ஏப்ரல் வரை இந்த இடத்தைப் பார்வையிடச் சிறந்த நேரம் ஆகும்.[3] மஞ்செரியல் மற்றும் சென்னூரில் வன ஓய்வு இல்லம் உள்ளது. காற்றின் வெப்பநிலை 15 முதல் 40 பாகை செல்சியசு வரை மாறுபடும்.[4]
அணுகல்
[தொகு]சாலை வழியாக:
ஐதராபாத் - கரீம்நகர் - மஞ்சேரியல் - 258 கி.மீ. தொலைவில் ஐதராபாத்திலிருந்து
தொடர்வண்டி மூலம்:
ஐதராபாத் முதல் மஞ்சேரியல் – 236 கி.மீ. தூரப் பயணம்
வானூர்தி மூலம்:
அருகிலுள்ள வானூர்தி நிலையம் - இராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம், ஐதராபாத்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pranahita Sanctuary". protectedplanet.net.
- ↑ "Pranahita Wildlife Sanctuary". Telangana Forest Department. Archived from the original on 21 பிப்ரவரி 2015. Retrieved 21 Feb 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 3.0 3.1 "Telangana Forest Department". National Portal of India Telangana Tourism. Archived from the original on 10 டிசம்பர் 2016. Retrieved 10 March 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Guru, Travel (2013-08-05). "The Pranahita Wildlife Sanctuary Andhrapradesh". Beautiful Indian Tourist Spots (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-06-24. Retrieved 2021-06-22.