பிராங்க் வாட்சன் டைசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சர் பிராங்க் வாட்சன் டைசன்
Sir Frank Watson Dyson
Frank Watson Dyson.jpg
பிறப்பு8 January 1868 (1868-01-08)
மீழ்சாம், இலைசெசுடெர்சயர், இங்கிலாந்து
இறப்பு25 May 1939 (1939-05-26) (aged 71)
கடலில்
தேசியம்பிரித்தானியர்
கல்வி கற்ற இடங்கள்டிரினிடி கல்லூரி, கேம்பிரிட்ஜ்
அறியப்படுவதுஅரசு வானியலாளர்
விருதுகள்அரசு பதக்கம் (1921)
கையொப்பம்

சர் பிராங்க் வாட்சன் டைசன் (Sir Frank Watson Dyson), KBE, FRS,[1] FRSE, LLD, (8 ஜனவரி 1868 – 25 மே 1939) ஓர் ஆங்கிலேய வானியலாளர் ஆவார். இவர் அரசு வானியலாளராக அமர்த்தப்பட்டார். இவர் இங்கிலாந்தில் உள்ள கிரீன்விச்சில் இருந்துள்ள பிப் ஒலி நேரக் குறிகைகளை அறிமுகப்படுத்தியதர்காகவும் ஐன்சுட்டைனின் பொது சார்பியல் கோட்பாட்டை நிறுவியதற்காகவும் பெயர்பெற்றவர்.

வாழ்க்கை[தொகு]

இவர் இலைசெசுடெர்சயரில் ஆழ்சுபை-தெ-லாசவுச் அருகில் உள்ள மீழ்சாமில் பிறந்தார். இவரது தந்தையார் புனித வாட்சன் டைசன் ஆவார். இவர் மரைப்பேராய அமைச்சர். இவரது தாயார் பிரான்சிசு டோடுவெல்.[2] இவரது பெற்றோர் இவரது இலம்பருவத்திலேயே யார்க்சயருக்கு இடம்பெயர்ந்தனர். அங்கே மேற்கு யார்க்சயரில் இருந்த ஆலிபாக்சில் உள்ள ஈத் இலக்கணப் பள்ளியில் கல்விபெற்ரார். கல்விநல்கை பெற்று பிராட்போர்டு இலக்கணப் பள்ளிக்கும் கேம்பிரிட்ஜ் டிரினிடி கல்லூரிக்கும் மாறினார். இக்கல்லூரியில் இவர் கணிதவியலும் வானியலும் கற்றார். இவர் அங்கே இரண்டாம் விரேங்கிளராக 1889 இல் விளங்கினார்.[3][4][5][6][7]

இவருக்கு 1894 இல் கிரீன்விச் வான்காணகத்தில் முதுநிலை உதவியாளர் பதவி வழங்கப்பட்டது. இங்கு இவருக்கு விண்மீன் வரைவியல் அட்டவணைப்பணி தரப்பட்டது. இந்த அட்டவணை 1905 இல் வெளியானது.[5]

இவர் சுகாட்லாந்துக்கான அரசு வானியலாளராக 1905 முதல் 1910 வரை அமர்த்தப்பட்டார்.மேலும்1910 இல் இருந்து 1933 வரை அரசு வானியலாளராகவும் கிரீன்விச் வான்காணக இயக்குநராகவும் இருந்துள்ளார். இவர் அந்த வான்காணகத்துக்கு ஒரு புதிய விடுபட்ட தனி ஊசல் கடிகாரத்தை அறிமுகப்படுத்தினார். இது அக்காலத்தில் நிலவிய கடிகாரங்கள் அனைத்தினும் துல்லியமானதாகும்.[5]

இவரது சூரிய ஒளிமறைப்புத் தேட்ட ஆய்வுகள் இவருக்குப் பெரும்புகழ் ஈட்டின. இவர் சூரிய ஒளிமுகடு, வண்னக்கோள கதிர்நிரல்களில் பெருபுலமை வாய்ந்தவர் ஆவார். இவர் 1919 இல் பிரேசில், பிரிசிபே ஆகிய இடங்களில் சூரிய ஒளிமறைப்பை நோக்கும் தேட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்தார். இந்நோக்கீடுகள் ஐன்சுட்டைனின் ஒளிமீதுள்ள ஈர்ப்பின் விளைவை உறுதிப்படுத்தி நிறுவின.[8]

இவர் 1939 இல் ஆத்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்குத் திரும்பும்போது கடலில் இறக்கவே கடலிலேயே அடக்கம் செய்யப்பட்டார்.[5]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

1919 தேட்டச் சூரிய ஒளிமறைப்பின் ஒளிப்படம்[9]

குடும்பம்[தொகு]

இவர் 1894 இல் பலேமோன் பெசுட்டின் மகளாகிய கரோலின் பிசேத் பெசுட்டு அவர்களை மணந்தார். இவர்களுக்கு இரு மகன்களும் ஆறு மகள்களும் பிறந்தனர்.

தேர்ந்தெடுத்த எழுத்துகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Arthur Eddington (1940). "Sir Frank Watson Dyson. 1868–1939". Obituary Notices of Fellows of the Royal Society 3 (8): 159–126. doi:10.1098/rsbm.1940.0015. http://rsbm.royalsocietypublishing.org/content/royobits/3/8/159. 
  2. BIOGRAPHICAL INDEX OF FORMER FELLOWS OF THE ROYAL SOCIETY OF EDINBURGH 1783 – 2002. The Royal Society of Edinburgh. July 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0 902 198 84 X. https://www.royalsoced.org.uk/cms/files/fellows/biographical_index/fells_indexp1.pdf. 
  3. "Dyson, Frank Watson (DY886FW)". A Cambridge Alumni Database. University of Cambridge. 
  4. John Jackson (astronomer) (1940). "Frank Watson Dyson". Monthly Notices of the Royal Astronomical Society (Royal Astronomical Society) 100 (4): 238–246. Bibcode: 1940MNRAS.100Q.238.. http://articles.adsabs.harvard.edu/full/1940MNRAS.100Q.238.. பார்த்த நாள்: 16 January 2017. 
  5. 5.0 5.1 5.2 5.3 Harold Spencer Jones (1939). "Obituary: Sir Frank Watson Dyson". The Observatory 62 (782): 179–187. Bibcode: 1939Obs....62..179S. http://adsabs.harvard.edu/full/1939Obs....62..179S. பார்த்த நாள்: 16 January 2017. 
  6. Robert Grant Aitken (1939). "Sir Frank Watson Dyson, 1868–1939". Publications of the Astronomical Society of the Pacific (Astronomical Society of the Pacific) 51: 336–338. Bibcode: 1939PASP...51..336A. http://articles.adsabs.harvard.edu/full/1939PASP...51..336A. பார்த்த நாள்: 16 January 2017. 
  7. Wilson, Margaret (1951). Ninth Astronomer Royal: The Life of Frank Watson Dyson. Cambrdge, England: W. Heffer & Sons Ltd.. 
  8. "Joint Eclipse Meeting of the Royal Society and the Royal Astronomical Society". The Observatory: A Monthly Review of Astronomy 42 (545): 389–398. November 1919. Bibcode: 1919Obs....42..389.. http://adsabs.harvard.edu/full/1919Obs....42..389.. 
  9. Frank Watson Dyson; Eddington, A. S.; Davidson, C. (1920). "A Determination of the Deflection of Light by the Sun's Gravitational Field, from Observations Made at the Total Eclipse of May 29, 1919". Philosophical Transactions of the Royal Society A: Mathematical, Physical and Engineering Sciences 220 (571–581): 291. doi:10.1098/rsta.1920.0009. Bibcode: 1920RSPTA.220..291D. http://rsta.royalsocietypublishing.org/content/220/571-581/291. 

வெளி இணைப்புகள்[தொகு]