பிராங்க் யார்விசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதக்க சாதனைகள்
பிராங்க் யார்விசு
பிராங்க் யார்விசு
ஆண்கள் தடகளம்
நாடு  ஐக்கிய அமெரிக்கா
ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1900 பாரிசு ஆண்கள் 100 மீட்டர்

பிராங்க் வாசிங்டன் யார்விசு (Frank Washington Jarvis) அமெரிக்காவைச் சேர்ந்த தடகள வீரராவார். 1878 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 31 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1900 ஆம் ஆண்டு பாரிசு நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100 மீ ஓட்டப்பந்தயத்தில் இவர் வெற்றி பெற்றுள்ளார்.[1]

பாரிசில் நடந்த 1900 கோடைகால ஒலிம்பிக்கில் 100 மீட்டர் போட்டிக்கு முன்னதாக யார்விசு தொழில்முறை தடகள ஒன்றியத்தின் 100 யார்டு ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று இருந்தார். ஆனால் ஒலிம்பிக் விளையாட்டுக்கு சற்று முன்னதாக நடைபெற்ற பிரிட்டிசு வெற்றியாளர் கோப்பையை அமெரிக்காவின் ஆர்தர் டஃபி வென்றிருந்தார்.

இருப்பினும், ஒலிம்பிக்கின் தகுதிச்சுற்று போட்டியில் யார்விசும் மற்றொரு அமெரிக்கரான வால்டர் டெக்சுபரியும் 10.8 நொடிகளில் பந்தய தொலைவை ஓடி உலக சாதனையை சமன் செய்தனர். மூன்று அமெரிக்கர்கர்கள் 100 மீட்டர் விரைவோட்ட இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர், ஆத்திரேலியாவைச் சேர்ந்த சிடான் ரவுலியும் இறுதிக்கு தகுதி பெற்றார். இறுதி பந்தயத்தின் முதல் பாதிக்குப் பிறகு, முன்னணியிலிருந்த டஃபி தசைப்பிடிப்பால் பந்தயத்திலிருந்து விலகினார். மற்ற மூவரும் தொடர்ந்து ஓடி வெற்றியைத் தீர்மானித்தனர். இறுதியில் யார்விசு வென்றார்.

இதே ஒலிம்பிக்கில் யார்விசு மும்முறை தாண்டல் மற்றும் நின்றபடி மும்முறை தாண்டல் (ஓட்டம் இல்லாமல்) ஆகிய போட்டிகளில் போட்டியிட்டார், ஆனால் சிறந்த முடிவுகள் ஏதும் அடையவில்லை.

ஓட்டப்பந்தய வாழ்க்கைக்குப் பிறகு யார்விசு ஒரு வழக்கறிஞரானார். 1933 ஆம் ஆண்டு சூன் மாதம் 2 ஆம் தேதியன்று யார்விசு இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Frank Jarvis". Olympedia. பார்க்கப்பட்ட நாள் 22 December 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராங்க்_யார்விசு&oldid=3287846" இலிருந்து மீள்விக்கப்பட்டது