பிராங்க் டிரேக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராங்க் டிரேக்
பிராங்க் டிரேக், புத்தியச் சேதி (SETI) திட்டத் தந்தை[1]
பிறப்புமே 28, 1930 (1930-05-28) (அகவை 93)
சிகாகோ, இல்லினாயிசு
குடியுரிமைஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
கல்வி கற்ற இடங்கள்கார்னல் பல்கலைக்கழகம்
ஆர்வார்டு பல்கலைக்கழகம்
அறியப்படுவதுசேதி (SETI)
டிரேக் சமன்பாடு


பிராங்க் டொனால்டு டிரேக் (Frank Donald Drake) (பிறப்பு: மே 28, 1930) ஓர் அமெரிக்க வானியலாளரும் வானியற்பியலாளரும் ஆவார். இவர் புவிக்கு அப்பாலான அறிதிறன் அல்லது மதிநுட்பத் தேட்டத்தில் ஈடுபட்ட முன்னோடிகளில் மிகவும் குறிப்பிடத் தகுந்தவர். இவர் சேதியை (SETI) நிறுவியவரும் ஆவார்.[2][3][4][5] இவர் 1960 இல் முதன்முதல் புவிக்கு அப்பாலான அறிதிறன் தொடர்பு கொள்ள, நோக்கீட்டு முயற்சிகளில் ஓசுமா (Ozma) திட்டத்தின் வழியாக முயற்சி மேற்கொண்டுள்ளார்ர்.. இவர் டிரேக் சமன்பாட்டை உருவாக்கினார். மேலும் விண்வெளிக்கு அனுப்ப புவியின் வானியல், உயிரியல் வடிவங்களை விவரிக்கும் இலக்கவியல் குறிதொகுப்புமுறையை அரேசிபோ தகவல் என உருவாக்கினார்.

இளமையும் கல்வியும்[தொகு]

இவர் 1930 மே 28 இல் இல்லினாயிசில் உள்ள சிகாகோவில் பிறந்தார். இளைஞராக இவர் வேதியியலையும் மின்னனியலையும் விரும்பியுள்ளார். தன் எட்டாம் அகவையிலேயே புறவெளிக் கோள்களில் உயிரினம் நிலவும் வாய்ப்பைக் கருதிப் பார்த்த்தாக இவர் ஓர் அறிக்கையில் கூறுகிறார். ஆனால் அதைக் குடும்பத்துக்கும் தன் ஆசிரியர்களுக்கும் கூட தெரியவொட்டாமலும் விவாதத்தில் ஈடுபடாமலும் சுற்றி நிலவிய சமய நெருக்கடியான சூழலால் காத்து வந்துள்ளார்.

இவர் கார்னல் பல்கலைக்கழகத்தில் கடற்படைசார்ந்த தேக்கிருப்பு அலுவலர் பயிற்சிப் படையின் நல்கையில் சேர்ந்தார்.அப்பொது தான் இவரது வானியல் படிப்பு தொடங்கியுள்ளது. இவரின் புவிக்கு அப்பாலான உயிரின வாய்ப்பு பற்றிய எண்ணங்களுக்கு 1951 இல் ஆற்றப்பட்ட ஆட்டோ சுத்ரூவ எனும் வானியற்பியலாரின் விரிவுரை மேலும் உரம் சேர்த்துள்ளது.கல்லூரி முடிந்த்தும், சிறிதுகாலம் மின்னனியல் அலுவலராக அமெரிக்க அல்பானி சிஏ 123 உயர்தகரி அமைப்பில் பணிபுரிந்துள்லார். இவர் பிறகு ஆர்வாடில் உள்ள பட்டப்படிப்பு பள்ளியில் கதிர்வீச்சு வானியல் பயில சேர்ந்தார்.

பூஞ்செடிகள் வளர்ப்பதும், கல், கனிமம், அருமணிகளில் அழகிய உர்வங்களை வடிவமைப்பதும் இவரது பொழுதுபோக்குகளாக இருந்துள்ளன.

வாழ்க்கைப்பணி[தொகு]

புவிக்கு அப்பாலான புறவெளி நாகரிகங்களின் நிலவுதலிலும் அவற்றைக் கண்டுபிடிப்பதிலும் நிகழ்நிலைக் கண்ணோட்டங்களைக் கொண்டிருந்தாலும் அப்பணியில் இணைந்திருந்தாலும், டிரேக் தன் வாழ்க்கைப்பணியைக் கதிர்விச்சு வானியல் ஆராய்ச்சியில் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள கிரீன் பேங்கு தேசியக் கதிர்வீச்சு வானியல் நோக்கீட்டகத்தில் தொடங்கினார். பிறகு இவர் தாரைச் செலுத்த ஆய்வகத்தில் சேர்ந்தார்.அங்கே இவர் வியாழன் கோள் மின்னணு மண்டலமும் காந்த மண்டலமும் நிலவுதலை நிறுவும் முதன்மை அளவீடுகளை எடுத்தார்.

இவர் 1960 களில் அரிசிபோ நோக்கீட்டகத்தைக் கதிர்வீச்சு வானியலுக்கு ஏற்றதாக மாற்ற முனைந்தார். பிறகு அதை 1974 இலும் 1995 இலும் சமகால முன்னேற்றங்களை உள்ளடக்கிப் புதுப்பித்தார். ஓர் இயல்பான ஆய்வாளராக இவர் துடிமீன்களின் தொடக்கநிலை ஆய்விலும் ஈடுபட்டார். இவர் அப்போது கார்னெல் பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் தேசிய வானியல், மின்னணு மண்டல மைய ( அரிசிபோவின் முந்தைய பெயர்) இயக்குநராகவும் இருந்தார். இவர் 1974 இல் அரிசிபோ செய்தியை எழுதினார்.[6]

அப்போது கியுசெப்பே கோக்கோனி, பிலிப்பு மோரிசன், இயோசிப் சாமுயீலொவிச் சுக்லோவ்சுகி, கார்ல் சேகன் ஆகியோரும் இவரும் சேதிப் புல ஆய்வின் முன்னணி ஆய்வாளர்களாக விளங்கினர்.

இவரும் கார்ல் சேகனும் 1972 இல் சேதிப் புல முன்னோடிச் செய்திப் பட்டயத்தை வடிவமைத்தனர். இதுவே விண்வெளிக்கு அனுப்பிய முதல் செய்தி ஆகும். இதைப் புறதர் (புறவெளி மாந்தர்) பெற்றால் புரிந்துகொள்ள முடியும்படி வடிவமைக்கப்பட்டது. இவர் பிறகு வாயேஜரின் பொற்பதிவையும் வடிவமைத்துள்ளார். இவர் 1974 இல் அமெரிக்கக் கலை, அறிவியல் கழகத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் அமெரிக்கத் தேசியக் கல்விக்கழக உறுப்பினராக உள்ளார். இவர் 1989 முதல் 1992 வரை அக்கழகத் தேசிய ஆராய்ச்சி மன்றத்தின் இயற்பியல், வானியல் வாரியத்துக்குத் தலைவராக இருந்துள்ளார். இவர் பசிபிக் வானியள் கழகத்தின் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் 1964 முதல் 1984 வரை கார்னெல் பல்கலைக்கழக வானியல் பேராசிரிராகவும் அரிசிபோ நோக்கீட்டக இயக்குநராகவும் இருந்துள்ளார். இவர் தற்போது கார்ல்சேகன் மையத்தின் சேதி நிறுவனத்தில் புடவியில் வாழும் உயிர்வாழ்க்கையை பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.[7]

இவர் வானியல், வானியற்பியல் துறையில் தகைமைப் பேராசிரியராகச்[8] சாந்தா குரூசில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். இங்கு இவர்1984 முதல் 1988 வரை இயற்கை அறிவியல் புலத் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் சேதி நிறுவன அறக்கட்டளை வாரியத்திலும் பணியாற்றினார்.

தகைமைகள்[தொகு]

ஓகியோவின் நார்வுடில் உள்ள நார்வே உயர்நிலைப் பள்ளியில் அமைந்த டிரேக் கோளரங்கம் இவரது பெயரால் அழைக்கப்படுகிறது. இது நாசாவுடன் தொடர்புள்ள கோளரங்கம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Father of SETI". பார்க்கப்பட்ட நாள் 2016-06-28.
  2. "Lick Observatory Optical SETI: targeted search and new directions". Astrobiology 5 (5): 604–11. October 2005. doi:10.1089/ast.2005.5.604. பப்மெட்:16225433. Bibcode: 2005AsBio...5..604S. 
  3. Drake F (1999). "Space missions for SETI". Acta Astronautica 44 (2–4): 113–5. doi:10.1016/S0094-5765(99)00036-3. பப்மெட்:11542286. Bibcode: 1999AcAau..44..113D. 
  4. Drake F (April 1993). "Extraterrestrial Intelligence". Science 260 (5107): 474–475. doi:10.1126/science.260.5107.474. பப்மெட்:17830410. Bibcode: 1993Sci...260..474D. 
  5. Carl Sagan; Linda Salzman Sagan; Drake, Frank (February 1972). "A Message from Earth". Science 175 (4024): 881–884. doi:10.1126/science.175.4024.881. பப்மெட்:17781060. Bibcode: 1972Sci...175..881S. 
  6. David, Leonard (Summer 1980). "Putting Our Best Signal Forward". Cosmic Search 2 (3): 2–7. Bibcode: 1980CosSe...2....2D. http://bigear.org/CSMO/HTML/CS07/cs07p02.htm. 
  7. "SETI Institute Names New Chief Alien Life Hunter". Space.com. பார்க்கப்பட்ட நாள் February 23, 2012.
  8. University of California | Lick observatory www.ucolick.org retrieved 18:29 23.10.2011

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராங்க்_டிரேக்&oldid=3359873" இலிருந்து மீள்விக்கப்பட்டது