பிராங்குவாயிசு கோம்பெசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிராங்குவாயிசு கோம்பெசு
Françoise Combes
Francoise-Combes-2010.PNG
பிறப்பு12 ஆகத்து 1952 (1952-08-12) (அகவை 69)
மாந்த்பெல்லியர், பிரான்சு
வாழிடம்பாரீசு
தேசியம்பிரெஞ்சியர்
துறைவானியற்பியல்
பணியிடங்கள்பாரீசு வான்காணகம்
கல்வி கற்ற இடங்கள்மேனிலைப் பள்ளிப் பயிற்சி நிறுவனம் (École Normale Supérieure), பாரீசு திதரோத் பல்கலைக்கழகம்
விருதுகள்CNRS வெள்ளிப் பதக்கம்

பிராங்குவாயிசு கோம்பெசு (Françoise Combes) (பிரெஞ்சு உச்சரிப்பு: [fʁɑ̃swaz kɔ̃b] (About this soundகேட்க); பிறப்பு: 12 ஆகத்து 1952) ஒரு பாரீசு வான்காணகப் பிரெஞ்சு வானியற்பியலாளரும் பிரெஞ்சுக் கல்லூரியின் பேராசிரியரும் ஆவார். இங்கு இவர் பால்வெளிகளும் அண்டவியலும் கட்டிலுக்குத் தலைவராக 2014 இல் தேர்வு செய்யப்பட்டார்.[1]

மாண்ட்பெல்லியர் வெற்றி நகரப் பள்ளி 2017 செப்டம்பர் 15 இல் இவரது நினைவாக பிராங்குவாயிசு கோம்பெசு உயர்நிலைப் பள்ளி எனப் பெயரிடப்பட்டது.[2]

கல்வி[தொகு]

இவர் 1971 முதல் 1975 வரை மேனிலைப் பள்ளிப் பயிற்சி நிறுவனத்தில் பயின்றார். இவர் பாரீசு திதெரோத் பலகலைக்கழகத்தில் இயற்பியலில் முதுவர், முனைவர் பட்டங்களைப் பெற்றார். இவரது முனைவர் பட்ட ஆய்வுரை பால்வெளிகளின் கட்டமைப்பும் இயக்கவியலும் பற்றியதாகும்.

ஆராய்ச்சி[தொகு]

இவரது ஆராய்ச்சி அண்டவியல் சூழலில் பால்வெளிகளின் உருவாக்கமும் படிமலர்ச்சியும் ஆகும்.

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

 • 2017: மாண்ட்பெல்லியர் வெற்றி நகரப் பள்ளி இவரது நினைவாக பிராங்குவாயிசு கோம்பெசு உயர்நிலைப் பள்ளி எனப் பெயரிடப்பட்டுள்ளது.[2]
 • 2017: பிரிக்சு ஜூல்சு ஜான்சன் பரிசு, பிரெஞ்சு வானியல் கழகம்.
 • 2017: கோத்தன்பர்கு பல்கலைக்கழக இலைசு மைத்னர் பரிசு[3][4][5]
 • 2017: அமெரிக்க வானியல் ஒன்றியத் தகைமை உறுப்பினர்[6]
 • 2015: பிரெஞ்சு தகைமை ஆணை அலுவலர்[7]
 • 2013: கனடிய வானியல் கழகப் பெட்ரி பரிசு விரிவுரைத் தகைமை[8]
 • 2013: அரசு வானியல் கழகத் தகைமை ஆய்வுறுப்பினர்[9]
 • 2012: மூன்று இயற்பியலாளர்கள் பரிசு, ENS[10]
 • 2009: தேசியத் தகைமை ஆணை அலுவலர்
 • 2009: ஐரோப்பிய கல்விக்கழக உறுப்பினர்[11]
 • 2003: அரசு வானியல் கழகத் தகைமை ஆய்வுறுப்பினர், 2013[12]
 • 2009: ஐரோப்பிய வானியல் கழகத்தின் டைக்கோ பிராகி பரிசு[13]
 • 2006: பிரெஞ்சு தகைமை ஆணை நைட் பட்டம்
 • 2004: பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழக உறுப்பினர்[14]
 • 2001: சி என் ஆர் எசு (CNRS) இன் வெள்ளிப் பதக்கம்[15]
 • 1986:ஐபிஎம் ( IBM) இயற்பியல் பரிசு

நூல்தொகை[தொகு]

இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்[16] மேலும் பலநூல்களையும் எழுதியுள்ளார். பல கூட்டு முயற்சிப் பணிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார். அவர்அது ஆங்கில நூல்களில் பின்வருவன அடங்கும்:

 • "The Milky Way" (with James Lequeux), EDP Sciences, 2016, 196p (ISBN 978-2759819157)
 • "Galaxies and Cosmology (Astronomy and Astrophysics Library)" (with Patrick Boissé) (translator: M. Seymour), Springer, 2nd Ed 2004, 468p (ISBN 978-3540419273)
 • "The Cold Universe: Saas-Fee Advanced Course 32, 2002. Swiss Society for Astrophysics and Astronomy" (with Andrew W. Blain) (editor: Daniel Pfenniger), Springer, 2004, (ISBN 978-3540408383)
 • "Mysteries Of Galaxy Formation", Praxis, 2010, 224p (ISBN 978-1441908674)
 • La Voie Lactée, 2013, (EdP-Sciences), F. Combes & J. Lequeux
 • Galaxies et Cosmologie (2009), (Ellipses), F. Combes, M. Haywood, S. Collin, F. Durret, B. Guiderdoni
 • A. Aspect, R. Balian, G. Bastard, J.P. Bouchaud, B. Cabane, F. Combes, T. Encrenaz, S. Fauve, A. Fert, M. Fink, A. Georges, J.F. Joanny, D. Kaplan, D. Le Bihan, P. Léna, H. Le Treut, J-P Poirier, J. Prost et J.L. Puget, Demain la physique, (Odile Jacob, 2009)
 • Mystères de la formation des galaxies (2008), (Dunod), F. Combes
 • Galaxies et Cosmologie (1991), (Inter-Sciences, CNRS), P. Boissé, A. Mazure et A. Blanchard
 • Galaxies and Cosmology (1995), (Springer), P. Boissé, A. Mazure et A. Blanchard, (réédité en 2002)

மேற்கோள்கள்[தொகு]

 1. "Le problème de la matière noire : galaxies spirales" (fr).
 2. 2.0 2.1 "La cité scolaire de la réussite rebaptisée cité scolaire Françoise Combes" (September 2017)..
 3. "Ceremony and lecture – Gothenburg Lise Meitner Award 2017 | Chalmers" (en-us) (2017-08-24).
 4. "An extragalactic award to the star of astrophysics" (en-us).
 5. Chalmers Physics (2017-10-06), Gothenburg Lise Meitner Award Lecture 2017 - Françoise Combes, 2018-05-16 அன்று பார்க்கப்பட்டது
 6. "Honorary Members | American Astronomical Society" (en).
 7. "Présidence de la République ORDRE NATIONAL DE LA LÉGION D’HONNEUR" (french) (2015-04-05).
 8. "R.M. Petrie Prize Lecture - CASCA" (en-US).
 9. Smith, Keith. "Winners of the 2013 awards, medals and prizes - full details" (en-gb).
 10. [1]Prix des Trois Physiciens பரணிடப்பட்டது 2013-12-15 at the வந்தவழி இயந்திரம்
 11. Academia Europaea
 12. Smith, Keith. "Winners of the 2013 awards, medals and prizes - full details" (en-gb).
 13. Switzerland, Marc Türler and Mathias Beck, ISDC, Observatory of the University of Geneva,. "Tycho Brahe Prize".
 14. [2]Her page in Académie பரணிடப்பட்டது 2015-07-02 at the வந்தவழி இயந்திரம்
 15. CNRS. "CNRS - CNRS silver medals for 2001" (fr).
 16. "Francoise Combes - Google Scholar Citations".

வெளி இணைப்புகள்[தொகு]