பிராங்கிளின் மணிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Franklin bells
சார்ச் ஆடம்சு எழுதிய Lectures on Natural and Experimental Philosophy புத்தகத்தில் உள்ள பிராங்ளின் மணிகள் ஒன்றின் எடுத்துக்காட்டு

பிராங்கிளின் மணிகள் (Franklin bells) அல்லது கார்டன் மணிகள் (Gordon’s Bells) மற்றும் மின்னல் மணி எனவும் அழைக்கப்படுகிறது.) ஆரம்ப காலங்களில் மின்னூட்டத்தை செயல் விளக்கம் செய்துகாட்ட லேய்டின் கொள்கலனுடன் இணைத்து பயன்படுத்தப்பட்டது. பிராங்ளின் மணிகள் மின்னூட்டத்தை செயல் விளக்கம் செய்துகாட்டவே பயன்பட்டதேயன்றி, எந்தவித ஆராய்ச்சிக்கும் உதவவில்லை. இக்கருவி மின்னாற்றலைத் தொடர்ந்து இயக்க ஆற்றலாக மாற்ற உதவியது. இரண்டு எதிரெதிர் மின்னூட்டம் பெற்ற மணிகளுக்கிடையே மணியின் நா (clapper) ஒன்று முன்னும் பின்னும் அசைந்து ஒலி எழுப்புகிறது.

வரலாறு[தொகு]

மின்னியல் தொடர்பான தனது ஆராய்ச்சிகளுக்கு பெஞ்சமின் பிராங்கிளின் இக் கருவியைப் முதலில் பயன்படுத்தியதால், பின்னர் அவர் பெயரால் கருவியும் அழைக்கப்பட்டது. செர்மனி நாட்டைச் சேர்ந்த ஆண்ரூ கார்டன் (Andrew Gordon) என்ற தத்துவவியல் பேராசிரியர் இக் கருவியை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. 1742 ல் இவர் மின்மணிகளை உருவாக்கியதைப் பற்றி மின்னியல் தொடர்பான பாடப் புத்தகங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. கார்டனின் வடிவமைப்பைத் தனது இடிதாங்கியுடன் பிராங்கிளின் இணைத்தார். இது பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

In September 1752, I erected an Iron Rod to draw the Lightning down into my House, in order to make some Experiments on it, with two Bells to give Notice when the Rod should be electrified.

(தமிழாக்கம்: செப்டம்பர் 1752 ல், மின்னலை ஈர்த்து சில சோதனைகள் செய்ய ஒரு இரும்பு கம்பியை எனது வீட்டில் பொருத்தினேன். அதனுடன் பொருத்தப்பட்ட மணிகள், மின்னூட்டம் பெறும் போது ஒலிக்கச் செய்தன.)

வடிவமைப்பு மற்றும் இயங்கும் விதம்[தொகு]

ஒரு உலோகத் தாங்கியின் குறுக்குச்சட்டத்தில், மூன்று மணிகள் இணைக்கப்பட்டுள்ளது. மின்கடத்தும் சங்கிலியுடன் முதல் மற்றும் மூன்றாம் மணிகள் இணைக்கப்பட்டுள்ளன. மின்காப்புப் பொருளின் உதவியுடன் நடுவிலுள்ள மணி தொங்கவிடப்பட்டுள்ளது. இந்த மணிகளுக்கு இடையே இரண்டு மணி நாக்கள் தொங்கவிடப்பட்டுள்ளது. இவை ஊசல் போல் மின்காப்புப் பொருளினால் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். நடுவிலுள்ள மணியின் முனையில் ஒரு சிறிய சங்கிலி இணைக்கப்பட்டுள்ளது.

லேய்டின் கொள்கலனின் உட்பரப்புடன் நடுவிலுள்ள மணியின் சங்கிலி இணைக்கப்பட்டுள்ளது. அதன் வெளிப்பரப்பு உலோகத் தாங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. உட்பரப்பில் உருவாகும் மின்னூட்டங்கள், நடுவிலுள்ள மணிக்கும், வெளிப்பரப்பில் உருவாகும் மின்னூட்டங்கள், மற்ற இரு மணிக்களுக்கும் பாய்கின்றன. ஒரு மணியால் ஈர்க்கப்படும் மணியின் நா, அதன் மின்னூட்டத்தைப் பெற்று விலகலடைகிறது. அலைவினால் அடுத்த மணியை அடைகிறது. பின்னர் அதே செயல் தொடருகிறது. இச் செயல், லேய்டின் கொள்கலனிலுள்ள மின்னூட்டங்கள் மின்னிறக்கம் அடையும் வரை நடைபெறுகிறது. பின்னர் மணி ஒலிப்பது நின்று விடுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராங்கிளின்_மணிகள்&oldid=3455670" இலிருந்து மீள்விக்கப்பட்டது