பிராக்மோசிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிராக்மோசிசு (Phragmosis) என்பது உயிரினங்கள் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தன்னுடலைப் பயன்படுத்தி வளை போன்ற தடையை உருவாக்கும் முறை ஆகும். எடுத்துக்காட்டாக கருப்பு சுருக்கங்களை உடைய எட்டுக்கால் பூச்சி தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அடிவயிற்றுப் பகுதியில் கருப்பு வளையங்களைக் கொண்டுள்ளது. இந்த பகுதி மிகவும் கடினமானதாகும். மேலும் ஒரு எடுத்துக்காட்டாக ஓடுடைய சைக்கிளோகோசுமியா இனம் ஒரு எறும்பு இனத்தைச் சார்ந்ததாகும். இதனுடைய பெரிய, தட்டுவடிவத் தலையைப் பயன்படுத்தி வளைக்குள் நுழைபவர்களைத் தடுத்து நிறுத்துகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராக்மோசிசு&oldid=2804413" இருந்து மீள்விக்கப்பட்டது