பிரவீன் ராய் மகால்
பிரவீன் ராய் மகால் | |
---|---|
அமைவிடம் | ஓர்ச்சா |
கட்டப்பட்டது | 16ஆம் நூற்றாண்டு |
க்காக கட்டப்பட்டது | பிரவீன் ராய் என்பவருக்காக கட்டட்டப்பட்டது |
பிரவீன் ராய் மகால் (Pravin Rai Mahal) என்பது 1618 இல் ஓர்ச்சாவின் இளவரசர் (பின்னர் மன்னர்) இந்திரஜித் சிங்கால் கட்டப்பட்ட மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு அரண்மனை ஆகும். கவிஞரும் இசைக்கலைஞரும் "ஓர்ச்சாவின் நைட்டிங்கேல் " என்றும் அழைக்கப்படும் பிரவின் ராய் என்ற பெண்ணின் மீது கொண்ட காதலால் இது கட்டப்பட்டது. இது ஒரு மாநில பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும். ஆனந்த் மண்டல் பாக் மற்றும் ராய் பிரவீன் மணிகா பவன் எனவும் இது அழைக்கப்படுகிறது.[1] இது 'டோப் கானா' என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது பிற்காலத்தில் ஓர்ச்சா கோட்டை வளாகம் கண்காணிப்புச் சாவடியாகப் பயன்படுத்தப்பட்டது. [2] [3]
கட்டிடக்கலை
[தொகு]அரண்மனை மூன்று மாடிகளைக் கொண்டுள்ளது. இரண்டாவது மாடியில் பல ஓவியங்கள் மற்றும் பிரவீன் ராயின் பல்வேறு மனநிலைகளின் சித்தரிப்புகளுடன் ஒரு மைய மண்டபம் உள்ளது. அரண்மனையை ஒட்டி இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட ஒரு தோட்டமும் உள்ளது. அரண்மனை ஒரு பெரிய மாளிகையைக் கொண்டுள்ளது. மேலும் அது பெரிய சாரளரங்களுடன் சிறிய அறைகளைக் கொண்டுள்ளது. நல்ல வெளிச்சம் மற்றும் காற்று சுழற்சியும் இங்குள்ளது. [4]
அரண்மனையின் கோடைக்காலத்தில் பயன்படுத்தப்படும் ஒரு அறையில் அதன் காற்றை வெளிப்புற வெப்பநிலையை விட 10 டிகிரிக்கு மேல் குளிர்விக்கிறது. [5]
பிரவின் ராயின் புராணக்கதை
[தொகு]பிரவீன் ராய் ஓர்ச்சா மாநிலத்தின் மன்னர் இந்திரஜித் சிங்கின் விருப்பமான காதலியாக இருந்தார். [4] பிரவீன் ராயின் அழகு மற்றும் கவிதையைப் பற்றி கேள்விப்பட்ட முகலாயப் பேரரசர் அக்பர் அவரை தனது அரசவைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.
பிரவீன் ராய் அக்பரிடம் தான் ஏற்கனவே இந்திரஜித்தை காதலிப்பதாக தெரிவித்தார். இதனால் ஈர்க்கப்பட்ட அக்பர், மரியாதையுடன் அவளை திருப்பி அனுப்பினார். சுதீர் மௌரியாவின் இந்தி புதினமான இந்திரப்ரியாவில் ராய் பிரவீன் மையக் கதாபாத்திரமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். [1] [6] [7] [8] [9]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rai Praveen Mahal Orchha Tikamgarh Madhya Pradesh History & Architecture". பார்க்கப்பட்ட நாள் 2019-10-11.
- ↑ "The Best Things to See and Do in Orchha, India". பார்க்கப்பட்ட நாள் 2019-10-11.
- ↑ "Orchha Fort Complex". பார்க்கப்பட்ட நாள் 2019-10-11.
- ↑ 4.0 4.1 "Rai Praveen Mahal Orchha Tikamgarh Madhya Pradesh History & Architecture". பார்க்கப்பட்ட நாள் 2019-10-11."Rai Praveen Mahal Orchha Tikamgarh Madhya Pradesh History & Architecture". www.astrolika.com. Retrieved 11 October 2019.
- ↑ Ford, Brian (September 2001). "Passive downdraught evaporative cooling: principles and practice". Architectural Research Quarterly 5 (3): 271–280. doi:10.1017/S1359135501001312. https://www.cambridge.org/core/services/aop-cambridge-core/content/view/6317345C8FB8B405AADE7BA99CD62E8B/S1359135501001312a.pdf/passive_downdraught_evaporative_cooling_principles_and_practice.pdf.
- ↑ "Rai Praveen Mahal". பார்க்கப்பட்ட நாள் 2019-10-11.
- ↑ "Rai Praveen Mahal Orchha". பார்க்கப்பட்ட நாள் 2019-10-11.
- ↑ "इस महल में अधूरी रह गई बाजीराव-मस्तानी की तरह एक और प्रेम कहानी". பார்க்கப்பட்ட நாள் 2019-10-11.
- ↑ "The dead prince who is still alive". https://www.thehindu.com/news/cities/chennai/chen-columns/the-dead-prince-who-is-still-alive/article2720550.ece.