பிரவீண் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரவீண்
Praveen Comedian.jpg
பிறப்புபெல்லம்கொண்டா பிரவீண்
ஜனவரி 8, 1984
அந்தர்வேதி, கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
தேசியம் இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2008–தற்போது வரை

பிரவீன் (Praveen) தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் நடிகராவார். பிரேம கதா சித்ரம், சம்போ சிவன் சம்போ, ராம ராம கிருஷ்ண கிருஷ்ணா, மிரப்பகாயி, கார்த்திகேயா , பலே பலே மகாடிவோய் போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானவர்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அந்தர்வேதி பகுதியைச் சேர்ந்த பிரவீண் பொருளியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

தொழில்[தொகு]

இயக்குனர் ஸ்ரீகாந்த் அடலா இயக்கிய தெலுங்குத் திரைப்படமான கொத்த பங்காரு லோகம் (2008) என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். இப்படத்தில் வருண் சந்தேஷ், சுவேதா பாசு பிரசாத், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ் போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படம் இரண்டு நந்தி விருதுகளை வென்றது .

பிரவீண், ரவுடி பெலோ, [1] [2] [3] அல்லுடு சீனு, மொசகல்லகு மொசகாடு,[4] [5] [6] ஊப்ரி (தமிழில் தோழா ) போன்ற படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரவீண்_(நடிகர்)&oldid=3249951" இருந்து மீள்விக்கப்பட்டது