பிரவாகினி (செய்தி மடல்)
Appearance
பிரவாகினி இலங்கை கொழும்பு பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தால் 1993ம் ஆண்டு முதல் வெளியிட்டப்படும் ஒரு மாதாந்த செய்தி மடலாகும்.
நோக்கம்
[தொகு]இலங்கையில் பெண்களின் நிலை பற்றிய பல்வேறுவிதமான அம்சங்களையும் நன்கு கற்று ஆய்வு செய்வதுடன், பால் வேறுபாடு காரணமாக ஏற்படும் விளைவுகள் பற்றி நாட்டு மக்களின் உணர்வுகளைத் தூண்டுதலும், பெண் விடுதலை சம்பந்தமான விடயங்களைப் பரப்புவதும், விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதும் இச்செய்தியேட்டின் நோக்கமாகும்
உள்ளடக்கம்
[தொகு]மேற்குறிப்பிட்ட நோக்கத்திற்கமைய பெண்கள் விழிப்புணர்வு தொடர்பான பல்வேறுபட்ட தகவல்கள் இச்செய்தி மடலில் இடம்பெற்றிருந்தது.