பிரய்வால் சாத்திரி
பிரய்வால் சாத்திரி Prajval Shastri | |
---|---|
பிறப்பு | மங்களூர் |
வாழிடம் | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | வானியற்பியல் |
பணியிடங்கள் | இந்திய வானியற்பியல் கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | இந்திய தொழில்நுட்பக் கழகம், மும்பை., டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் |
ஆய்வு நெறியாளர் | விஜய் கபாகி |
அறியப்படுவது | புறப் பால்வெளி வானியல், முனைவுறு பால்வெளிக்கரு |
பிரய்வால் சாத்திரி (Prajval Shastri) இந்திய வானியற்பியல் கழகத்தில் வானியற்பியலாளராகப் பணிபுரிகிறார், இவர் மீப்பொருண்மை இயக்கும் முனைவுறு பால்வெளிக்கரு நிகழ்வில் ஆய்வு செய்கிறார். இதற்கு இவர் கதிரியல் முதல் X-கதிர் வரை பல மின்காந்த அலைநீளங்களின் நோக்கீடுகளைப் பயன்படுத்துகிறார்.wavelength observations ranging from radio to X-ray wavelengths.[1]
இளமையும் கல்வியும்[தொகு]
சாத்திரி மங்களூரில் பிறந்து வளர்ந்தார். பள்ளிபடிப்பு முடித்ததும் மைசூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மங்களூர் புனித அகனேசு கல்லூரியில் இயர்பியல் சார்ந்த அறிவியல் புலங்களில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். இவர் பிறகு இயற்பியல் மூதறிவியல் பட்டம் பெற மும்பை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் சேர்ந்தார். இவர் முனைவர் பட்டத்தை டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் 1989 இல் முடித்தார். இவரது முனைவர் பட்ட ஆய்வுரை "முனைவுறு பால்வெளிக்கருவில் சார்பியல் ஒளிக்கற்றை (Relativistic Beaming in Active Galactic Nuclei)" என்பதாகும். இவரது வழிகாட்டி விஜய் கபாகி ஆவார்.[2]
நடப்பு ஆராய்ச்சி[தொகு]
இவரது நடப்பு ஆராய்ச்சி சிறப்புப் புலமாக முனைவுறு பால்வெளிக்கரு (முபாக) நிகழ்வு அமைகிறது. இவரது ஆராய்ச்சிப் புலங்கள் பின்வருமாறு:
- முபாக உமிழ்வுக் கோட்டுப் பகுதிகள் (தொகுபுலக் கதிரியல் படப்பிடிப்பு, WiFeS, சைடிங் சுப்பிரிங்)
- முபாக வில் இருந்தான X-கதிர் உமிழ்வு (XMM-Newton, சுசாகு)
- கதிரியலாக அமைதியான முபாக ([[மீநீள அடிக்கோட்டு குறுக்கீட்டளவி, GMRT)
- முபாகவில் இருந்தான வளிம வெளியேற்றம் ( புற ஊதாக் கதிருக்கு அப்பாலான கதிர்நிரல் தேட்டக்கலம்)
- பிளசார் மாறுமை: WEBT கண்காணிப்புப் பரப்புரைகள் (வைணு பாப்பு, ஆன்லே தொலைநோக்கிகள்)[2]
தொழில்முறை உறுப்பாண்மைகள்[தொகு]
இவர் பின்வரும் அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்:
- பன்னாட்டு வானியல் ஒன்றியம்
- ஒருங்கிணைப்புக் குழு, வான்புள்ளியியல், வான்தகவலியல் பணிக்குழு, பன்னாட்டு வானியல் ஒன்றியம்
- ஒருங்கிணைப்புக் குழு, ஆணையம் 40 (கதிர்வானியல்), பன்னாட்டு வானியல் ஒன்றியம்
- இந்திய வானியல் கழகம்
- இந்திய இயற்பியல் கழகம் [2]
வெளியீடுகள்[தொகு]
இவரது வெளியீடுகளின் முழுப் பட்டியல் இங்கே பரணிடப்பட்டது 2014-04-16 at the வந்தவழி இயந்திரம். இவரது சில ஆய்வுக் கட்டுரைகள் பின்வருமாறு:
- OVI Asymmetry and an Accelerated Outflow in an Obscured Seyfert: FUSE and HST STIS Spectroscopy of Markarian 533(2006, Astrophys. J. 646, 76; astro-ph/0603842)
- When Less Is More: Are Radio Galaxies below the Fanaroff-Riley Break More Polarized on Parsec Scales?(2005, Astrophys. J. Lett, 632, L69; astro-ph/0509559)
- Jets in Seyfert galaxies பரணிடப்பட்டது 2016-11-08 at the வந்தவழி இயந்திரம் (2003, in Active Galactic Nuclei: from Central Engine to Host Galaxy, eds.: Collin, Combes & Shlosman)
- Seyferts & their Radio Morphology பரணிடப்பட்டது 2016-11-05 at the வந்தவழி இயந்திரம் (2001, Astron. Astrophys. Trans., 20, 281)
- Quasar X-ray Spectra Revisited (1993, Astrophys. J., 410, 29)
- A Relativistically Beamed X-ray Component in Quasars? (1991, Mon. Not. R. astr. Soc. 249, 640)[2]
செய்திகளில்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "IAS - Women in Science". 14 April 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "IIAP - Profile". 16 ஏப்ரல் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 April 2014 அன்று பார்க்கப்பட்டது.