பிரம்மராஜன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பிரம்மராஜன் தமிழின் நவீனக் கவிஞர்களுள் ஒருவர். மீட்சி என்னும் இலக்கிய இதழை நடத்தியவர். பல கவிதைத் தொகுதிகள் வந்துள்ளன். அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுப்பைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அரசு கலைக்கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். 1953ஆம் ஆண்டு பிறந்த பிரம்மராஜனின் இயற்பெயர் ஆ. ராஜாராம். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தர்மபுரி அரசுக் கல்லூரியில் ஆங்கிலத்துறைத் தலைவராக இருந்தவர். கவிஞர். மொழிபெயர்ப்பாளர். இதழாளர். கட்டுரையாளர் மற்றும் விமர்சகர். இதுவரை 5 கவிதைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.