பிரம்மன் (திரைப்படம்)
பிரம்மன் (Bramman) | |
---|---|
இயக்கம் | சாக்ரெட்ஸ் |
தயாரிப்பு | கே. மஞ்சு அண்டோ ஜோசப் |
இசை | தேவி ஸ்ரீ பிரசாத் |
நடிப்பு | சசி குமார் லாவண்யா திரிபாதி சந்தானம் நவீன் குமார் |
ஒளிப்பதிவு | ஜோமோன் டி. ஜான் |
கலையகம் | K மஞ்சு சினிமாஸ் |
வெளியீடு | 21 பிப்ரவரி 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பிரம்மன் Bramman (2014) ஒரு அதிரடி மற்றும் காதல் தமிழ்த் திரைப்படம். சசி குமார், சந்தானம், தன்சிகா, லவண்யா நடித்து, கமலஹாசன் உதவியாளரான சாக்ரெட்டீசு இயக்கி வெளி வந்த திரைப்படம்[1].இப்படத்தின் தயாரிப்பாளர் லக்சுமி மஞ்சு.
நடிகர்கள் மற்றும் குழுக்கள்
[தொகு]- சசி குமார் (சிவா)
- லாவண்யா திரிபாதி (காயத்திரி)
- நவீன் சந்திரா (குமார்)
- சந்தானம்
- தேவி ஸ்ரீ பிரசாத்
- சூரி
- மாளவிகா மேனன்
- வனிதா
தயாரிப்பு
[தொகு]உத்தரகண்ட் மாநில முன்னாள் அழகி லாவண்யா திரிபாதி முன்னணிக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் "சந்தானம் இப்படத்தில் நடிக்கிறார்; இப்படம் சசிகுமார் நடித்த முந்தைய படத்தை போன்ற ஒரு தீவிர படமாக இருக்க முடியாது" என்று கூறினார். சூரி இப்படத்தில் ஒரு பகுதியாக நடிக்கிறார், முன்பு இவர் சந்தானத்திற்குப் பதிலாக நடிப்பார் என தவறாகச் செய்திகள் வெளியாகின. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கையெழுத்திட்டார். படப்பிடிப்பு பெரும்பாலும் கோயம்புத்தூரில் நடந்தது. இப்படப்பிடிப்பு ஏப்ரல் 2013 இல் பாரதியார் பல்கலைக்கழகத்திலும் நடைபெற்றது. அக்டோபர் மாதம், இயக்குநர் சாக்ரடீஸ், எம் சசிகுமார், லாவண்யா, நடன ராஜூ சுந்தரம் கொண்ட அணி ஒரு 40 உறுப்பினர் குழுவினர் இரு பாடல்களைப் படம் பிடிப்பதற்காக இத்தாலி, வெனிஸ் மற்றும் சுவிச்சர்லாந்து சென்றார். இந்தியாவுக்கு வெளியே எடுக்கும் முதல் சசிகுமாரின் திரைப்படம் ஆகும்.
கதை சுருக்கம்
[தொகு]திரைப்படத்தின் மீது தீராத காதல் கொண்ட சிவா குத்தகைக்கு கிடைத்த ஒரு திரையரங்கை திருமண மண்டபமாகவோ, வணிக வளாகமாகவோ உருமாறிவிடாமல் பார்த்துக்கொள்கிறார். அத்திரையரங்கில் பழைய படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டதால் ரூ ஐந்து இலட்சத்துக்கு கடனாளியாகிறார். தன் பழைய நண்பன் குமார் பெரிய இயக்குநராக இருப்பது அறிந்து உதவி கேட்க சென்னை வருகிறார். அங்கு சிவாவிற்கு எதிர்பாராத நல்லூழ் மூலம் பணம் கிடைக்கிறது. நண்பனை சந்திக்கிறார், ஆனால் குமாருக்கு சிவாவை தெரியவில்லை. அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் சிவா பெரும் இழப்புக்கு ஆளாகிறார். சிவாவின் நண்பனுக்கு உண்மை தெரியவரும்போது சிவா அதை எப்படி எதிர்கொள்கிறார்? என்பதை இயக்குநர் சுவையாக சொல்லியுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bramman (2014)Tamil Movie Info Reviews". One India. 2013-11-18. பார்க்கப்பட்ட நாள் 2014-01-15.[தொடர்பிழந்த இணைப்பு]