பிரம்மக் கமலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரம்மக் கமலம்
பிரம்ம கமலம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Core eudicots
வரிசை: Caryophyllales
குடும்பம்: கள்ளி
பேரினம்: Epiphyllum
இனம்: E. oxypetalum
இருசொற் பெயரீடு
Epiphyllum oxypetalum
(DC.) Haworth

பிரம்ம கமலம் அல்லது நிஷகாந்தி (Epiphyllum oxypetalum) என்பது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இரவில் மலரக்கூடிய அபூர்வ வகை மலர் பூக்க்க்கூடிய தாவரமாகும். இது கள்ளி இனத்தைச் சேர்ந்த செடியாகும்.[1] இதன் வெண்ணிறம் கொண்ட மலரானது, மூன்றுவிதமான இதழ்களைக் கொண்டு அழகாக இருக்கும். இந்த மலரானது பொதுவாக சூலை மாதத்தில் இரவில் மலர்ந்து சில மனிநேரங்களில் குவிந்துவிடும்.

இத்தாவரம் தென் அமெரிக்காவின், மெக்சிக்கோ காடுகளைக் பிறப்பிடமாக கொண்டது. அங்கிருந்து இது உலகமெங்கும் பரவியுள்ளது. இது பரவிய இடங்களில் இதைச்சுற்றி உள்ளூர் தொன்மங்களும் முளைத்துள்ளன. இலங்கையில் இது சொர்க்கத்தின் பூ என்று அறியப்படுகிறது. புத்தருக்கு அஞ்சலி செலுத்த விண்ணுலகினர் மண்ணுலகில் பூவாக வருவதாக அவர்கள் கருதுகின்றனர். ஐரோப்பாவிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் பெத்லகேமின் நட்சத்திரம் என்று இது அறியப்படுகிறது. ஏசு பிறந்தபோது அவரைக் காண வந்த மூன்று அரசர்களுக்கு வழிகாட்டிய நட்சத்திரங்களின் குறியீடாக இதை அவர்கள் பார்க்கின்றனர்.[2]

இது தமிழ்நாட்டிலும் பரவலாக வளர்கிறது. இது கள்ளி இனத்தைச் சேர்ந்ததால் இதன் தண்டை வெட்டி வைத்தாலே இது வளரக்கூடிய தன்மை கொண்ட செடி ஆகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மக்_கமலம்&oldid=3577810" இருந்து மீள்விக்கப்பட்டது