பிரமோத் பகத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரமோத் பகத்
2020-இல் பிரமோத் பகத்
நேர்முக விவரம்
நாடு இந்தியா
பிறப்பு4 சூன் 1988 (1988-06-04) (அகவை 35)
அட்டாபிரா, பர்கஃட் மாவட்டம், ஒடிசா
வசிக்கும் இடம்புவனேசுவரம், ஒடிசா
விளையாடிய ஆண்டுகள்2006–தற்போது வரை
கரம்இடது
பயிற்சியாளர்சிபா பிரசாத் தாஸ்
இறகுப்பந்தாட்டம் ஆடவர் ஒற்றையர் SL3 பிரிவு
பெரும தரவரிசையிடம்1
தற்போதைய தரவரிசை1

பிரமோத் பகத் (Pramod Bhagat) (பிறப்பு:4 சூன் 1988) என்பவர் இந்திய மாற்றுத்திறனாளி இறகுப்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேசுவரைச் சார்ந்தவர் ஆவார். இவரது நான்காம் வயதில் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டார். 2002 ஆம் ஆண்டு மென்பந்தாட்டம் விளையாடத் தொடங்கிய இவர் 2006 ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில் பங்கு பெறத்தொடங்கினார்.[1] இவர் 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இறகுப்பந்தாட்ட வாகையாளர் போட்டியின் இறுதியாட்டத்தில் இங்கிலாந்து நாட்டின் டேனியல் பெதெல் என்பவரை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்தப் போட்டியின் கடைசி நாளுக்கு முந்தைய நாளில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இரட்டையர் பிரிவில் மனோஜ் சர்கார் என்பவருடன் இணைந்து ஆடி தங்கம் வென்றுள்ளார். [2]

இணை ஒலிம்பிக் போட்டிகளில்[தொகு]

2020 டோக்கியோ பார-ஒலிம்பிக் விளையாட்டில் 4 செப்டம்பர் 2021 அன்று இறகுப் பந்தாட்டப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் SL3 பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "PRAMOD BHAGAT". IndusInd for Sports. 28 ஆகத்து 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Para badminton world championships: Pramod Bhagat wins two golds as India finishes with 12 medals". Sportstar. 25 August 2019. 28 ஆகத்து 2019 அன்று பார்க்கப்பட்டது.
  3. தங்கம் வென்றார் பிரமோத்: பாராலிம்பிக் பாட்மின்டனில் புதிய சாதனை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமோத்_பகத்&oldid=3273462" இருந்து மீள்விக்கப்பட்டது