பிரமிளா ஐயப்பா
2008 ஒலிம்பிக்கு போட்டியில் பிரமிளா | ||||||||||||||||||||
| தனிநபர் தகவல் | ||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பிறந்த பெயர் | பிரமிளா கணபதி | |||||||||||||||||||
| முழு பெயர் | பிரமிளா குதந்தா ஐயப்பா | |||||||||||||||||||
| தேசியம் | இந்தியர் | |||||||||||||||||||
| பிறப்பு | 8 மே 1977 குடகு, கருநாடகம், இந்தியா | |||||||||||||||||||
| உயரம் | 1.67 m (5 அடி 5+1⁄2 அங்) | |||||||||||||||||||
| எடை | 57 kg (126 lb) | |||||||||||||||||||
| விளையாட்டு | ||||||||||||||||||||
| நாடு | இந்தியா | |||||||||||||||||||
| விளையாட்டு | தடகளம் | |||||||||||||||||||
| நிகழ்வு(கள்) | எழுவகை தடகளம் | |||||||||||||||||||
| கழகம் | இந்திய இரயில்வே | |||||||||||||||||||
| சாதனைகளும் விருதுகளும் | ||||||||||||||||||||
| தனிப்பட்ட சாதனை(கள்) | எழுவகைத்தடகளம்: 6105 (சென்னை 2000) | |||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||||||||

பிரமிளா ஐயப்பா (Pramila Aiyappa) இந்தியாவைச் சேர்ந்த எப்டத்லான் என அழைக்கப்படும் எழுவகைத்தடகள விளையாட்டு வீராங்கனையாவார்.[1] 1977ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 8ஆம் தேதியன்று கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் இவர் பிறந்தார்.[2] 2000ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமானார். அங்கு இவர் பெண்கள் எழுவகைத்தடகளப் போட்டியில் 5,548 புள்ளிகளுடன் 24ஆவது இடத்தைப் பிடித்தார். பிரமிளா குதந்தா ஐயப்பா, பிரமிளா கணபதி என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார்.
2008 ஆம் ஆண்டு சீனாவின் பெய்சிங் நகரத்தில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கு போட்டியில் தனது எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பெண்கள் எழுவகைத்தடகளப் போட்டியில் சக தடகள வீரர்களான சோபா இயாவூர் மற்றும் சுசுமிதா சிங்கா ராய் ஆகியோருடன் பிரமிளா ஐயப்பா இரண்டாவது முறையாகப் போட்டியிட்டார். இந்தப் போட்டியில் பங்கேற்ற 43 எழுவகைத்தடகள வீரர்களில், மொத்தம் 5,771 புள்ளிகளுடன் இவர் ஆரம்பத்தில் 28ஆவது இடத்தைப் பிடித்தார். ஆனால் உக்ரைனின் இலியுட்மிலா பிளான்சுகா மெத்தில்டெசுடோசுடிரோனுக்கு நேர்மறை சோதனை செய்த பிறகு அவரது வெள்ளிப் பதக்கம் பறிக்கப்பட்டபோது, இவர் ஓர் உயர்ந்த இடத்திற்கு உயர்த்தப்பட்டார்.[3][4]
2010 ஆம் ஆண்டு இந்தியாவின் புது தில்லியில் நடந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பிரமிளா ஐயப்பா போட்டியை நடத்தும் நாடான இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இப்போட்டியில் மொத்தம் 5,330 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pramila Gudanda". Sports-Reference.com. Sports Reference LLC. Retrieved 10 December 2012.
- ↑ "GG Pramila: Kodagu's daughter is now Jharkhand's pride". 22 July 2008 இம் மூலத்தில் இருந்து 11 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131211002221/http://www.kodaguconnect.com/?p=372.
- ↑ "Blonska stripped of silver medal". BBC Sport. 22 August 2008. http://news.bbc.co.uk/sport1/hi/olympics/athletics/7571867.stm.
- ↑ "Women's Heptathlon". 2008.nbcolympics.com. NBC Olympics. Archived from the original on 30 July 2012. Retrieved 10 December 2012.
- ↑ "Harminder gives India 2nd athletics medal, others disappoint". New Delhi Television Ltd. 9 October 2010. https://www.ndtv.com/commonwealth-games/harminder-gives-india-2nd-athletics-medal-others-disappoint-435138.
