பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் உலக அளவில் இயங்கும் இந்தியாவின் முதல்[மேற்கோள் தேவை] பன்னாட்டுப் பொழுதுபோக்கு நிறுவனம் ஆகும். உலக அளவில் பொழுதுபோக்கில் புதுமைகளையும், புரட்சிகளையும் படைப்பதே இந்நிறுவனத்தின் லட்சியம் என இந்நிறுவனம் கூறுகிறது.

எண்மிய சினிமா (Digital Cinema) என்ற நவீன தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் பிரமிட் நிறுவனத்தார்[மேற்கோள் தேவை]. அக்டோபர் 2005ல் 864 இருக்கைகள் கொண்ட ஒரே ஒரு திரையரங்குடன் இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. ஜூன் 2007ல் 29 மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் உட்பட 325 திரையரங்குகளை நிர்வகிக்கும் அளவு வளர்ந்திருக்கிறது.

இந்தியாவின் முதல் மற்றும் முன்னணி தொடர் வலையமைப்பிலான திரையரங்க நிறுவனம் என கருதப்படுகிறது[மேற்கோள் தேவை]. தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஆந்திரப் பிரதேசத்திலும் கர்நாடகாவிலும் தொடர் திரையரங்க வலையமைப்பு இந்நிறுவனத்துக்கு உண்டு. தொடர் திரையரங்கு திட்டத்தில் உலகளவில் கால்பதிக்கும் முகமாக மலேசியாவில் 53 திரையரங்குகளை இந்நிறுவனம் நிர்வகிக்கிறது. Asian Integrated Industries Sdn Bhd நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் இத்திட்டத்தில் பன்மொழிப்படங்களை பல்வேறு ஊடகங்கள் மூலம் விநியோகம் செய்கிறார்கள்.

திரையுலக முன்னேற்றத்தினை, குறிப்பாக தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களை வளரவிடாமல் தடுத்துக் கொண்டிருப்பதாக இந்நிறுவனம் உள்ளிட்ட சில தரப்பினர் கருதும் திருட்டுவட்டுக் கலாசாரத்தினை எண்மியத் தொழில்நுட்பத்தில் செய்மதி மூலம் திரைப்படங்கள் திரையிடப்படும் திட்டம் மூலம் ஒழிக்கும் முயற்சியில் இந்நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது.

திருமணத் தகவல் நிலையமான கல்யாண மாலை எனும் அமைப்புடன் இணைந்து ஜாதகப்பதிவு, ஜாதகப்பரிமாற்றம், மணமக்கள் அறிமுகம், திருமண ஏற்பாடு போன்ற சேவைகளையும் பிரமிட் நிறுவனத்தார் நடத்தி வருகிறார்கள்.

வெளி இணைப்புக்கள்[தொகு]