பிரமிடு வடிவ மலை (சியரீசு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரமிடு வடிவ மலை
"Pyramid-shaped mountain" (காரணப்பெயர்)
PIA20348 crop - Ceres' Ahuna Mons top view.jpg
டோன் விண்கலம் சியரீசை நெருங்கி எடுத்த புகைப்படம்.
அமைவிடம்சியரீசு
ஆள்கூறுகள்11°S 316°E / 11°S 316°E / -11; 316ஆள்கூறுகள்: 11°S 316°E / 11°S 316°E / -11; 316
உச்சி6 கி.மீ (4 மைல் அல்லது 20,000 அடி) உயரம்
கண்டுபிடித்தவர்டோன் விண்கலக் குழு
2015

பிரமிடு வடிவ மலை (pyramid-shaped mountain) அல்லது உயரமான கூம்பு மலை ("tall, conical mountain) என்பது[1]) சியரீசு (குறுங்கோள்) மீதுள்ள வெளிப்பக்கமாகப் புடைத்துள்ள வழவழப்பான தரைப்பகுதியைக் கொண்டுள்ள மிகப்பெரிய பெயரிடப்படாத மலையாகும். இதனுடைய இயற்கைத் தோற்றம் தொடர்பான செய்திகள் அறியப்படவில்லை. விண்கற்களின் தாக்கத்தால் இது தோற்றம் பெற்றிருக்கலாம் என்பதற்கான அடையாளங்களும் ஏதுமில்லை. சியரீசின் மீதுள்ள மலைகளில் இதுமட்டுமே இவ்வாறான மலையாகக் காணப்படுகிறது. மேலிருந்து கீழாக பிரகாசமான இழை வரிகள் சியரீசின் சரிவுகளில் காணப்படுகிறது.

2015 ஆம் ஆண்டில் டோன் விண்கலம் சியரீசை நெருங்கி எடுத்த புகைப்படங்களில் இருந்து இந்த பிரமிடு வடிவ மலை கண்டறியப்பட்டது. இம்மலை 6 கிலோ மீட்டர் உயரமும் (20000 அடிகள் அல்லது 4 மைல்) 15 கிலோ மீட்டர் அடிப்பகுதியும் கொண்ட மலையாக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

படக்காட்சியகம்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]