பிரபு தயாள் நிகாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரபு தயாள் நிகாம்
Prabhu Dayal Nigam
பிறப்புஇந்தியா
பணிஇதயவியல்
அறியப்படுவதுஇருதயவியல் நிபுணர்
விருதுகள்பத்மசிறீ
டாக்டர் பி.சி.ராய் விருது

பிரபு தயாள் நிகாம் (Prabhu Dayal Nigam) என்பவர் ஓர் இதயவியல் மருத்துவராவார். புது தில்லியிலுள்ள டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையின் மருத்துவக் கல்வியில் இதயநோயியல் பிரிவைத் தொடங்கி வைத்தவர் இவரேயாவர்.[1]. மருத்துவத்தில் பல முதுநிலைப் பட்டங்களுக்கு சொந்தக்காரராகவும் விளங்கினார். இந்திரப்பிரசுத்தா அப்போலோ மருத்துவமனையில் இருதயநோய் பிரிவுக்கு ஒரு மூத்த ஆலோசகராகவும் பணிபுரிந்தார்[2].

இந்திய குடியரசுத் தலைவருக்கு கௌரவ மருத்துவராகவும் மற்றும் இந்தியாவின் இராணுவ ஆயுதப்படையினருக்கு கௌரவ இதயநோய் ஆலோசகராகவும் நிகாம் பதவி வகித்தார்[1]. அமெரிக்கன் இருதயநோய் கல்லூரியில் கௌரவ உறுப்பினர், ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் உத்தரப்பிரதேச அரசுப்பணியாளர் தேர்வாணையம், பனாரசு இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தார். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, பல்கலைக்கழக மாண்யக்குழு, தில்லி பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு ஆகிய அமைப்புகளின் கூட்டங்களிலும் பங்கேற்றார்[3].

உயர் இரத்த அழுத்த நிபுணர்களின் பெயர்பட்டியலில் உலக சுகாதார நிறுவனம் இவரையும் சேர்த்துக்கொண்டது. இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த மருத்துவத்துறை விருதான டாக்டர் பி.சி. ராய் விருது 1983 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது.[1][2]. மேலும், 1987 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கமானது நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதையும் வழங்கி இவரை கௌரவித்தது[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Team of Doctors". Apollo Hospitals. 2015. Archived from the original on செப்டம்பர் 23, 2015. பார்க்கப்பட்ட நாள் August 22, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 "Dr. Prabhu Dayal Nigam". Doctors in Citi. 2015. பார்க்கப்பட்ட நாள் August 22, 2015.
  3. "Credihealth profile". Credihealth. 2015. பார்க்கப்பட்ட நாள் August 22, 2015.
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபு_தயாள்_நிகாம்&oldid=3563488" இலிருந்து மீள்விக்கப்பட்டது