பிரபா மிசுரா
Prabha Misra | |
---|---|
பிரபா மிசுரா என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார்.
இளமை
[தொகு]பிரபா மிசுரா திரிபாதி குடும்பத்தில் ஷாஹபாத் ஹர்தோயில் பிறந்தார். அஜ்மீரில் ரயில்வே கணக்காளராக பணிபுரியும் பண்டித அசாரி லால் மிசுராவின் மகன் சுக் தியோ பிரசாத் மிசுராவினை பெரும்பாலான பெண்களைப் போலவே தனது 13 வயதிலேயே மணந்தார்.
கல்வி
[தொகு]பிரபா ஆக்ரா பல்கலைக்கழகத்தில் இரண்டு முதுகலைப் பட்டங்களையும் அஜ்மீர் அரசு கல்லூரியில் இளநிலை சட்டப் பட்டத்தினையும் பெற்றார்.
திருமண வாழ்க்கை
[தொகு]மிசுரா ஒரு பிரகாசமான மாணவி மற்றும் அறிவைப் பெறுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் கல்வியைத் தொடர இவருடைய மாமனார் உறுதுணையாக இருந்தார். மிசுரா கல்வி பயின்ற காலத்தில் கல்வியைத் தொடர்ந்த ஒரு சில பெண்களில் இவரும் ஒருவர்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]மிசுரா இராசத்தான் மாநிலத்தைச் சேர்ந்த புஷ்கர் சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இவர் 1957 முதல் 1977 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1957,[1] 1962,[2] 1967[3] மற்றும் 1972[4] தேர்தல்களில் இவர் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றார். மிசுரா இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினை சார்ந்தவர். மிசுரா தனது வாழ்நாளில் பல்வேறு அமைச்சரவை பதவிகளை வகித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rajasthan Assembly Election Results in 1957". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 11 January 2017.
- ↑ "Rajasthan Assembly Election Results in 1962". www.elections.in.
- ↑ "Rajasthan Assembly Election Results in 1967". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 11 January 2017.
- ↑ "Rajasthan Assembly Election Results in 1972". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 11 January 2017.