உள்ளடக்கத்துக்குச் செல்

பிரபா மராத்தே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரபா மராத்தே (Prabha Marathe) இந்தியாவைச் சேர்ந்த ஒரு நடனக் கலைஞர் ஆவார். 1936 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதியன்று புனேவில் பிறந்தார். தனது 13 ஆவது வயதில் மறைந்த ரோகினி பேட்டியின் வழிகாட்டுதலின் கீழ் நடனம் கற்கத் தொடங்கினார். 25 வயதில் புதுதில்லிக்கு இடம்பெயர்ந்தார். புது தில்லியில் உள்ள சிறீராம் பாரதிய கலா கேந்திராவில் பயிற்சி பெற்றார். பண்டிதர் பிர்ச்சூ மகராச்சின் கீழ் கதக் நடனத்தை ஒரு மாணவியாகக் கற்றுக் கொண்டார். தன்னுடைய திறமையாலும் விடாமுயற்சியாலும் குருவின் அன்பிற்குரிய மாணவிகளில் ஒருவரானார். நடன இயக்குநராகவும் ஓர் ஆசிரியராகவும் அறியப்பட்ட இவர் 1965 ஆம் ஆண்டில் கலாச்சாயா பண்பாட்டு மையத்தை நிறுவியதற்காக மிகவும் பிரபலமானார். மேலும் 1980 ஆம் ஆண்டுகளில் மகாராட்டிராவில் கதக்கின் நுட்பங்களை பிரபலப்படுத்தி ஆவணப்படுத்திய பெருமைக்குரியவராக கருதப்படுகிறார்.[1][2][3][4][5][6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Prabha Marathe". Sahapedia (in ஆங்கிலம்). Retrieved 24 February 2024.
  2. "This is the end of Kathak: Prabha Marathe remembers her guru Pandit Birju Maharaj" (in en). Hindustan Times. 17 January 2022. https://www.hindustantimes.com/cities/pune-news/this-is-the-end-of-kathak-prabha-marathe-remembers-her-guru-pandit-birju-maharaj-101642440640758.html. 
  3. Kothari, Sunil (1989). Kathak, Indian Classical Dance Art (in ஆங்கிலம்). Abhinav Publications. p. 199. ISBN 978-81-7017-223-9.
  4. Banerji, Projesh (1986). Dance in Thumri (in ஆங்கிலம்). Abhinav Publications. p. 94. ISBN 978-81-7017-212-3.
  5. Massey, Reginald (2004). India's Dances: Their History, Technique, and Repertoire (in ஆங்கிலம்). Abhinav Publications. p. 263. ISBN 978-81-7017-434-9.
  6. Pujari, Premlata (1994). Women Power in India (in ஆங்கிலம்). Vol. 1. Kanishka Publishers. p. 35. ISBN 978-81-7391-015-9.
  7. Mitoma, Judy; Zimmer, Elizabeth; Stieber, Dale Ann (18 October 2013). Envisioning Dance on Film and Video (in ஆங்கிலம்). Routledge. p. 395. ISBN 978-1-135-37651-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபா_மராத்தே&oldid=3923109" இலிருந்து மீள்விக்கப்பட்டது