பிரபா சட்டர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரபா சட்டர்ஜி
தேசியம் இந்தியன்
அல்மா பொருள் இந்திய அறிவியல் கழகம்
விருதுகள் வாஸ்விக் விருது, இந்திய பொருள் அறிவியல் ஆராய்ச்சியாளர் சங்க விரிவுரை விருது

பிரபா ஆர். சட்டர்ஜி (Prabha Chatterji) என்பவர் இந்திய அறிவியலாளர் ஆவார். இவர் பெங்களூரில் உள்ள ஜான் எப். வெல்ச் தொழில்நுட்ப மையத்தில் (முன்னர் ஜெனரல் எலக்ட்ரிக் குளோபல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம்), பணிபுரிந்து வருபவர் ஆவார்.[1]

இவர் முன்பு ஐதராபாத்தில் உள்ள இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மூத்த அறிவியலாளராகவும், இந்தியாவின் உயிரியல் பொருட்கள் மற்றும் செயற்கை உறுப்புகளுக்கான சங்கத்தின் நிர்வாகக் குழுவின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[2][3] இவர் முதன்மையாக இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியுடன் தொடர்புடையவர்.[1]

கல்வி[தொகு]

இவர் கேரளாவில் ஒட்டப்பாலம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பட்டம் பெற்றார். கல்லூரி மாணவியாக, இருக்கும்போது இவருக்குப் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தால் தேசிய அறிவியல் திறமை தேடல் உதவித்தொகையினை வழங்கியது. இதன் மூலம் முதுநிலைப் பட்டத்தினையும் 1977-ல் முனைவர் பட்டப்படிப்பினையும் முடித்தார்.[4] முனைவர் பட்ட ஆய்விற்குப் பின்னர் அறிவியலில் தொடர இந்த உதவித்தொகை உதவியது.[5]

பணி[தொகு]

பிரபாவின் வாழ்க்கைப் பாதையானது கல்வித்துறையில் அரசாங்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் தொழில்துறையில் ஈடுபட்டுள்ளது.[5] தொழில்துறை ஆராய்ச்சிக்கான வாஸ்விக் விருதையும், இந்திய பொருள் அறிவியல் சங்க விரிவுரை விருதையும் பெற்றார்.[4] இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் கொள்கைகளிலும் வகுப்பதிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.[4]

வெளியீடு[தொகு]

சாட்டர்ஜி 41 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவருடைய எச். சுட்டிக்காட்டி 16 ஆகும்.

விருதுகள்[தொகு]

சட்டர்ஜி வாஸ்விக் விருதினையும் (தொழில்துறை ஆராய்ச்சி)[3] இந்திய பொருள் அறிவியல் ஆராய்ச்சியாளர் சங்க விரிவுரை விருதினையும் பெற்றவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Prabha Chatterji". Women in science: an Indian Academy of Sciences initiative. Indian Academy of Sciences. 2007. பார்க்கப்பட்ட நாள் 17 March 2014.
  2. "Executive committee for 2011-2014". Society for Biomaterials and Artificial Organs - India. Archived from the original on 6 October 2014. பார்க்கப்பட்ட நாள் 17 March 2014.
  3. 3.0 3.1 "Smt. Chandaben Mohanbhai Patel Industrial Research Award for Women Scientists". Archived from the original on 26 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 17 March 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 4.2 "The Women Scientists of India | Women in Science | Initiatives | Indian Academy of Sciences". www.ias.ac.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபா_சட்டர்ஜி&oldid=3668275" இலிருந்து மீள்விக்கப்பட்டது