பிரபா கல்விமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரபா கல்விமணி (பிறப்பு; கல்யாணி,ஜனவரி 12, 1947) என்பவர் தமிழக கல்வியாளர், மனித உரிமைச் செயல்பாட்டாளர், பழங்குடி பாதுகாப்புப் போராளி ஆவார்.

துவக்ககால வாழ்கை[தொகு]

இவர் தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில் உள்ள சௌந்திரபாண்டியபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். மாணவப் பருவத்திலிருந்தே திராவிட இயக்கத்தில் ஈடுபாடுகொண்டிருந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1965 இல் படித்த காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றார். முதுகலை பட்டப் படிப்பு முடித்த பிறகு விழுப்புரத்திலும், பிறகு திண்டிவனம் அரசுக் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.

வாழ்கை[தொகு]

இவர் கல்லூரி ஆசிரியர் பணிக்கு வந்தபிறகு மார்க்சிய இயக்கங்களில் ஈடுபாடுகொண்டார். 1993 இல் அத்தியூர் விஜயா என்கிற இருளர் இனப் பெண்ணைக் காவல்துறையினர் பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த வழக்கை கல்யாணி முன்னெடுத்து நடத்தினார். அப்போதிருந்து இருளர் பழங்குடிகளுக்குத் துணையாக தொடர்ந்து செயல்பட்டுவருகிறார். 1996 இல் உருவாக்கப்பட்ட பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத் தலைமையேற்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனால் முன்னெடுக்கப்பட்ட வடமொழி பெயர்களை விடுத்து தமிழ்ப் பெயர்களை சூட்டிக்கொள்ளும் இயக்கத்தின்போது, கல்யாணி என்ற தன் பெயரை கல்விமணி என மாற்றிக்கொண்டார். தமிழ்வழிக் கல்விக்காக திண்டிவனம் உரோசனையில் 2000 ஆம் ஆண்டு தாய்த் தமிழ்ப் பள்ளியைத் தொடங்கினார். 21 பிள்ளைகள், ஒரு ஆசிரியர், ஒரு தாயம்மாளுடன் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் 2017 வாக்கில் 203 மாணவர்கள் பயில்கின்றனர். அரசின் நிதி உதவி எதுவுமில்லாத நிலையிலும் கல்வி, மதிய உணவு, சீருடை உள்ளிட்ட அனைத்தும் இப்பள்ளியில் இலவசமாக அளிக்கப்படுகின்றன.

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "'தி இந்து' தமிழ் திரு விருதுகள்- தமிழ் ஆளுமைகளைப் போற்றுவோம்!". கட்டுரை. தி இந்து தமிழ். 2017 செப்டம்பர் 15. 15 செப்டம்பர் 2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

  • [1] பேராசிரியர் கல்யாணி(பிரபா.கல்விமணி) - ஒரு போராட்ட கதை...
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபா_கல்விமணி&oldid=3370873" இருந்து மீள்விக்கப்பட்டது