பிரபந்த மரபியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரபந்தங்கள் 96 என்னும் பாகுபாடு தோன்றிய பின்னர் எழுந்த பிரபந்த மரபியல் நூலில் அந்தப் பிரபந்தங்களுக்கு இலக்கணம் கூறப்படுகிறது. இதன் ஆசிரியர் யார் எனத் தெரியவில்லை.

இதில் 60 நூற்பாக்கள் உள்ளன. முதல் 40 நூற்பாக்களில் 66 பிரபந்தங்களுக்கு இலக்கணம் உள்ளது.

எஞ்சியவை பொதுவான செய்திகளைக் கூறுகின்றன.

பெருங்காப்பியம்
புராணம்
நால்வகைப் பாவுக்கு 12 ராசிகளைப் பகுத்துக்கூறுதல்

முதலான செய்திகள் கூறப்படுகின்றன.

கருவிநூல்[தொகு]

  • இலக்கண விளக்கம் – பொருளதிகாரம் – பாட்டியல், பதிப்பாசிரியர் தி.வே.கோபாலையர், சரசுவதி-மகால் நூல்நிலையப் பதிப்பு 1974
இதனைக் கருவிநூலாக வைத்து எழுதிய கட்டுரை உள்ள நூல்
  • தமிழ் இலக்கண வரலாறு – 16ஆம் நூற்றாண்டு – இரண்டாம் பாகம், ஆசிரியர் மு. அருணாசலம்,
இதனைக் கருவிநூலாக வைத்துத் தொகுத்த நூல்
  • தமிழ் இலக்கண நூல்கள், பதிப்பாசிரியர் முனைவர் ச.வே.சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபந்த_மரபியல்&oldid=3311055" இருந்து மீள்விக்கப்பட்டது