பிரந்தாஸ் ஆறு
| பிரந்தாஸ் ஆறு Brantas River Kali Brantas Sungai Brantas | |
|---|---|
பிரந்தாஸ் ஆறு, கெதிரி குறுமாநிலம் | |
![]() | |
| அமைவு | |
| மாநிலம் | கிழக்கு ஜாவா |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | அருஜுனோ வெளிராங் மலை Arjuno-Welirang |
| முகத்துவாரம் | |
• அமைவு | மதுரா நீரிணை |
• ஆள்கூறுகள் | 7°27′36″S 112°25′48″E / 7.46000°S 112.43000°E |
| நீளம் | 320 km (200 mi) |
வடிநில அளவு | 11,900 km2 (4,600 sq mi)[1] |
| வெளியேற்றம் | |
| • அமைவு | முகத்துவாரம் |
| • சராசரி | 579 m3/s (20,400 cu ft/s) |
| வடிநில சிறப்புக்கூறுகள் | |
| நதி அமைப்பு | பிரந்தாஸ் படுகை (DAS220228)[1] |
பிரந்தாஸ் ஆறு (ஆங்கிலம்: Brantas River; இந்தோனேசியம்: Sungai Brantas) என்பது இந்தோனேசியா கிழக்கு ஜாவாவின் (East Java) மிக நீளமான ஆறு ஆகும்.[2]
320 கி.மீ நீளம் கொண்ட இந்த ஆறு, 11,000 கி.மீ2-க்கும் கூடுதலான பரப்பளவில் வடிநிலத்தைக் கொண்டுள்ளது.[3]
காவி மலை (Mount Kawi), வில்லிஸ் மலைகளின் (Mount Wilis) தெற்குச் சரிவு; மற்றும் லிமான்-லிமாஸ் மலை, அருஜுனோ வெளிராங் மலை (Mount Welirang), அஞ்சாஸ்மோரோ மலை (Mount Anjasmoro), ஆகிய மலைகளின் வடக்குச் சரிவுகளில் இருந்து இந்த ஆறு உற்பத்தி ஆகிறது.[4]
பொது
[தொகு]இந்த ஆற்றின் பாதை, அரை வட்டம் அல்லது சுழல் வடிவத்தில் உள்ளது. அதன் மூலத்தில், இந்த ஆறு தென்கிழக்கு நோக்கிச் செல்கிறது. பின்னர் படிப்படியாகத் தெற்கு, தென்மேற்கு, மேற்குத் திசைகளில் வழிந்து, அதன் பின்னர் வடக்கு நோக்கி வளைந்து, இறுதியாக கிழக்கு நோக்கிப் பாய்கிறது.
இந்தக் கட்டத்தில், இந்த ஆறு பிரிந்து கலிமாஸ் ஆறு (Kalimas) மற்றும் போரோங் ஆறு (Porong River) என இரு ஆறுகளாக மாறுகிறது.
வரலாறு
[தொகு]கி.பி 950-ஆம் ஆண்டு வாக்கில், முப்பு சிந்தோக் எனும் மன்னர் (Mpu Sindok), மத்திய ஜாவாவில் இருந்த மாதரம் இராச்சியத்தை, பிரந்தாஸ் ஆற்றங்கரையில் இருந்து ஒரு புதிய இடத்திற்கு மாற்றினார்.
மெராபி எரிமலை வெடிப்பு காரணமாக, முப்பு சிந்தோக் தன் இராச்சியத்தை தற்போதைய நகரமான மடியூனுக்கு (Madiun) அருகிலுள்ள இந்தப் புதிய இடத்திற்கு மாற்றி இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது.
புவியியல்
[தொகு]

பிரந்தாஸ் ஆற்றுப் பகுதியில் ஆண்டு சராசரி வெப்பநிலை 26°C ஆகும்.[5] வெப்பமான மாதம் அக்டோபர் மாதம்; சராசரி வெப்பநிலை ஏறக்குறைய 30 °C; மிகக் குளிரான மாதம் சூன் மாதம்; சராசரி வெப்பநிலை 24 °C.
| தட்பவெப்பநிலை வரைபடம் பிரந்தாஸ் ஆறு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி | ||||||||||||||||||||||||||||||||||||
459
28
21
|
453
27
22
|
496
27
21
|
282
28
22
|
144
29
22
|
175
27
20
|
65
29
20
|
28
32
20
|
35
35
21
|
111
37
22
|
295
35
23
|
439
30
21
|
||||||||||||||||||||||||||||||||||||
| வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) source: [5] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
Imperial conversion
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Keputusan Menteri Kehutanan Nomor SK.511/MENHUT-V/2011 Tahun 2011 - Pusat Data Hukumonline".
- ↑ Kali Brantas at Geonames.org (cc-by); Last updated 2013-06-04; Database dump downloaded 2015-11-27
- ↑ Ramu, Kikkeri (December 2004). "Brantas River Basin Case Study, Indonesia" (PDF). Background Paper. Worldbank. p. 36.
- ↑ Whitten, T; Soeriaatmadja, R. E.; Suraya A. A. (1996). The Ecology of Java and Bali. Hong Kong: Periplus Editions Ltd. p. 132.
- 1 2 Peel, M C; Finlayson, B L; McMahon, T A (2007). "Updated world map of the Köppen-Geiger climate classification". Hydrology and Earth System Sciences 11 (5): 1633–1644. doi:10.5194/hess-11-1633-2007. Bibcode: 2007HESS...11.1633P. http://www.hydrol-earth-syst-sci.net/11/1633/2007/hess-11-1633-2007.html. பார்த்த நாள்: 30 January 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் பிரந்தாஸ் ஆறு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
