பிரநாளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு கோயிலில் எடுக்கப்பட்ட பிரநாளப் பகுதி

கோயில்களில் கருவறைப் பகுதியிலிருந்து வெளியேறும் திருமஞ்சன நீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்ட பகுதி “பிரநாளம்” எனப்படும். இந்த அமைப்பு கட்டுமானக் கோயில்கள் கட்டத் தொடங்கிய பின்னர்தான் அமைக்கப்பட்டது. இந்தப்பகுதி கருவறையின் தளத்திற்கு இணையான உயரத்தில் இருக்கும். இந்த பிரநாளங்களின் நடுப்பகுதியில் தண்ணீர் வெளியேறுவதற்கான பள்ளம் அமையும். இதனை அடுத்து சிம்மம், மகரம், யானை அல்லது வியாழனுடனான தண்டுப்பகுதியில் சிறிய அளவு அலங்காரங்களுடன் கூடுகளாக இருக்கும். சிறிய கோயில்களில் இது அதிக வேலைப்பாடுகளின்றி சாதாரணமாக அமைக்கப்படுவதும் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரநாளம்&oldid=1815452" இருந்து மீள்விக்கப்பட்டது