உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதுல் சந்திர கங்குலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதுல் சந்திர கங்குலி

பிரதுல் சந்திர கங்குலி (Pratul Chandra Ganguli) இந்தியாவைச் சேர்ந்த ஒரு புரட்சியாளர் ஆவார். 1884ஆம் ஆண்டில் இவர் பிறந்தார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

பிரதுல் 1884ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதியன்று தற்போது வங்காளதேசத்தில் உள்ள நாராயங்கஞ்சு நகரத்தில் பிறந்தார். அனுசிலன் சமிதி உறுப்பினராக இருந்தார். அனுசிலன் சமிதி டாக்கா கிளையின் முக்கிய அமைப்பாளரான புலின் பிகாரி தாசு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதுல் மற்றும் திரேலோக்யநாத் சக்ரவர்த்தி ஆகியோர் அனுசிலம் சமிதி பொறுப்பை ஏற்றுக்கொண்டு சங்கத்தை மறுசீரமைத்தனர். இவர் பரிசால் சதி வழக்கில் விசாரிக்கப்பட்டு 1914ஆம் ஆண்டில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். இருப்பினும் முன்னதாக விடுவிக்கப்பட்டார். 1922ஆம் ஆண்டில் காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். சில புரட்சிகர தொடர்புகளை இவரால் பராமரிக்கவும் முடிந்தது. புரட்சியாளர்களுக்கு தொடர்ந்து உதவினார். பிரதுல் டாக்கா மாவட்ட காங்கிரசு குழு , வங்காள காங்கிரசு குழு மற்றும் அகில இந்திய காங்கிரசு குழு ஆகியவற்றின் தலைவரானார். 1929 மற்றும் 1937ஆம் ஆண்டுகளில் வங்காள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதுல் கங்குலி 1947ஆம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். 1957ஆம் ஆண்டு சூலை மாதம் 5ஆம் தேதியன்று அன்று கொல்கத்தாவில் காலமானார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Heroes of anti Imperialist (British) Movement", Muktadhara, 9 May 2001, archived from the original on 16 June 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதுல்_சந்திர_கங்குலி&oldid=4293896" இலிருந்து மீள்விக்கப்பட்டது