பிரதீப் பண்டாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதீப் பண்டாரி
Pradeep Bhandari
பிறப்புஇந்தோர், மத்தியப் பிரதேசம், இந்தியா
பணி
  • பத்திரிகையாளர்
  • செய்தி அறிவிப்பாளர்
  • ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2014–முதல்
பணியகம்இந்தியா செய்திகள்
அறியப்படுவது
  • செய்தி அறிவிப்பாளர், சண்டா கா முகதாமா

பிரதீப் பண்டாரி (Pradeep Bhandari) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் மற்றும் ஊடக ஆளுமையாவார். 1985 ஆம் ஆண்டு சூன் மாதம் 30 ஆம் தேதியன்று இவர் பிற்ரந்தார். தற்போது இந்தி செய்தி அலைவரிசையான இந்தியா நியூசில் ஆலோசனை ஆசிரியராக பணிபுரிகிறார். இந்த அலைவரிசையில் ஒளிபரப்பாகும் முதன்மையான நிகழ்ச்சியான சந்தா கா முகதாமா என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். [1] [2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

1985 ஆம் ஆண்டு சூன் மாதம் 30 ஆம் தேதியன்று இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிரதீப் பிறந்து வளர்ந்தார். தனது ஆரம்ப பள்ளிப் படிப்பை இந்தூரில் உள்ள இலாரல்சு பன்னாட்டுப் பள்ளியில் படித்து முடித்தார். அதன்பிறகு, மணிப்பால் தொழில்நுட்பக் கழகத்தில் சேர்ந்தார், அங்கிருந்து மின்னணுவியல் மற்றும் தொட்டர்பாடல் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். தக்சசீலா நிறுவனத்தில் பொருளாதாரம் பகுத்தறிவு மற்றும் பொதுக் கொள்கையையும் உயர் கல்வித் தகுதியாகப் படித்தார். இந்தத் தகுதிகளுடன் இவர் நாடகத்திற்காக கதை எழுதுவதையும், மணிப்பால், பெங்களுரு, இந்தூர் போன்ற நகரங்களில் நடிப்பு கற்பதையும் தொடர்ந்தார். இவரது தந்தையின் பெயர் திலீப் பண்டாரியாகும். தொழிலில் அவர் தொழிலதிபர். இவரது தாயாரின் பெயர் டாக்டர். ரச்னி பண்டாரி, இவர் தலசீமியா மற்றும் குழந்தைகள் நலக் குழு இந்தூர் மூலம் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் கல்விக்காகப் பணியாற்றுகிறார்.

தொழில்[தொகு]

பிரதீப் பண்டாரி டெக்சாசு கருவிகள் என்ற நிறுவனத்தில் பயிற்சியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு, பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், ரிபப்ளிக் பாரத் நியூசு அலைவரிசையில் ஆலோசனை ஆசிரியராகப் பணியாற்றினார். தலசீமியா மற்றும் குழந்தைகள் நலக் குழுவில் இளைஞர் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார். பிரதீப் பண்டாரி ஒரு இந்திய செய்தி நிருபர் மற்றும் சன் கி பாத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். சுசாந்த் சிங் ராச்புத்தின் மர்மமான தற்கொலை வழக்கு மற்றும் மும்பையில் நடந்து வரும் போதைப்பொருள் வழக்கு குறித்து அறிக்கை செய்யத் தொடங்கிய பின்னர் பிரதீப் பரவலாக வெளிச்சத்திற்கு வந்தார். மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா என்ற இடத்தில், மற்றொரு செய்தி சேனலுடன் தொடர்பு கொண்டிருப்பதாகக் கூறி அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். [3]

தாக்குதல்[தொகு]

பிரதீப் பண்டாரி, மும்பையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நடத்தப்படும் போதைப்பொருள் விசாரணைக்காகப் புகாரளிக்கும் போது, கேட்வே ஆஃப் இந்தியா என்ற இடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டபோது பிரபலமானார். வெளிவந்த செய்திகளின்படி, மற்றொரு செய்தி தொலைக்காட்ட்சியின் நிருபர்கள் என்று கூறிக்கொண்ட இருவர் இவரைத் தாக்கியதாக அறியப்படுகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, “மகாராட்டிராவில் பேசுவதற்கும் உண்மையை வெளிப்படுத்துவதற்கும் கொடுக்க வேண்டிய விலை இதுதான் என்று சமூக ஊடகங்களில் எழுதினார். என்டிடிவி மற்றும் ஏபிபி செய்தி தொலைக்காட்சிகள் அனுப்பிய குண்டர்களால் தான் தாக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்களின் தாக்குதல்கள் மற்றும் அழுத்தங்களால் தான் உடைந்து போக மாட்டேன் என்றும் இவர் கூறினார்.

புகாரை அடுத்து, மும்பை காவல்துறை இந்த வழக்கில் விசாரணையைத் தொடங்கியது. அறிக்கைகளின்படி, அவர்களுக்கு இடையேயான இந்த மோதலுக்கு என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. [4] [5] [6]

மும்பை காவல்துறையின் நடவடிக்கை[தொகு]

பிரதீப் பண்டாரி மீது கர் காவல்நிலையத்தில் இந்திய தண்ட்ட்டனை சட்டப் பிரிவுகள் 188 (அரசு ஊழியரால் முறையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவை மீறுதல்), 353 (பொது ஊழியரை அவரது கடமையைச் செய்யவிடாமல் தடுக்கும் தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தி) மற்றும் 37(1), 135 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பண்டாரி தேவைப்படும் போது காவல் நிலையத்திற்கு வருகை தரவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பண்டாரியை 15,000 ரூபாய்க்கான சொந்தப் பிணையில் விடுவிக்கவும், அதே தொகைக்கு சாமீன் அளித்த பிறகு, அவரைக் கைது செய்தால் அவரை விடுவிக்கவும் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. baat, jan ki (2022-07-20). "प्रदीप भंडारी के शो जनता का मुकदमा के एक वर्ष पूरे, न्यू इंडिया ने शो को खूब पसंद किया". Jan Ki Baat (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-04.
  2. "प्रदीप भंडारी पहुँचे 'इंडिया न्यूज़', पेश करेंगे 'जनता का मुक़दमा' | No. 1 Indian Media News Portal". www.bhadas4media.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-04.
  3. "Journalist Pradeep Bhandari assaulted in Mumbai". The Indian Express (in ஆங்கிலம்). 2020-09-24. பார்க்கப்பட்ட நாள் 2022-09-04.
  4. Staff, J. K. R. (2021-02-09). "Big blow to Arnab Goswami as top colleague, who was physically assaulted by reporters in Mumbai, stuns Republic TV founder by resignation". Janta Ka Reporter 2.0 (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-04.
  5. Goyal, Prateek. "Republic Bharat versus everyone else: Eyewitnesses tell us what happened outside NCB office today". Newslaundry. பார்க்கப்பட்ட நாள் 2022-09-04.
  6. "एनडीटीवी और एबीपी के गुंडे पत्रकारों ने मुझे पीटा- रिपब्‍लिक से जुड़े प्रदीप भंडारी का आरोप, वीडियो वायरल". Jansatta (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-09-04.
  7. "Republic TV journalist questioned by police". The Indian Express (in ஆங்கிலம்). 2020-10-18. பார்க்கப்பட்ட நாள் 2022-09-04.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதீப்_பண்டாரி&oldid=3508145" இலிருந்து மீள்விக்கப்பட்டது