உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதீபா ஹரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதீபா
கேரள சட்டமன்றசட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 சூன் 2016 (2016-06-02)
முன்னையவர்சி. கே. சதாசிவன்
தொகுதிகாயங்குளம்
ஆலப்புழா மாவட்டப் பஞ்சாயத்து தலைவர்
பதவியில்
2010 (2010) – 2015 (2015)
தகழி கிராம ஊராட்சித் தலைவர்
பதவியில்
2005 (2005) – 2010 (2010)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 மே 1977
தகழி, ஆலப்புழா, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்(கள்)
கே. ஆர். ஹரி
(தி. 2001; ம.மு. 2018)
பிள்ளைகள்1
பணி
  • அரசியல்வாதி
இணையத்தளம்advprathibha.com

பிரதீபா ஒரு இந்திய அரசியல்வாதியும் கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தின் காயங்குளம் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1][2] முன்னதாக இவர் ஆலப்புழா மாவட்ட ஊராட்சித் தலைவராக 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். இவர் 2005–2010 வரை உள்ள காலகட்டத்தில் தகழி கிராம ஊராட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார்.

தனிநபர் விவரங்கள்

[தொகு]

இவர் ஆலப்புழா மாவட்டத்தில் தகழி கிராமத்தில் வி. கே. புருசோத்தமன் மற்றும் ஜே. உமையம்மா ஆகியோருக்கு 1977 ஆம் ஆண்டு மே 10 ஆம் நாள் மகளாகப் பிறந்தார். இவர் சட்டத்துறையில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

இவர் 2000-2005 ஆம் ஆண்டு வரை தகழி கிராம ஊராட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஆலப்புழா மாவட்ட ஊராட்சியின் தலைவராகவும் இருந்தார். இவர் கேரள சட்டமன்றத் தொகுதியின் 14ஆவது மற்றும் 15-ஆவது சட்டமன்றங்களுக்கு காயங்குளம் சட்டமன்றத் தொகதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

கேரள சட்டமன்றத் தேர்தல்
ஆண்டு தொகுதி எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு வித்தியாசம் வெற்றி/தோல்வி
2016 காயங்குளம் வழக்குரைஞர் எம் லிஜு (இ. தே. கா) 11857 வெற்றி[4]
2021 காயங்குளம் அரிதா பாபு (இ. தே. கா) 6298 வெற்றி[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Niyamasabha" (PDF). 1 September 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. "Kerala Assembly Election 2016 Results". கேரள சட்டமன்றம். Retrieved 8 June 2016.
  3. "Welcome to Kerala Legislature". www.niyamasabha.org. Retrieved 2021-05-06.
  4. "Kayamkulam Assembly Election 2016 Latest News & Results". India.com (in ஆங்கிலம்). Retrieved 2021-05-06.
  5. "Election Commission of India". results.eci.gov.in. Retrieved 2021-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதீபா_ஹரி&oldid=4391011" இலிருந்து மீள்விக்கப்பட்டது