பிரதிமா குமாரி தாசு
பிரதிமா குமாரி தாசு | |
---|---|
உறுப்பினர்-பீகார் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2020 | |
முன்னையவர் | சிவ சந்திர இராம், ![]() |
தொகுதி | ராஜாபாகர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 செப்டம்பர் 1975 |
அரசியல் கட்சி | ![]() |
பிரதிமா குமாரி தாசு (Pratima Kumari Das)(பிறப்பு: செப்டம்பர் 13, 1975) என்பவர் பீகாரைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் வைசாலி மாவட்டத்தில் உள்ள ராஜாபாகர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். தாசு இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் 2020ஆம் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு கட்சி சார்பில் ராஜாபாகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]
இளமை
[தொகு]குமாரி பீகாரின் கும்காரைச் சேர்ந்தவர். இவர் பிரபு நாராயண் மற்றும் இராஜகுமாரி தேவி தம்பதியரின் மகளாகப் பிறந்தவர். இவர் பிரேந்திர குமாரை மணந்தார். இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். குமாரி தனது இளநிலை அறிவியல் கல்வியினை பீகாரில் கயையில் உள்ள அம்பேத்கார் பல்கலைக்கழகத்திலும், மகத் பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டப் பட்டத்தினையும் பெற்றார்.[3]
அரசியல்
[தொகு]குமாரி 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் ராஜாபாகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 54,299 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மகேந்திர இராமை 1,796 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Raja Pakar Election Result 2020 Live Updates: Pratima Kumari of INC Wins". News18 (in ஆங்கிலம்). 2020-11-10. Retrieved 2024-06-27.
- ↑ "Bihar election result 2020: Seat wise full list of winners". India Today (in ஆங்கிலம்). 2020-11-10. Retrieved 2024-06-27.
- ↑ "Pratima Kumari(Indian National Congress(INC)):Constituency- RAJA PAKAR (SC)(VAISHALI) - Affidavit Information of Candidate". www.myneta.info. Retrieved 2024-06-27.
- ↑ "Bihar Election Results 2020: Full list of winners". The Indian Express (in ஆங்கிலம்). 2020-11-10. Retrieved 2024-06-27.
- ↑ "Live Raja Pakar Election Results, Raja Pakar विधानसभाचुनाव परिणाम 2023 - NDTV MPCG". www.ndtv.com. Retrieved 2024-06-27.