பிரதிநிதித்துவமற்ற நாடுகள் மற்றும் மக்கள் அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் அமைப்பு
கொடி of பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் அமைப்பு
கொடி
சின்னம் of பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் அமைப்பு
சின்னம்
உலகளாவிய பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் அமைப்புகளின் வரைபடம், 2015 (click to enlarge and for legend).
உலகளாவிய பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் அமைப்புகளின் வரைபடம், 2015 (click to enlarge and for legend).
தலைமையிடம்பிரசெல்சு நகரம், பெல்ஜியம்
அங்கத்துவம்44 குழுக்கள்[1]
தலைவர்கள்
• General Secretary[2]
ரால்ப் ஜெ. புஞ்சே III
(2018–தற்போது வரை)
• தலைவர்[2]
நாசர் போலதாய்
• துணைத் தலைவர்கள்[2]
டோல்க்குன் இசா
ஆப்பிரகாம் மகதி
உருவாக்கம்11 பிப்ரவரி 1991

பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் அமைப்பு (Unrepresented Nations and Peoples Organization (UNPO) பிரதிநிதித்துவம் அற்ற, ஒடுக்கப்பட்ட நாடற்ற தேசிய இன மக்கள் மற்றும் நாடு கடந்த அரசுகளின் குரலை உலகளவில் ஒலிப்பதற்காக, நெதர்லாந்து நாட்டின் தலைநகரமான த ஹேக்கில் 11 பிப்ரவரி 1991 அன்று நிறுவப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும்.[3][4]நாடாற்ற தேசிய இன மக்கள் சிறுபான்மை குழுவினர், நாடு கடந்த அரசுகள், இராணுவப் புரட்சியால் கைப்பற்றப்பட்ட பகுதியின் மக்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.

பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் அமைப்பு, சுயநிர்ணய உரிமை பற்றிய புரிதலையும், மரியாதையையும் வளர்ப்பதற்கு செயல்படுகிறது, சர்வதேச அங்கீகாரம் மற்றும் அரசியல் தன்னாட்சி தொடர்பான ஆலோசனைகளையும், ஆதரவையும் வழங்குகிறது. மேலும் பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் குழுக்களுக்கு பன்னாட்டு அளவில் எவ்வாறு வாதிடுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கிறது. இவ்வமைப்பின் உறுப்பு குழுக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனித உரிமைகள் மீறல்களுக்கு சர்வதேச பதிலை நேரடியாக ஆதரிக்கின்றன.

இவ்வமைப்பின் முன்னாள் நாடற்ற தேசிய இனத்தவர்களான ஆர்மீனியா, சியார்சியா, எசுத்தோனியா, லாத்வியா, கிழக்கு திமோர் மற்றும் பலாவு நாடுகள் முழு இறையாண்மை பெற்ற நாடுகளாக உருப்பெற்றுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் அவையிலும் உறுப்பினர்களாக உள்ளது. [5][6]

நோக்கங்கள்[தொகு]

 • மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் மற்றும் பிற சர்வதேச கருவிகளில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் தரங்களை பின்பற்றுவது.
 • ஜனநாயகப் பன்மைத்துவத்தின் கொள்கைகளைப் பின்பற்றுதல் மற்றும் சர்வாதிகாரத்தையும் மத சகிப்பின்மையையும் நிராகரித்தல்.
 • அகிம்சையை ஊக்குவித்தல் மற்றும் பயங்கரவாதத்தை கொள்கையின் கருவியாக நிராகரித்தல்.
 • இயற்கைச் சூழலின் பாதுகாப்பு உறுதிப்டுத்துதல்.

பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் இதன் உடன்படிக்கையில் கையொப்பமிட வேண்டும்.[7]இதன் அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் எவ்வித தீவிரவாத செயல்களில் ஈடுபடக்கக்கூடாது.[8]

உறுப்பினர்கள்[தொகு]

பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் அமைப்பின் உறுப்பினர்கள்:[9]

உறுப்பினர் சேர்ந்த நாள் பிரதிநிதித்துவ அமைப்பு Ref
அப்காசியா 6 ஆகத்து 1991 அப்காசிய குடியரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் [10]
அச்சே 11 பெப்ரவரி 1991 அச்சே-சுமத்திரா தேசிய விடுதலை முன்னணி [11]
ஆப்ரிகானர்கள் 15 மே 2008 விடுதலை முன்னணி பிளஸ் [12]
அவாஸ் அரேபியர்கள் 14 நவம்பர் 2003 ஜனநாயக அவாஸ் ஒற்றுகைக் கட்சி [13]
அம்பாசோனியா[14] 28 மார்ச்சு 2018 அம்பாசோனியா ஆட்சிமன்றக் குழு [15]
அசிரிய மக்கள் 6 ஆகத்து 1991 பன்னாட்டு அசிரிய மக்கள் கூட்டணி [16]
பலூசிஸ்தான் (பாகிஸ்தான்) 1 மார்ச்சு 2008 பலுசிஸ்தான் தேசியக் கட்சி [17]
பரோட்சேலாந்து [18] 23 நவம்பர் 2013 பரோட்சே தேசிய விடுதலை கூட்டமைப்பு [19]
பெல்லா மக்கள்[20] 6 சூன் 2017 மாலியின் பெல்லா மக்கள் பண்பாட்டு காப்புச் சங்கம் [21]
பயப்பிரா[22] 31 சூலை 2020 பயப்பிரா விடுதலை இயக்கம் [1][23]
பிரித்தானி[24] 8 சூன் 2015 கெல்ச் அன் தெல் [25]
காத்தலோனியர்கள் 14 திசம்பர் 2018 கத்தலோனியர்களின் தேசிய மன்றம் [26]
சிட்டகாங் மலைத்தொடர்[27] 6 ஆகத்து 1991 அமைதிப் படை [28]
வாசிங்டன், டி. சி. 4 திசம்பர் 2015 வாசிங்டன், கொல்ம்பியா மாவட்டம், மாநில அரசு இயக்கம் [29]
கிரிமியாவின் தார்த்தர்கள்[30] 11 பெப்ரவரி 1991 மில்லி மெஜ்ஜிலிஸ் [31]
கிழக்கு துருக்கிஸ்தான் 11 பெப்ரவரி 1991 உலக உய்குர் மக்கள் பேரரவை [32]
ஜில்ஜிட்-பால்டிஸ்தான் 20 செப்டம்பர் 2008 ஜில்ஜிட் பல்திஸ்தன் ஜனநாயகக் கூட்டணி [33]
குவாம் 31 சூலை 2020 குவாம் அரசு [1][23]
அராதின் மக்கள்[34] 18 செப்டம்பர் 2011 மாரிடோனியா நாட்டு அராதின் மக்கள் புரட்சி இயக்கம் [35]
மொங் மக்கள் 2 பெப்ரவரி 2007 உலக மொங் மக்கள் பேரரவை [36]
ஈரானிய குர்துகள் 2 பெப்ரவரி 2007 ஈரானிய குர்துகளின் ஜனநாயக கட்சி [37]
கபிலியா [38] 6 சூன் 2017 எம் ஏ கே- அனவாத் [39]
கெமெர் குரோம்[40] 15 சூலை 2001 கெமர் மக்களின் கம்போடியா-குரோம் கூட்டமைப்பு [41]
லெஸ்கின் மக்கள், அசர்பைஜான்[42] 7 சூலை 2012 லெஸ்கின் தன்னாட்சி தேசியம் மற்றும் பண்பாட்டு கூட்டமைப்பு [43]
மதேசி மக்கள், நேபாளம் 14 அக்டோபர் 2017 மாதேசி மக்களின் விடுதலைக்கான கூட்டமைப்பு [44]
நாகாலிம் மக்கள், நாகாலாந்து & மியான்மர் [45] 23 சனவரி 1993 தேசிய நாகாலிம் சோசலிசக் குழு [46]
ஒகாடென் மக்கள் 6 பெப்ரவரி 2010 ஒகாடென் தேசிய விடுதலை முன்னணி[47] [48]
ஓகோனி மக்கள் 19 சனவரி 1993 ஓகோனி மக்கள் வாழ்வுரிமை இயக்கம் [49] [50]
ஒரோமோ மக்கள்] 19 திசம்பர் 2004 ஒரோமோ விடுதலை முன்னணி [51]
ரெகோபோத் பாஸ்டர்ஸ் [52] 2 பெப்ரவரி 2007 கேப்டன்களின் குழ [53]
சாம்பசி ஆற்றின் இன மக்கள்[54] 31 சூலை 2020 சாம்பசி ஆறு இன மக்கள் வாழ்வுரிமை இயக்கம் [55] [1][23]
சவாய், மேற்கு ஆல்ப்ஸ் மலை[56] 15 சூலை 2014 சவாய் மக்களின் தற்காலிக அரசாங்கம் [57]
சிந்தி மக்கள் 19 சனவரி 2002 உலக சிந்தியர்கள் நிறுவனம்[58] [59]
சோமாலிலாந்து, சோமாலியா 19 திசம்பர் 2004 சோமாலிலாந்து அரசு [60]
தெற்கு மலுக்குகள், இந்தோனேசியா 6 ஆகத்து 1991 தெற்கு மலுக்குகள் குடியரசு[61] [62]
ஈரானிய அஜர்பைஜானியர்கள் [63] 2 பெப்ரவரி 2007 தெற்கு அஜர்பைஜானியர்களின் ஜனநாயகக் கட்சி [64]
தெற்கு மங்கோலியா 2 பெப்ரவரி 2007 தெற்கு மங்கோலியர்கள் மனித உரிமை தகவல் மையம் [65]
சுலு, பிலிப்பீன்சு[66] 5 சனவரி 2015 9 சுலு இனக்குழுக்களின் அறக்கட்டளை [67]
சீனக் குடியரசு தைவான் 11 பெப்ரவரி 1991 தைவான் ஜனநாயக அறக்கட்டளை [68]
திபெத் திபெத் 11 பெப்ரவரி 1991 திபெத்தியர்களின் மைய நிர்வாகம் [69]
ஈரானிய பலுசிஸ்தான் 26 சூன் 2005 பலுசிஸ்தான் மக்கள் கட்சி [70]
மேற்கு டோகோலாந்து மக்கள், கானா[71] 2017 டோகோலாந்து தாயகக் குழு அறக்கட்டளை [72]
யொரூபா மக்கள், நைஜீரியா 31 சூலை 2020 பன்னாட்டு யொரூபா பேரரவை [1][23]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 "UNPO Welcomes 5 New Members!". unpo.org. 3 August 2020. https://unpo.org/article/22010. 
 2. 2.0 2.1 2.2 "UNPO Organizational Structure". UNPO. http://unpo.org/section/2/6. பார்த்த நாள்: 30 January 2015. 
 3. "UNPO World Statesman.org". Worldstatesman. http://www.worldstatesmen.org/International_Organizations2.html. பார்த்த நாள்: 7 February 2012. 
 4. "About UNPO". UNPO. http://www.unpo.org/section/2. பார்த்த நாள்: 7 February 2012. 
 5. Barbara Crossette, Those Knocking, Unheeded, at UN's Doors Find Champion, New York Times, 18 December 1994.
 6. Tishkov, Valerie, An Anthropology of NGOs பரணிடப்பட்டது 2012-02-29 at the வந்தவழி இயந்திரம், Eurozine, July 2008
 7. "UNPO: UNPO Covenant". https://unpo.org/section/2/1. 
 8. Bob, Clifford (2005). The Marketing of Rebellion: Insurgents, Media, and International Activism. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 47–48, 76–77. 
 9. "Members". UNPO. http://unpo.org/members.php. பார்த்த நாள்: 20 June 2020. 
 10. "UNPO: Abkhazia". unpo.org. 16 February 2015. https://unpo.org/members/7854. 
 11. "UNPO: Acheh". unpo.org. 19 January 2018. https://unpo.org/members/7786. 
 12. "UNPO: Afrikaners". unpo.org. 28 July 2017. https://unpo.org/members/8148. 
 13. "UNPO: Ahwazi". unpo.org. 9 November 2017. https://unpo.org/members/7857. 
 14. Ambazonia
 15. "UNPO: Ambazonia". unpo.org. 26 March 2018. https://unpo.org/members/20702. 
 16. "UNPO: Assyria". unpo.org. 19 January 2018. https://unpo.org/members/7859. 
 17. "UNPO: Balochistan". unpo.org. 5 April 2018. https://unpo.org/members/8014. 
 18. Barotseland
 19. "UNPO: Barotseland". unpo.org. 18 August 2015. https://unpo.org/members/16714. 
 20. Bellah People
 21. "UNPO: Bellah People". unpo.org. 6 July 2017. https://unpo.org/members/20198. 
 22. Biafra
 23. 23.0 23.1 23.2 23.3 "Guam: Territory to be Inducted into UNPO". unpo.org. 31 July 2020. https://unpo.org/article/22015. 
 24. Brittany
 25. "UNPO: Brittany". unpo.org. 8 July 2015. https://unpo.org/members/18358. 
 26. "UNPO: UNPO Welcomes the Assemblea Nacional Catalana as its Newest Member". unpo.org. 10 January 2019. https://unpo.org/article/21315. 
 27. Chittagong Hill Tracts conflict
 28. "UNPO: Chittagong Hill Tracts". unpo.org. 31 May 2018. https://unpo.org/members/7867. 
 29. "UNPO: District of Columbia (Washington, DC)". unpo.org. 4 December 2015. https://unpo.org/members/18770. 
 30. Crimean Tatars
 31. "UNPO: Crimean Tatars". unpo.org. 19 October 2017. https://unpo.org/members/7871. 
 32. "UNPO: East Turkestan". unpo.org. 16 December 2015. https://unpo.org/members/7872. 
 33. "UNPO: Gilgit Baltistan". unpo.org. 11 September 2017. https://unpo.org/members/8727. 
 34. Haratin
 35. "UNPO: Haratin". unpo.org. 10 April 2017. https://unpo.org/members/13228. 
 36. "UNPO: Hmong". unpo.org. 17 July 2017. https://unpo.org/members/7891. 
 37. "UNPO: Iranian Kurdistan". unpo.org. https://unpo.org/members/7882. 
 38. Kabylia
 39. "UNPO: Kabylia". unpo.org. 6 July 2017. https://unpo.org/members/20196. 
 40. Khmer-Krom
 41. "UNPO: Khmer-Krom". unpo.org. 30 January 2018. https://unpo.org/members/7887. 
 42. Lezgins
 43. "UNPO: Lezghin". unpo.org. 19 October 2017. https://unpo.org/members/15284. 
 44. "UNPO: Madhesh". unpo.org. 31 October 2017. https://unpo.org/members/20426. 
 45. Nagalim
 46. "UNPO: Nagalim". unpo.org. 17 September 2018. https://unpo.org/members/7899. 
 47. Ogaden National Liberation Front
 48. "UNPO: Ogaden". unpo.org. 12 February 2010. https://unpo.org/members/10714. 
 49. Movement for the Survival of the Ogoni People
 50. "UNPO: Ogoni". unpo.org. 11 September 2017. https://unpo.org/members/7901. 
 51. "UNPO: Oromo". unpo.org. 12 February 2015. https://unpo.org/members/7917. 
 52. Rehoboth Basters
 53. "UNPO: Rehoboth Basters". unpo.org. 11 February 2015. https://unpo.org/members/7881. 
 54. River Races of Zambesia
 55. The Movement for the Survival of the river races in Zambesia
 56. Savoy
 57. "UNPO: Savoy". unpo.org. 8 July 2015. https://unpo.org/members/17344. 
 58. World Sindhi Institute
 59. "UNPO: Sindh". unpo.org. 6 February 2018. https://unpo.org/members/7906. 
 60. "UNPO: Somaliland". unpo.org. 1 February 2017. https://unpo.org/members/7916. 
 61. Republic of South Maluku
 62. "UNPO: South Moluccas". unpo.org. 25 March 2008. https://unpo.org/members/7907. 
 63. Azerbaijan (Iran)
 64. "UNPO: Southern Azerbaijan". unpo.org. 31 January 2017. https://unpo.org/members/7884. 
 65. "UNPO: Southern Mongolia". unpo.org. 25 March 2008. https://unpo.org/members/7883. 
 66. Sulu
 67. "UNPO: Sulu". unpo.org. 5 January 2015. https://unpo.org/members/17809. 
 68. "UNPO: Taiwan". unpo.org. 19 July 2018. https://unpo.org/members/7908. 
 69. "UNPO: Tibet". unpo.org. 23 May 2018. https://unpo.org/members/7879. 
 70. "UNPO: West Balochistan". unpo.org. 22 August 2017. https://unpo.org/members/7922. 
 71. Western Togoland
 72. "UNPO: Western Togoland". unpo.org. 15 November 2017. https://unpo.org/members/20425. 

வெளி இணைப்புகள்[தொகு]