பிரதாப் சிங் ஷா
Appearance
பிரதாப் சிங் ஷா | |
---|---|
நேபாள மன்னர் | |
ஆட்சி | 11 சனவரி 1775 - 17 நவம்பர் 1777 |
முடிசூட்டு விழா | 12 சனவரி 1775[1] |
முன்னிருந்தவர் | பிரிதிவி நாராயணன் ஷா |
பின்வந்தவர் | ராணா பகதூர் ஷா |
துணைவர் | ராணி இராஜேந்திர ராஜ்ஜிய லெட்சுமி தேவி மைஜு ராணி மானேஸ்வரி தேவி ராணி விதுராயணி தேவி |
வாரிசு(கள்) | நரேந்திர ஷா (குழந்தை பருவத்தில் இறப்பு) ராணா பகதூர் ஷா விதுர் பகதூர் ஷா சேர் பகதூர் ஷா |
அரச குலம் | ஷா வம்சம் |
தந்தை | பிரிதிவி நாராயணன் ஷா |
தாய் | ராணி நரேந்திர இராச்சிய லெட்சுமி தேவி |
பிறப்பு | 16 ஏப்ரல் 1751 கோர்க்கா, நேபாளம் |
இறப்பு | 17 நவம்பர் 1777 (அகவை 26) (காச நோய்) காட்மாண்டு, நேபாளம் |
சமயம் | இந்து சமயம் |
பிரதாப் சிங் ஷா (Pratap Singh Shah, King of Nepal) (நேபாளி: प्रतापसिंह शाह) (1751 – 1777)[2] நேபாள இராச்சியத்தை நிறுவிய மன்னர் பிரிதிவி நாராயணன் ஷாவின் இரண்டாவது மகன் ஆவார்.
பிரதாப் சிங் ஷா 24வது வயதில் 1775ல் நேபாள இராச்சியத்தின் மன்னராக முடி சூட்டப்பட்டார். 36 மாதங்கள் இராச்சியத்தை ஆண்ட, பிரதாப் சிங் காசநோயால் தமது 26வது வயதில் காலமானார்.
பிரதாப் சிங் ஷாவின் இரண்டறை வயது மகன் ராணா பகதூர் ஷாவிற்கு பதிலாக பிரதாப் சிங் ஷாவின் பட்டத்து ராணி இராஜேந்திர ராஜ்ஜிய லெட்சுமி தேவி, நேபாள இராச்சியத்தின் அரசப் பிரதிநிதியாக நாட்டை நிர்வகித்தார். பின்னர் ராணா பகதூர் ஷா உரிய வயது அடைந்தவுடன் நேபாள இராச்சியத்தின் மன்னராக முடிசூட்டப்பட்டார்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Royal Ark
- ↑ "Royal Court of Nepal". Archived from the original on 2006-11-10. பார்க்கப்பட்ட நாள் 2017-12-15.