உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் (PMUY)
உஜ்வாலா திட்டம்
நாடுஇந்தியா
பிரதமர்நரேந்திர மோதி
Ministryஎரிசக்தி
Key peopleஹர்தீப்சிங் புரி
துவங்கியது1 மே 2016; 8 ஆண்டுகள் முன்னர் (2016-05-01)
Ballia
தற்போதைய நிலைஇயக்கத்தில்
இணையத்தளம்www.pmujjwalayojana.com

பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் ( PMUY, மொழிபெயர்ப்பு: பிரதம மந்திரி விளக்கு திட்டம்) இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் 1 மே 2016 அன்று வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள (பிபிஎல்) குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு 50 மில்லியன் எல்பிஜி இணைப்புகளை விநியோகிக்க தொடங்கப்பட்டது.[1][2][3] 80 பில்லியன் (US$1.0 பில்லியன்) பட்ஜெட் ஒதுக்கீடு இந்த திட்டத்திற்காக செய்யப்பட்டது.

கண்ணோட்டம்[தொகு]

தொடங்கப்பட்ட முதல் ஆண்டில், 15 மில்லியன் என்ற இலக்குக்கு எதிராக 22 மில்லியன் இணைப்புகள் விநியோகிக்கப்பட்டன. 23 அக்டோபர் 2017 நிலவரப்படி, 30 மில்லியன்(3கோடி) இணைப்புகள் விநியோகிக்கப்பட்டன, அவற்றில் 44% தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.[4] டிசம்பர் 2018க்குள் இந்த எண்ணிக்கை 58 மில்லியனைத்(5.8கோடி) தாண்டியது [5]

2018 ஆம் ஆண்டு இந்திய யூனியன் பட்ஜெட்டில், அதன் நோக்கம் 80 மில்லியன் (8கோடி) ஏழை குடும்பங்களை உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது.[6] 21,000 விழிப்புணர்வு முகாம்கள் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களால் (OMC) நடத்தப்பட்டன.[5] இந்தத் திட்டம் 2014 ஆம் ஆண்டை விட 2019 ஆம் ஆண்டில் எல்பிஜி நுகர்வு 56% அதிகரிக்க வழிவகுத்தது [7]

மிகவும் பிரபலமான இந்த திட்டம் உத்தரபிரதேசத்தில் 14.6 மில்லியன்(1.46கோடி) BPL குடும்பங்கள், மேற்கு வங்கத்தில் 8.8 மில்லியன்(0.88கோடி) , பீகாரில் 8.5(0.85 கோடி) மில்லியன், மத்திய பிரதேசத்தில் 7.1 மில்லியன்(0.71கோடி) மற்றும் ராஜஸ்தானில் 6.3 மில்லியன் (0.63 கோடி) குடும்பங்கள் பயனடைந்துள்ளன.[8] https://pib.gov.in/FactsheetDetails.aspx?Id=148555</ref>

2016 ஏப்ரல் 1ம் தேதி தமிழகத்தில் 1.61கோடி(80.08%) குடும்பங்களுக்கு கேஸ் சிலிண்டர் பெற்றிருந்தனர். இந்த திட்டத்தின் மூலம் கூடுதலாக 32.43 இலட்சத்திற்கும்(3.24 மில்லியன்) அதிகமானோர் பலன்பெற்றனர். 2019ல், 2.02கோடி(97.09%) குடும்பங்கள் எரிஉருளை பெற்றிருந்தனர்.[9][10]

2019 செப் 7ம் தேதி அன்று, இந்த திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி நரேந்திர மோதி 8வதுகோடி பயனாளிக்கு எரி உருளை வழங்கினார்.[11]

2021-2022 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், இந்தத் திட்டத்தின் கீழ் மேலும் 1 கோடி இணைப்புகள் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. உஜ்வாலா முதல் திட்டத்தில் விடுபட்டு போன 1கோடி குடும்பங்களுக்கு எரிஉருளை வழங்கும் உஜ்வாலா திட்டம் II-னை பிரதம மந்திரி 10 ஆகத்து 2021 அன்று துவக்கி வைத்தார்.[12]

2020 ஜனவரியில் பெங்களூருவில் நடைபெற்ற 107வது இந்திய அறிவியல் காங்கிரஸில், “இன்னும் சமையலுக்கு நிலக்கரி அல்லது மரத்தைப் பயன்படுத்தும் 8 கோடி [80 மில்லியன்] பெண்களை அடையாளம் கண்டுகொள்வதற்கும், புதிதாக எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்கும் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு உதவியிருக்கிறது என்று நரேந்திர மோடி அறிவித்தார். தொழில்நுட்பத்தின் உதவியுடன் விநியோக மையங்கள் உருவாக்கப்பட வேண்டும்.[13]

தேசிய குடும்ப சுகாதார ஆய்வுகள் PMUY காரணமாக தூய்மையான சமையல் எரிபொருட்களுக்கான அணுகலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நிரூபிக்கின்றன. தூய்மையான எரிபொருளுக்கான அணுகலில் ஆண்டு வளர்ச்சி 2015 ஆம் ஆண்டில் துரிதப்படுத்தப்பட்டது மற்றும் கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகரித்துள்ளது, 2015 க்கு முன் கிராமப்புறங்களில் 0.8% ஆக இருந்தது, பின்னர் 5.6% ஆக இருந்தது.[14]

மே 2016-இல், 62 சதவீதமாக இருந்த இந்தியவின் எரிஉருளை பயன்படுத்துவோர் எண்ணிக்கையானது 1 ஏப்ரல் 2021 இல் 99.8% ஆக மேம்பட்டுள்ளது.[15]

புள்ளிவிவரம்[தொகு]

உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கையை பெருக்குவதற்கு, கட்டமைப்பினை சீரமைப்பதின் மூலம் கடை நிலையிலுள்ள பயனாளிகளையும் திட்டத்தின் கீழ் கொண்டுவருவது எளிது, அதனால் அரசாங்கம் கட்டமைப்புகளை சீரமைப்பதிலும் முனைந்தது. அதன் மூலம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்புகளும் பெருக்கப்பட்டன.[16]

பொருள் 1 ஏப்ரல் 2014 1 ஏப்ரல் 2022 வளர்ச்சி சதவீதம் %
எரிஉருளை பாட்டில் நிரப்பும் கூடம் (Nos) 186 202 9%
எரிஉருளை நிரப்பும் திறன் (TMPTA) 13535 TMPTA 21573 TMPTA 59%
பொருள் 1 ஏப்ரல் 2014 1 ஏப்ரல் 2022 வளர்ச்சி சதவீதம் %
மொத்த விநியோகஸ்தர்கள் (Nos) 13896 25269 82%
கிராமப் பகுதிகளுக்குரிய விநியோகஸ்தர்கள் (Nos) 6724 17375 158%
பொருள் 1 ஏப்ரல் 2014 1 ஏப்ரல் 2022 வளர்ச்சி சதவீதம் %
வீட்டுப் பயனாளிகள் (கோடி) 14.52 30.53 110%
உஜ்வாலா பயனாளிகள் (கோடி) 0 9
பொருள் 1 ஏப்ரல் 2014 1 ஏப்ரல் 2022 வளர்ச்சி சதவீதம் %
வீட்டு உபயோக எரிஉருளை விற்பனை (TMT) 16041 TMT 25502 TMT 59%
மொத்த எரிஉருளை விற்பனை (வணிக விற்பனை உட்பட) 17639 TMT 28577 TMT 62%

புள்ளிவிவரம் உஜ்வாலா திட்டம் I[தொகு]

2019 செப் 7 அன்று, உஜ்வாலா திட்டம் I-ன் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கை 8கோடியை தொட்டது. பயனாளிகளின் எண்ணிக்கை மாநிலங்கள் வாரியாக பின்வருமாறு.[15][17]

வ.எண் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் 31-03-2017 அன்று வெளியிடப்பட்ட இணைப்புகளின் எண்ணிக்கை 22-05-2019 அன்று வெளியிடப்பட்ட இணைப்புகளின் எண்ணிக்கை மொத்த இணைப்புகள்
1 அந்தமான் நிக்கோபர் தீவுகள் 1,189 7878 9,067
2 ஆந்திரப்பிரதேசம் 63,428 343221 406,649
3 அருணாச்சலப்பிரதேசம் 39565 39565
4 அசாம் 2 2837505 2837507
5 பீகார் 2,476,953 7898945 10,375,898
6 சண்டீகர் 88 88
7 சத்தீசுகர் 1,105,441 2692109 3,797,550
8 தாத்ரா மற்றும் நாகர்வேலி 3,211 14106 17,317
9 டாமன் & டையூ 73 423 496
10 தில்லி 516 73555 74071
11 கோவா 954 1070 2024
12 குசராத் 752354 2522246 3274600
13 அரியானா 278751 679727 958478
14 இமாச்சலப்பிரதேசம் 1,601 112889 114,490
15 சம்மூகாசுமீர் 265,787 1065226 1,331,013
16 சார்கண்ட் 536912 2892151 3429063
17 கருநாடகம் 15,840 2820262 2,836,102
18 கேரளம் 11,241 209826 221,067
19 இலட்சத்தீவுகள் - 289 289
20 மத்தியப்பிரதேசம் 2,239,821 6443604 8,683,425
21 மகாராட்டிரம் 858808 4070602 4929410
22 மணிப்பூர் 25 130922 130947
23 மேகாலயா 140252 140252
24 மிசோரம் 25722 25722
25 நாகலாந்து 49462 49462
26 ஒதிசா 1011955 4229797 5241752
27 புதுச்சேரி 760 13388 14148
28 பஞ்சாப் 245008 1208880 1453888
29 ராசுத்தான் 1722694 5697192 7419886
30 சிக்கிம் 7782 7782
31 தமிழ்நாடு 272749 3147742 3420491
32 தெலுங்கானா 41 923911 923952
33 திரிபுரா 238221 238221
34 உத்திரப்பிரதேசம் 5,531,159 12959693 18,490,852
35 உத்திரகாண்ட் 113866 352768 466634
36 மேற்கு வங்காளம் 2,520,479 8061694 10,582,173
இந்தியா 20,031,618 64013768 91,944,331

உஜ்வாலா திட்டத்தின் மானியம்[தொகு]

கேபினட் அமைச்சரவை வருடந்தோரும் 14.5கி எடையுள்ள 12 எரிஉருளைகளுக்கு ரூ.200 மானியமாக கொடுக்க ஒப்பதளித்தது. 2022-23 நிதியாண்டில் மொத்த செலவு ரூ.6,100 கோடியாகவும், 2023-24ல் ரூ.7,680 கோடியாகவும் இருக்கும். PMUY நுகர்வோரின் சராசரி LPG நுகர்வு 2019-20ல் 3.01 ரீஃபில்களில் இருந்து 2021-22ல் 3.68 ஆக அதிகரித்துள்ளது.[18][19]

வரலாறு[தொகு]

 • 16 அக்டோபர் 2009 இல், இந்திய அரசு RGGLV (ராஜீவ் காந்தி கிராமின் LPG விதாரக் யோஜனா) திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இந்த திட்டத்தின் நோக்கமானது எரிஉருளை ஊடுருவலை அதிகரிக்கவும் தொலைதூர மற்றும் அணுக முடியாத பகுதிகளில் திரவ பெட்ரோலிய எரிவாயு விநியோகஸ்தர்களை நிறுவுவதாகும்.[20]
 • 2009 ஆம் ஆண்டில், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு (பிபிஎல்) LPG இணைப்புகளுக்கு ஒரு முறை நிதி உதவி வழங்கும் திட்டத்தையும் அரசாங்கம் தொடங்கியது. அரசாங்கத்தின் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் (OMCs) பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) நிதி மூலம் இந்த உதவி வழங்கப்பட்டது.
 • 2015ல் ராஜிவ்காந்தி கிராமின் எரிஉருளை விதாரக் திட்டம் நிறுத்தப்பட்டது.[21]
 • 2009லிருந்து 2016 வரை, உஜ்வாலா திட்டத்திற்கு முன்பே 1.62கோடி குடும்பங்களுக்கு எரிஉருளை வழங்கப்பட்டிருந்தது.

மூன்று தென் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியில் (தமிழ்நாட்டில் வறுமைகோட்டிற்கு கீழுள்ள குடும்பத்திற்கு 29,38,907 எரிஉருளை இணைப்புகளும், புதுச்சேரியில் 85,437 எரிஉருளை இணைப்புகளும், ஆந்திரப் பிரதேசத்தில் தீபம் திட்டத்தின் கீழ் 35,04,653 எரிஉருளை இணைப்புகளும் மற்றும் தெலங்கானாவில் தீபம் திட்டத்தின் கீழ் 22,25,078 இணைப்புகளும்) மொத்தமாக 87,54,075 இலவச எரிஉருளை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

31 மார்ச் 2016 அன்று பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் வறுமைகோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட எரிஉருளை வாங்கும் நிதியுதவி நிறுத்தப்பட்டது.[22]

மேலும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

 1. "Scheme for LPG to BPL families to be launched in Odisha", தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 7 June 2016
 2. Raja, Aditi (16 May 2016). "Pradhan Mantri Ujjwala Yojana: "UPA govt left coffers empty, making it difficult for us"". இந்தியன் எக்சுபிரசு. http://indianexpress.com/article/india/india-news-india/upa-left-empty-coffers-amit-shah-in-dahod-2802047/. 
 3. "Modi's pet projects PMUY, Urja Ganga to cross Himalayan borders to Nepal", பிசினஸ் ஸ்டாண்டர்ட், 28 March 2017
 4. "Pradhan Mantri Ujjwala Yojana: 3 cr LPG connections already issued, Oil Min seeks to serve another 3 cr beneficiaries", Financial Express, 1 November 2017
 5. 5.0 5.1 Sharma, Anshu (19 December 2018), "Government expands eligibility criteria to meet Pradhan Mantri Ujjwala Yojana target", CNBC TV18
 6. "Budget 2018: Ujjwala scheme to cover 80 million families, says Arun Jaitley", Live Mint, 1 February 2018
 7. "Ujjwala scheme boosts India's LPG consumption to a record high in FY19", பிசினஸ் ஸ்டாண்டர்ட், 3 May 2019
 8. "PMUY: How to avail full benefits of Ujjwala Yojana", Live Mint, 14 September 2019
 9. https://www.thehindu.com/news/cities/chennai/thanks-to-ujjwala-scheme-lpg-coverage-in-tn-to-touch-100/article26242160.ece
 10. https://www.thehindu.com/news/cities/chennai/174-lakh-connections-provided-under-ujjwala-20-in-tn/article37919495.ece
 11. https://www.livemint.com/news/india/eight-croreth-beneficiary-of-ujjwala-scheme-plans-biryani-on-new-connection-1567956591922.html
 12. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743813
 13. "Rural India's economic strength linked to young scientists: PM in Bengaluru". ஹிந்துஸ்தான் டைம்ஸ். January 3, 2020. https://www.hindustantimes.com/india-news/new-india-needs-logical-temperament-to-give-direction-to-socioeconomic-development-pm/story-82yJdEd1bKJXjBp8s7q4oK.html. 
 14. "New Welfarism of Modi govt represents distinctive approach to redistribution and inclusion". The Indian Express (in ஆங்கிலம்). 2020-12-22. பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
 15. 15.0 15.1 https://pib.gov.in/FactsheetDetails.aspx?Id=148555
 16. https://www.pmuy.gov.in/index.aspx
 17. https://popbox.co.in/released-connections.html
 18. https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1910516
 19. https://www.livemint.com/news/india/govt-extends-rs-200-subsidy-on-lpg-cylinder-under-ujjwala-scheme-by-1-year-11679676142158.html
 20. https://vikaspedia.in/energy/policy-support/others
 21. https://www.financialexpress.com/economy/rural-lpg-scheme-halted/114458/
 22. https://thewire.in/government/pradhan-mantri-ujjwala-yojana-separating-fact-from-fiction