பிரதமரின் யோகா விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதமரின் யோகா விருதுகள்
PM Yoga Awards
விருது வழங்குவதற்கான காரணம்யோகாவின் ஊக்குவிப்பு மற்றும் மேம்பாடு
நாடு இந்தியா
வழங்குபவர்இந்தியா பிரதமர்
வெகுமதி(கள்)சுழற்கோப்பை, சான்றிதழ், இந்திய ரூபாய் 2.5 மில்லியன்
முதலில் வழங்கப்பட்டது2017
கடைசியாக வழங்கப்பட்டது2019

பிரதமரின் யோகா விருதுகள் (PM Yoga Awards), யோகா ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான சிறந்த பங்களிப்பிற்கான பிரதமரின் விருதுகள் என அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டது. இந்த விருது யோகாவினை ஊக்கப்படுத்தி மேம்பாடு அடையப் பங்களிப்போரினை அங்கீகரிப்பதற்காக இந்தியப் பிரதமரால் வழங்கப்படும் வருடாந்திர விருதுகள் இந்த விருதானது 21 சூன் 2016 அன்று சண்டிகரில் இரண்டாவது பன்னாட்டு யோகா நாளின் போது பிரதமர் நரேந்திர மோதியால் முதன் முதலாக வழங்கப்பட்டது.[1]

விருது[தொகு]

இந்த விருதினை பெறும் தனிநபர்/நிறுவனம் கோப்பை, சான்றிதழ் மற்றும் தலா 2.5 மில்லியன் ரொக்கப் பரிசு ஆகியவற்றைப் பெறுவர். இது நான்கு பிரிவுகளின் கீழ் இந்த விருது வழங்கப்படுகிறது.

  • தனிநபர் (தேசிய அளவில்)
  • தனிநபர் (பன்னாட்டு அளவில்)
  • அமைப்பு (தேசிய அளவில்)
  • அமைப்பு (பன்னாட்டு அளவில்)

விருது பெற்றவர்களின் பட்டியல்[தொகு]

ஆண்டு தனிநபர் (தேசியம்) தனிநபர் (பன்னாடு) அமைப்பு (தேசியம்) அமைப்பு (பன்னாடு) மேற்கோள்
2017 ரமாமணி ஐயங்கார் நினைவு யோகா நிறுவனம், புனே [2]
2018 விசுவாசு வசந்த் மாண்ட்லிக் யோகா நிறுவனம், மும்பை [3]
2019 சுவாமி ராஜர்ஷி முனி
(லைஃப் மிசன்,குசராத்து)
அன்டோனிட்டா ரோஸி
(இத்தாலி)
பீகார் யோகா பள்ளி, முங்கர்
(பீகார்)
சப்பான் யோகா நிகேதன்
(சப்பான்)
[4]
2021 பிக்கு சங்கசேன
(லடாக்)[5]
ரோஜோ ரோட்ரிக்சு
(பிரேசில்)
தெய்வீக வாழ்க்கை சங்கம்
(தி டிவைன் லைப் சொசைட்டி, உத்தராகண்டம்)
யோகாவின் பிரித்தானிய வீல்
(ஐக்கிய இராச்சியம்)
[6]

தேர்வு முறை[தொகு]

விருதுகளுக்கான வழிகாட்டுதல்களை ஆயுஷ் அமைச்சகம் உருவாக்கியுள்ளது. விருதுகளுக்கான பரிந்துரைகள் திறந்த விளம்பரம் மூலம் கோரப்படுகின்றன. பரிந்துரைகளை இரண்டு குழுக்கள் மதிப்பீடு செய்யும். முதல் குழு விண்ணப்பங்களைத் திறத் தணிக்கை செய்யும். இரண்டாவது குழு விருதாளர்களை தேர்வு செய்யும்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.dinamani.com/india/2016/jun/22/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-2529076.html
  2. "International Yoga Day 2017: Pune institute selected for Prime Minister's Yoga award". பார்க்கப்பட்ட நாள் 31 August 2019.
  3. "Prime Minister's Awards for Outstanding Contribution for Promotion and Development of Yoga - 2018". பார்க்கப்பட்ட நாள் 31 August 2019.
  4. "Italian teacher, Japan Yoga Niketan among recipients of 2019 Yoga award". பார்க்கப்பட்ட நாள் 31 August 2019.
  5. https://www.aninews.in/news/national/general-news/bhikkhu-sanghasena-recipient-of-pm-yoga-awards-2021-to-organise-biggest-yoga-camp-alongside-ladakhs-pangong-lake20220621013333/
  6. https://currentaffairs.adda247.com/pm-yoga-awards-2022-announced/

வெளி இணைப்புகள்[தொகு]