பிரணிதா தலுக்தார்
பிரணிதா தலுக்தார் | |
---|---|
![]() | |
அசாம் சட்டமன்றம் | |
பதவியில் 1967–1978 | |
முன்னையவர் | அக்ஷய் குமார் தாஸ் |
பின்னவர் | ஹேமன் தாஸ் |
தொகுதி | சர்போக் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1935 |
இறப்பு | 20 ஏப்ரல் 2019 (வயது 83-84) |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிரணிதா தலுக்தார் இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியரும், சமூக சேவகரும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும் ஆவார். அசாமின் சர்போக்கிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக அசாம் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுயசரிதை
[தொகு]பிரணிதா 1935இல் பிறந்தார். இவரது கணவர் கணேசியாம் தலுக்தார் பர்னாகர் கல்லூரியை நிறுவினார். மேலும், அசாம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[1] இவர், சொராலி மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராகவும், பர்னாகர் கல்லூரி, பார்பேட்டா சோராலி கல்லூரி ஆகியவற்றின் ஆசிரியராகவும் இருந்தார்.[2]
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]1967 ல் சர்போக்கிலிருந்து அசாம் சட்டமன்ற உறுப்பினராக பிரணிதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 1972இல் சர்போக்கிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]
விருது
[தொகு]தலுக்தார் பெண்களின் வளர்ச்சிக்காகப் பணிகளை செய்தார். இவர் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல சங்கத்தின் தலைவராக இருந்தார்.[2] மகளிர் அதிகாரமளிப்பதில் இவர் செய்த பங்களிப்புக்காக 2013ஆம் ஆண்டில் நாரி சக்தி விருது பெற்றார்.[5][6][7]
இறப்பு
[தொகு]தலுக்தார் 20 ஏப்ரல் 2019 அன்று இறந்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "সৰভোগৰ প্রাক্তন বিধায়িকা প্ৰণীতা তালুকদাৰৰ দেহাৱসান". NE Now (in அஸ்ஸாமீஸ்). 21 April 2019. Archived from the original on 31 அக்டோபர் 2019. Retrieved 31 October 2019.
- ↑ 2.0 2.1 2.2 "সৰভোগৰ প্রাক্তন বিধায়িকা প্ৰণীতা তালুকদাৰৰ দেহাৱসান". NE Now (in அஸ்ஸாமீஸ்). 21 April 2019. Archived from the original on 31 அக்டோபர் 2019. Retrieved 31 October 2019.
- ↑ "Assam Legislative Assembly - MLA 1967-72". Assam Legislative Assembly. Retrieved 31 October 2019.
- ↑ "Assam Legislative Assembly - MLA 1972-78". Assam Legislative Assembly. Retrieved 31 October 2019.
- ↑ "Pranab Mukherjee bestows Rani Laxmi Bai award on Delhi gangrape victim". The Indian Express. 8 March 2013. Retrieved 31 October 2019.
- ↑ "Rani Lakshmibai award for Delhi braveheart". The Hindu. 8 March 2013. Retrieved 31 October 2019.
- ↑ "President gives Stree Shakti awards on International Women's Day". News18. 9 March 2013. Retrieved 31 October 2019.