உள்ளடக்கத்துக்குச் செல்

பிரணதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரணதி
பிறப்பு19 ஏப்ரல் 1987 (1987-04-19) (அகவை 37) [1]
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2004-2005
பெற்றோர்ஜோஸ் (நடிகர்), ரத்னபிரபா
வாழ்க்கைத்
துணை
மரு. சிவராஜன் (2011 – தற்ப்போது வரை)

பிரணதி (Pranathi) என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் மலையாள திரையுலகில் அறிமுகமானார். இவர் கம்பீரம் (2004) படத்தில் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார், பின்னர் இவர் தமிழ், கன்னடம், மலையாள படங்களிலும் தோன்றினார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

பிராணதி மலையாள நடிகர் ஜோஸ் மற்றும் ரத்னபிரபா ஆகியோருக்கு 1987 ஏப்ரல் 19 அன்று பிறந்தார். இவர் 2011 செப்டம்பரில் டாக்டர் சிவராஜனை மணந்தார் [3]

தொழில்

[தொகு]

இவர் ஜெயராஜின் மலையாள வெற்றித் திரைப்படமான 4 தி பீப்பிள் (2004) படத்தில் பிரணதி பரத்துடன் இணைந்து அறிமுகமானார். 2005 ஆம் ஆண்டில், நடிகர் ஜெய் ஆகாசுடன் குருதேவா மற்றும் காற்றுள்ளவரை படங்களைத் தயாரிக்கும் போது, இந்த ஜோடி ஊர்சுற்றியதாக தகவல்கள் வெளியாயின.[4] 2005 ஆம் ஆண்டு, இவருக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டு இவர் சந்தோஷா என்ற கன்னட திரைப்படத்திலும், சத்யராஜ் நடித்த வணக்கம் தலைவாவிலும் தோன்றினார்.[5]

மேலதிக படவாய்ப்புகளைப் பெற இயலாமல் போனதால் இவர் விரைவில் திரைத்துறையிலிருந்து விலகினார்.

திரைப்படவியல்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2004 4 தி பீப்பிள் டீனா மலையாளம்
2004 கம்பீரம் சரோஜா தமிழ்
2005 குருதேவா தேவா தமிழ்
2005 சந்தோஷா ரம்யா கன்னடம்
2005 காற்றுள்ளவரை நர்மதா தமிழ்
2005 வணக்கம் தலைவா ரம்யா தமிழ்
2006 சாரதா சரதகா ஸ்ரீ / மாயா தெலுங்கு

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரணதி&oldid=4014706" இலிருந்து மீள்விக்கப்பட்டது