பிரடெரிக் வெல்ட்
| நியூசிலாந்து 6-ஆவது பிரதமர் | |
|---|---|
| பதவியில் 24 நவம்பர் 1864 – 16 அக்டோபர் 1865 | |
| ஆட்சியாளர் | விக்டோரியா |
| நீரிணை குடியேற்றங்களின் 12-ஆவது ஆளுநர் | |
| பதவியில் 16 மே 1880 – 17 அக்டோபர் 1887 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 9 மே 1823 டோர்செட், இங்கிலாந்து |
| இறப்பு | 20 சூலை 1891 (வயது 68) டோர்செட், இங்கிலாந்து |
| துணைவர் | ஃபிலுமெனா மேரி ஆன் லிசில் பிலிப்ஸ் |
| பிள்ளைகள் | 13 |
| பெற்றோர் | அம்ப்ரி வெல்ட் கிறிஸ்டினா மரியா |
| கையெழுத்து | |
சர் பிரடெரிக் வெல்ட் (Sir Frederick Aloysius Weld) (GCMG) (9 மே 1823 – 20 சூலை 1891) என்பவர் நியூசிலாந்து அரசியல்வாதி; ஓசியானியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்த பல்வேறு பிரித்தானிய காலனிய ஆட்சியில் பல ஆளுநர் பதவிகளை வகித்த ஒரு பிரித்தானிய குடியேற்ற நிர்வாகி ஆவார்.[1] மலாயாவின் முதல் தொடருந்து பாதையான தைப்பிங் - போர்ட் வெல்ட் தொடருந்து பாதையை உருவாக்கியதற்காக இவர் மலேசியாவில் இன்றும் நினைவு கூரப்படுகிறார்.[2]
இவர் நியூசிலாந்தின் ஆறாவது பிரதமராகப் பதவி வகித்தவர்; பின்னர் மேற்கு ஆத்திரேலியாவின் ஆளுநராகவும், தாஸ்மேனியாவின் ஆளுநராகவும், மலாயா நீரிணை குடியேற்றங்களின் 12-ஆவது ஆளுநராகவும் பணியாற்றினார்.[3]
வாழ்க்கை
[தொகு]நீரிணை குடியேற்றங்களின் ஆளுநர்
[தொகு]1880-ஆம் ஆண்டில், சர் பிரடெரிக் வெல்ட் நீரிணைக் குடியேற்றப் பகுதிகளுக்கு வந்தார். மலாய் மாநிலங்களின் வளர்ச்சியில் அவர் தனிப்பட்ட அக்கறை காட்டத் தொடங்கினார். 1881-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், வெல்ட் பேராக்கில் உள்ள தைப்பிங் நகரத்திற்குச் சென்றார். அங்கு பொது போக்குவரத்து வசதிகள் மிகக் குறைவாக இருப்பதை அறிந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டார்.[3]
மலாயாவில் அமைக்கப்பட்ட முதலாவது தொடருந்து பாதை, தைப்பிங் - போர்ட் வெல்ட் தொடருந்து பாதை (Taiping – Port Weld railway) ஆகும். போர்ட் வெல்ட் என்பது தற்போது கோலா சபெத்தாங் (Kuala Sepetang) என்று அழைக்கப் படுகிறது. இந்தத் தொடருந்து பாதை 1885-ஆம் ஆண்டு உருவாக்கப் பட்டது. 1880-ஆம் ஆண்டு பெரடரிக் வெல்ட் நீரிணை குடியேற்றங்களின் ஆளுநராக மலாயாவுக்கு வந்தார். இவர் ஏற்கனவே 1864-ஆம் ஆண்டில் நியூசிலாந்து பிரதமராகப் பதவி வகித்தவர். அவரின் அரிய முயற்சியால் தைப்பிங்-போர்ட் வெல்ட் தொடருந்து வழித்தடம் உருவாக்கப்பட்டது.[3]
சேவைகள்
[தொகு]
1881-ஆம் ஆண்டில் தைப்பிங் புறநகர்ப் பகுதியில் ஈய வருமானம் சிறப்பாக இருப்பதை பிரடெரிக் வெல்ட் உணர்ந்தார். அப்போது பேராக் மாநிலத்தின் பிரித்தானிய ஆளுநராக சர் இயூ லோ (Hugh Low) இருந்தார். பின்னர் தைப்பிங்கிற்கும் போர்ட் வெல்ட்டிற்கும் இடையில் தொடருந்து பாதை உருவாக்கப்பட்டது.[4][5] 1885-ஆம் ஆண்டு சூன் 1-ஆம் தேதி மலாயாவின் முதல் தொடருந்து பாதை திறக்கப்பட்டது. 13 கிலோமீட்டர் தூரப் பாதை. கட்டுவதற்கு £7000 பவுண்டு பிடித்தது. இரண்டாம் உலகப் போரின் போது அந்தப் பாதை சேதம் அடைந்தது. தற்போது பயன்பாட்டில் இல்லை.[4]
வெல்ட், 1875 முதல் 1880 வரை தசுமேனியாவின் ஆளுநராக இருந்தார்.[6] பின்னர் 1880 முதல் 1887 வரை, மலாக்கா, பினாங்கு மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றை உள்ளடக்கிய நீரிணைக் குடியேற்றங்களின் ஆளுநராக இருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் அவர் சிங்கப்பூரில் ஏழு ஆண்டுகள் இருந்தார். அவரின் சேவைகளுக்காக அவருக்கு 1885-ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தின் சர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.[7][8]
இறுதியாக 1887-இல் அரசியல் வாழ்க்கையிலிருந்து அவர் ஓய்வு பெற்றார். 1891-ஆம் ஆண்டில், மீண்டும் நீரிணைக் குடியேற்றங்களுக்கு வருகை தந்தபோது, அவர் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு இங்கிலாந்து திரும்பினார். அவர் சூலை 20, 1891 அன்று சிடியோக் நகரில் காலமானார்.[9]
மலாயா சிங்கப்பூர் நினைவிடங்கள்
[தொகு]- பேராக்கில் உள்ள போர்ட் வெல்ட்; தற்போதைய பெயர் கோலா சபெத்தாங்
- கோலாலம்பூரில் உள்ள வெல்ட் சாலை; 1960-இல் பெயரிடப்பட்டது. 1982-ஆம் ஆண்டில் இந்தச் சாலை ராஜா சூலான் எனும் பெயரால் ராஜா சூலான் சாலை என மறுபெயரிடப்பட்டது. ஆனாலும் அந்தச் சாலையில் 1980-களில் உருவாக்கப்பட்ட ஒரு வணிக வளாகம் "தி வெல்ட்" என்ற பெயரை இன்று வரையிலும் தக்க வைத்துள்ளது.
- கோலாலம்பூரில் உள்ள வெல்ட் குன்று (Weld Hill); பின்னர் புக்கிட் மக்காமா (Bukit Mahkamah) என மறுபெயரிடப்பட்டது. அங்கு தற்போது மலாயா வங்கிக் கோபுரம் அமைந்துள்ளது.
- சிங்கப்பூரில் வெல்ட் சாலை; அப்பர் வெல்ட் சாலை (Upper Weld Road)
- பினாங்கு ஜார்ஜ் டவுன், பினாங்கில் ஜார்ஜ் டவுன் வெல்ட் கீ (Weld Quay, George Town)
மேலும் காண்க
[தொகு]- ஆண்ட்ரு கிளார்க்
- இயூ கிளிபர்ட்
- பிராங்க் சுவெட்டன்காம்
- நீரிணை குடியேற்றங்களின் ஆளுநர்கள் பட்டியல்
- பேராக் மாநிலத்தின் பிரித்தானிய முதல்வர்களின் பட்டியல்
மேலும் படிக்க
[தொகு]- Prime Ministers’ Office (New Zealand) biography
- Louch, T. S. (1966). "Appendix A: Governor Weld Patron of the Club". The First Fifty Years: The History of the Weld Club (1871–1921). Perth, Western Australia: The Weld Club.
- Prof. Khoo Kay Kim, (2003) Taiping, PerakThe Vibrant Years, OFA Desyne (Kuala Lumpur), Cataloguing in National Library of Malaysia, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 983-2759-01-3
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Weld, Frederick Aloysius - Dictionary of New Zealand Biography | Te Ara". teara.govt.nz (in ஆங்கிலம்). Retrieved 6 December 2025.
- ↑ "How Malaysia's first railway was built (1885)". Malaysia 1786 - 1957 (in ஆங்கிலம்). 19 June 2023. Retrieved 6 December 2025.
- ↑ 3.0 3.1 3.2 Louch, T. S. "Sir Frederick Aloysius Weld (1823–1891)". Australian Dictionary of Biography (in ஆங்கிலம்). National Centre of Biography, Australian National University. Retrieved 6 December 2025.
- ↑ 4.0 4.1 Letters to Henrietta By Isabella Lucy Bird, Kay Chubbuck, Henrietta Amelia Bird Contributor Kay Chubbuck Published by UPNE, 2003; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55553-554-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55553-554-4
- ↑ Southeast Asia: A Historical Encyclopedia, from Angkor Wat to East Timor By Keat Gin Ooi; Contributor Keat Gin Ooi Published by ABC-CLIO, 2004; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57607-770-5, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57607-770-2
- ↑ ""At Last She Moves" A Pioneer Of Empire.". The West Australian (Perth: National Library of Australia): p. 20. 1 July 1950. http://nla.gov.au/nla.news-article47872166.
- ↑ "No. 24848". இலண்டன் கசெட். 28 May 1880. p. 3220.
- ↑ "No. 25477". இலண்டன் கசெட். 6 June 1885. pp. 2631–2632.
- ↑ Graham, Jeanine. "Weld, Frederick Aloysius". Dictionary of New Zealand Biography. Ministry for Culture and Heritage. Retrieved 24 July 2013.
வெளி இணைப்புகள்
[தொகு]- Frederick Weld by Jeanine Graham, 1983, Published by Auckland University Press & Oxford University Press.
- Hints To Intending Sheep-Farmers In New Zealand, by Frederick Weld, 3rd edition published London 1860.
- Notes on New Zealand Affairs, by Frederick Weld, published London 1869.