பிரடெரிக் நோர்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிரடெரிக் நோத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரடரிக் நோர்த்

சர் பிரடெரிக் நோர்த் (Frederick North, 5th Earl of Guilford, பெப்ரவரி 7, 1766அக்டோபர் 14 1827) ஒரு பிரித்தானிய அரசியவாதி மற்றும் குடியேற்றவாத நிருவாகி. இவர் ஐக்கிய இராச்சியத்தின் முடிக்குட்பட்ட நாடாக இலங்கை மாறியதன் பின்னர் முதலாவது பிரித்தானிய தேசாதிபதி ஆவார். பிரித்தானிய அரசால் அக்டோபர் 12 1798 அன்று இவர் நியமிக்கப்பட்டார்; சூலை 19 1805 வரை பதவி வகித்தார்.

முக்கிய சீர்த்திருத்தங்கள்[தொகு]

இலங்கை தேசாதிபதியின் கொடி

இவரால் செய்யப்பட்ட முக்கிய சீர்த்திருத்தங்களாவன:

 • நிலவரிகளை வசூலிக்க மாகாண அதிகாரிகளை நியமித்தல்.
 • அமிர்தார்கள் நீக்கப்பட்டு முகாந்திரம்கள் நியமனம் பெற்றமை. (இவர்களுக்கு வேதனம் வழங்கப்பட்டது)
 • புதிய இலாகாக்கள் அமைக்கப்பட்டன. (உதாரணம்: தபால், கல்வி, சுகாதாரம், நில அளவை போன் இலாக்காக்கள்)
 • கறுவா உற்பத்திப் பகுதிகளுக்குப் பொறுப்பாக ஒரு பிரித்தானிய அதிகாரி நியமிக்கப்பட்டார்.
 • கிரிமினல் நீதிமன்றம், உயர்நீதிமன்றம் போன்றன அமைக்கப்பட்டன.
 • இலங்கையின் சட்டமரபுகளையும், ஒல்லாந்த நீதிமுறைகளையும் உள்ளடக்கிய இலங்கையின் சட்டத்தொகுதியொன்று உருவாக்கப்பட்டது.
 • சுதேச பாடசாலைகள் நிறுவப்பட்டு, ஆசிரியர்களுக்கு வேதனம் வழங்கப்பட்டது.
 • முத்துராஜவெல திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
 • அம்மைப்பால் கட்டும் முறை ஆரம்பிக்கப்பட்டது.
 • அரசாங்க வர்த்தமானி அறிமுகப்படுத்தப்பட்டது.

கட்டுக்கோப்பான நிர்வாகம்[தொகு]

இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சிக்குட்பட்டிருந்த பிரதேசங்களில் ஒரு கட்டுக்கோப்பான நிர்வாகத்தை ஏற்படுத்துவதில் இவரின் பணி அளப்பரியதாகக் கொள்ளப்படுகின்றது.

உசாத்துணை[தொகு]

 • மெண்டிஸ், ஜீ. ஸி. நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், முதலாம் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி - 1969
 • பீ. எம். புன்னியாமீன். வரலாறு ஆண்டு 11 சிந்தனை வட்டம் 1998

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரடெரிக்_நோர்த்&oldid=2427999" இருந்து மீள்விக்கப்பட்டது