பிரடெரிக் தெபெல் பென்னெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரடெரிக் தெபெல் பென்னெட் (Frederick Debell Bennett) இங்கிலாந்தைச் சேர்ந்த ஓர் உயிரியலாளர் ஆவார். இவர் வாழ்ந்த காலம் 1806 ஆம் ஆண்டு முதல் 1859 ஆம் ஆண்டு வரையுள்ள காலமாகும். அறுவை மருத்துவர்களின் இராயல் கல்லுரியிலும் இராயல் புவியியல் கழகத்திலும் பென்னெட் உறுப்பினராக இருந்தார். இங்கிலாந்து நாட்டின் தேவான் மாகாணத்தில் பென்னெட் பிறந்தார். 1828 ஆம் ஆண்டில் மருந்து விற்பனையாளர் சங்கத்தின் உரிமத்தையும் 1829 ஆம் ஆண்டில் அறுவை மருத்துவர்களின் இராயல் கல்லூரியின் உறுப்பினர் என்ற தகுதியையும் பெற்றார். பென்னட் முதன்முதலில் தேம்சு நதியில் நங்கூரமிட்டிருந்த மருத்துவக் கப்பலான கிராம்பசில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றினார். பின்னர் 1833 ஆம் ஆண்டில் இலண்டன் திமிங்கல வேட்டைக் கப்பலான டசுக்கனில் சேர்ந்தார். 1833 ஆம் ஆன்டு முதல் 1836 ஆம் ஆண்டு வரை இதே கப்பலில் உலகம் முழுவதும் பயணம் செய்தார். இந்த பயணத்தின் நோக்கம் திமிங்கலங்களையும் நிலப்பகுதி மற்றும் இயற்கையையும் ஆய்வு செய்வதாக அமைந்திருந்தது. திமிங்கலங்களின் பல இனங்களை பென்னெட் விவரித்திருக்கிறார். ரெமோரா ஆசுட்ராலிசு எனப்படும் உறிஞ்சும் இன திமிங்கலங்கள், நீள் சிறகு கடற்பறவை இனம், ஆப்பிரிக்க பறக்கும் மீன் போன்றவை சில உதாரணங்களாகும். மத்திய இலண்டனிலுள்ள சவுத்வார்க் மாவட்டத்திற்குத் திரும்பிய பின்னர் பென்னெட் மருத்துவம் பார்க்கத் தொடங்கினார். இங்குதான் 1859 ஆம் ஆண்டு தன்னுடைய 53 ஆம் வயதில் இறந்தார். [1]

புத்தகம்[தொகு]

1833 ஆம் ஆண்டு முதல் 1836 ஆம் ஆண்டு வரையிலான உலக திமிங்கலப் பயணம் என்ற நூலை எழுதி இலண்டனில் 1940 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Druett, Joan, Rough Medicine: Surgeons at Sea in the Age of Sail. New York: Routledge, 2001, pp. 40-41; 213.

புற இணைப்புகள்[தொகு]