உள்ளடக்கத்துக்குச் செல்

பிரடெரிக் சோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரடெரிக் சோடி
1921ஆம் ஆண்டில் சோடி
1921ஆம் ஆண்டில் சோடி
பிறப்பு (1877-09-02)2 செப்டம்பர் 1877
ஈஸ்ட்போர்ன், சசெக்சு, இங்கிலாந்து
இறப்பு22 செப்டம்பர் 1956(1956-09-22) (அகவை 79)
பிரைட்டன், சசெக்சு, இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
துறை
நிறுவனம்
Alma mater
அறியப்பட்டது
  • அணுக்கரு மாற்றம்
  • ஓரிடத்தான்கள் கண்டுபிடிப்பு
  • ஃபாஜன் மற்றும் சோடியின் கதிரியக்க இடப்பெயர்ச்சி விதி
  • வெப்பப்பொருளியல்
  • எர்கோசோஃபி
  • சோடி வட்டங்கள்
  • சோடியின் ஹெக்ஸ்லெட்
பரிசுகள்

பிரடெரிக் சோடி (Frederick Soddy) (2 செப்டம்பர் 1877-22 செப்டம்பர் 1956) என்பவர் ஒரு பிரித்தானிய கதிரியக்க வேதியியலாளர் ஆவார். இவர் எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டுடன் இணைந்து, கதிரியக்கம் என்பது என்பது தனிமங்களில் ஏற்படும் அணுக்கரு வினைகளின் மாற்றத்தால் ஏற்படுகிறது என்பதை வெளிப்படுத்தியர் ஆவார். இவர் சில கதிரியக்க தனிமங்களின் ஓரிடத்தான்கள் )ஐசோடோப்புகள்) இருப்பதை நிரூபித்தார். [2][3][4] 1921 ஆம் ஆண்டில், "கதிரியக்க பொருட்களின் வேதியியல் பற்றிய நமது அறிவுக்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காகவும், ஐசோடோப்புகளின் தோற்றம் மற்றும் தன்மை குறித்த அவரது ஆய்வுகளுக்காகவும்" வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். சோடி வேதியியல், அணு இயற்பியல், புள்ளியியல் இயந்திரவியல், நிதி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற ஒரு பன்முக அறிஞர் ஆவார்.[5][6]

வாழ்க்கை வரலாறு

[தொகு]

சோடி இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்னில் உள்ள 6 போல்டன் சாலையில் சோள வணிகரான பெஞ்சமின் சோடி மற்றும் அவரது மனைவி ஹன்னா கிரீன் ஆகியோரின் மகனாகப் பிறந்தார்.[7] இவர் ஈஸ்ட்போர்ன் கல்லூரியில் பள்ளிக்குச் சென்றார், அபெரிஸ்ட்வித்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகக் கல்லூரியிலும், ஆக்ஸ்போர்டின் மெர்டன் கல்லூரியிலும் படித்தார், அங்கு இவர் 1898 இல் வேதியியலில் முதல் வகுப்பு தனிச்சிறப்புத் தகுதியுடன் பட்டம் பெற்றார். 1898 முதல் 1900 வரை ஆக்ஸ்போர்டில் ஆராய்ச்சியாளராக இருந்தார்.

அறிவியல் தொழில் வாழ்க்கை

[தொகு]

1900 ஆம் ஆண்டில், கியூபெக் மாண்ட்ரீலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் ஒரு செயல்முறை விளக்குநராக ஆனார், அங்கு இவர் எர்னஸ்ட் ரதர்ஃபோர்டுடன் கதிரியக்கம் சார்ந்த துறையில் பணியாற்றினார்.[8] கதிரியக்கத் தனிமங்களின் முரண்பாடான நடத்தையானது அவை மற்ற தனிமங்களாக சிதைந்ததால் தான் என்பதை இவரும் ரதர்ஃபோர்டும் உணர்ந்தனர். இந்தச் சிதைவு ஆல்பா, பீட்டா மற்றும் காமா கதிர்வீச்சையும் உருவாக்கியது. கதிரியக்கம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது, காரணம் என்னவென்று யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. அணு மாற்றம் உண்மையில் நிகழ்கிறது என்பதை நிரூபிக்க சோடி மற்றும் ரதர்ஃபோர்டு ஆகியோரின் மிகக்கவனமான பணி தேவைப்பட்டது.[9]

விருதுகளும், பாராட்டுங்களும்

[தொகு]

1921 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற இவர், அதே ஆண்டு பன்னாட்டு அணு எடைக் குழுவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நிலவின் இருண்ட பக்கத்தில் உள்ள ஒரு சிறிய தரைக்குழிவுப் பள்ளம் மற்றும் கதிரியக்க யுரேனியக் கனிமம் சோடைட் ஆகியவை இவரது பெயரால் அழைக்கப்படுகின்றன.[10]

இல்லற வாழ்க்கை

[தொகு]

1908 ஆம் ஆண்டில், தொழில்துறை வேதியியலாளர் சர் ஜார்ஜ் பெயில்பி மற்றும் பெண்கள் நலன் சார்ந்த ஒரு கொடையாளியான லேடி எம்மா பியல்பி ஆகியோரின் மகளான வின்ஃப்ரெட் மோலர் பெய்ல்பி ஐ சோடி மணந்தார். இந்த இணையர் இணைந்து வேலை செய்து 1910 ஆம் ஆண்டில் ரேடியத்திலிருந்து காமா கதிர்களை உறிஞ்சுவது குறித்து ஒரு கட்டுரையை வெளியிட்டனர்.[11] இவர் தனது 79 வது பிறந்தநாளுக்கு இருபது நாள்களுக்குப் பிறகு 1956 இல் இங்கிலாந்தின் பிரைட்டனில் இறந்தார்.[12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Fleck, A. (1957). "Frederick Soddy Born Eastbourne 2 September 1877 Died Brighton 26 September 1956". Biographical Memoirs of Fellows of the Royal Society 3: 203–226. doi:10.1098/rsbm.1957.0014. 
  2. Davies, M. (1992). "Frederick Soddy: The scientist as prophet". Annals of Science 49 (4): 351–367. doi:10.1080/00033799200200301. https://archive.org/details/sim_annals-of-science_1992-07_49_4/page/350. 
  3. Kauffman, G. B. (1997). "Book Review:The World Made New: Frederick Soddy, Science, Politics, and Environment Linda Merricks". Isis 88 (3): 564–565. doi:10.1086/383825. https://archive.org/details/sim_isis_1997-09_88_3/page/564. 
  4. George B. Kauffman (1986). Frederick Soddy (1877–1956): Early Pioneer in Radiochemistry (Chemists and Chemistry). Dordrecht; Boston; Hingham: D. Reidel Pub. Co. p. 272. ISBN 978-90-277-1926-3.
  5. Watson, Katherine D. (2007). "Soddy, Frederick (1877-1956)". Van Nostrand's Scientific Encyclopedia. doi:10.1002/0471743984.vse9748. ISBN 978-0471743989.
  6. Davies, Mansel (1992). "Frederick Soddy: The scientist as prophet" (in en). Annals of Science 49 (4): 351–367. doi:10.1080/00033799200200301. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-3790. https://www.tandfonline.com/doi/full/10.1080/00033799200200301. 
  7. Kauffman, G. B. (1997). "Book Review:The World Made New: Frederick Soddy, Science, Politics, and Environment Linda Merricks". Isis 88 (3): 564–565. doi:10.1086/383825. https://archive.org/details/sim_isis_1997-09_88_3/page/564. 
  8. Kauffman, G. B. (1997). "Book Review:The World Made New: Frederick Soddy, Science, Politics, and Environment Linda Merricks". Isis 88 (3): 564–565. doi:10.1086/383825. https://archive.org/details/sim_isis_1997-09_88_3/page/564. 
  9. Davies, Mansel (1992). "Frederick Soddy: The scientist as prophet" (in en). Annals of Science 49 (4): 351–367. doi:10.1080/00033799200200301. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-3790. https://www.tandfonline.com/doi/full/10.1080/00033799200200301. 
  10. Kauffman, G. B. (1997). "Book Review:The World Made New: Frederick Soddy, Science, Politics, and Environment Linda Merricks". Isis 88 (3): 564–565. doi:10.1086/383825. https://archive.org/details/sim_isis_1997-09_88_3/page/564. 
  11. Kauffman, G. B. (1997). "Book Review:The World Made New: Frederick Soddy, Science, Politics, and Environment Linda Merricks". Isis 88 (3): 564–565. doi:10.1086/383825. https://archive.org/details/sim_isis_1997-09_88_3/page/564. 
  12. "The Nobel Prize in Chemistry 1921 – Frederick Soddy Biographical". Nobelprize.org. Retrieved 28 November 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரடெரிக்_சோடி&oldid=4454127" இலிருந்து மீள்விக்கப்பட்டது