உள்ளடக்கத்துக்குச் செல்

பிரடெரிக் கார்ட்னர் காட்ரெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரெடெரிக் கார்ட்னர் காட்ரெல்
1910–1920 காலகட்டத்தில் காட்ரெல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1877-01-10)சனவரி 10, 1877
ஓக்லண்ட், கலிபோர்னியா, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இறப்புநவம்பர் 16, 1948(1948-11-16) (அகவை 71)
பெர்க்லி, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
துணைவர்
ஜெசி மே ஃபுல்டன் (தி. 1904)
பிள்ளைகள்2
முன்னாள் மாணவர்

பிரடெரிக் கார்ட்னர் காட்ரெல் (Frederick Gardner Cottrell) (சனவரி 10,1877-நவம்பர் 16,1948) ஒரு அமெரிக்க இயற்பிய வேதியியலாளரும் கண்டுபிடிப்பாளரும் நற்காரியங்களுக்கு கொடையளிப்பவரும் ஆவார். காற்று மாசுபாட்டை அகற்ற வடிவமைக்கப்பட்ட முதல் கண்டுபிடிப்பு இவருடையதாகும். அக்கண்டுபிடிப்பு நிலைமின்னியல் வீழ்படிவாக்கி என்ற கருவியாகும். இந்தக் கருவி தொழிற்சாலைகளின் புகைபோக்கிகளிலிருந்து வெளியேறும் தூசி மற்றும் புகை துகள்களை அகற்ற உதவுகிறது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு முக்கிய முன்னேற்றமாக இருந்தது. இவரது பணி தொழில்துறை வேதியியல், வளிமண்டல மின்னூட்டம், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. இவர் 1912 முதல் அறிவியல் ஆராய்ச்சிக்கு நிதியளிக்கும் அறக்கட்டளையான அறிவியல் முன்னேற்றத்திற்கான ஆராய்ச்சிக் கழகத்தை நிறுவினார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

பிறப்பு

[தொகு]

இவர், சனவரி 10,1877 அன்று கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் சிந்தியா ஆகியோருக்குப் பிறந்தார்.[1]

காட்ரெல்லின் அபரிமிதமான அறிவார்வம், தொடக்க கால கால வாழ்க்கையிலேயே இவரை வெளி உலகத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தது. "காட்ரெல் பாடநூல்ளை நாவல்கள் போன்று படித்தார்" என்று காட்ரெலை நன்கறிந்த ஒருவர் கூறியுள்ளார்.

கல்வி மற்றும் அறிவியல் பணி

[தொகு]

இவர் தனது 16ஆம் வயதில் உயர்நிலைப் பள்ளியை முடித்து, பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நுழைந்து 3 ஆண்டுகளில் பட்டம் பெற்றார்.[2] பட்டம் பெற்ற பிறகு, இவர் ஓக்லாண்ட் உயர்நிலைப் பள்ளியில் வேதியியல் கற்பித்தார். வில்ஹெல்ம் ஓஸ்ட்வால்டின் கீழ் இயற்பிய வேதியியலில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு, காட்ரெல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்திற்கு வேதியியல் பயிற்றுவிப்பாளராகத் திரும்பினார் (1902–1906). அவர் 1911 வரை கற்பித்தல் மற்றும் வீழ்படிவாக்கிகள் மீதான மேம்பாட்டுப் பணிகளைத் தொடர்ந்தார். பின்னர், இவர் பல்கலைக்கழகத்தில் இருந்து விலகி, அமெரிக்கச் சுரங்கப் பணியகத்தின் தலைமை இயற்பியல் வேதியியலாளராகப் பொறுப்பேற்றார். அங்கு அவர் தொடர்ச்சியாகத் தலைமை உலோகவியலாளர் (1914), உதவி இயக்குநர் (1916), மற்றும் இயக்குநர் (1919) பதவிகளை வகித்தார். 1921இல் இவர் தேசிய ஆராய்ச்சிக் குழுவின் தலைவரானார். 1922-ல், நிலையான நைட்ரஜன் ஆராய்ச்சிக் கூடத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்த நிறுவனம், வளிமண்டல நைட்ரசன், ஐதரசனிலிருந்து வினையூக்கி மூலம் அம்மோனியாவை உருவாக்கும் ஹேபர்-போஷ் செயல்முறையை அமெரிக்காவில் மேம்படுத்துவதில் ஈடுபட்டிருந்தது. 1930-ல் இவர் தனது பதவியிலிருந்து விலகி, ஆராய்ச்சி நிறுவனத்துடன் தொடர்புடைய பணிகளுக்குத் திரும்பினார். இயற்கை வாயுவிலிருந்து ஹீலியத்தைப் பிரித்தெடுக்கும் ஒரு செயல்முறையின் வளர்ச்சியில் காட்ரெல் ஒரு பங்கு வகித்தார். அமெரிக்காவில் செயற்கை அம்மோனியா தொழில்துறையை நிறுவுவதிலும், உயர் வெப்பநிலையில் நைட்ரிக் ஆக்சைடை உருவாக்கும் செயல்முறையைச் செம்மைப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சியிலும் இவர் ஒரு முக்கியப் பங்கு வகித்தார்.[3]

விருதுகள்

[தொகு]

இவர் தனது வாழ்வில் பின்வரும் அங்கீகாரங்களைப் பெற்றுள்ளார்.

  • பெர்க்கின் பதக்கம் (1919)
  • வில்லார்டு கிப்சு பதக்கம் (1920)
  • அமெரிக்கச் சுரங்கவியல் நிறுவனத்தின் பதக்கம் (1924)
  • தேசிய அறிவியல் அகாதெமியின் பரிசு (1939)

மேற்கோள்கள்

[தொகு]
  1. Advancement, Research Corporation for Science. "About Frederick Cottrell". Research Corporation for Science Advancement (in ஆங்கிலம்). Retrieved 2024-01-12.
  2. Advancement, Research Corporation for Science. "About Frederick Cottrell". Research Corporation for Science Advancement (in ஆங்கிலம்). Retrieved 2024-01-12.
  3. "About Frederick Cottrell". Research Corporation for Science Advancement (RCSA) (in அமெரிக்க ஆங்கிலம்). 2025-03-07. Retrieved 2026-01-10.