பிரடெரிக்கு இராம்சுடெல்
| பிரடெரிக்கு இராம்சுடெல் | |
|---|---|
இராம்சுடெல் 2015-இல் | |
| பிறப்பு | பிரடெரிக்கு ஜெ. இராம்சுடெல் |
| பணியிடங்கள் | புற்றுநோய் நோய்த்தடுப்பிற்கான பார்க்கர் நிறுவனம் |
| விருதுகள் | மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2025) |
பிரடெரிக்கு இராம்சுடெல் (Fred Ramsdell, பிறப்பு: திசம்பர் 4, 1960, இல்லினாய்ஸ், எல்மருசிடில்) என்பவர் அமெரிக்க நோயெதிர்ப்பு நிபுணரும் 2025ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவரும் ஆவார்.[1]
கல்வியும் பணியும்
[தொகு]இராம்சுடெல் 1983இல் சான் டியாகோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரியலில் இளங்கலைப் பட்டமும், 1987இல் இலாசு ஏஞ்சலிசில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நோயெதிர்ப்பு அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் முனைவர் பட்ட மேலாய்வளார்க தேசிய சுகாதார நிறுவனங்களிலும், பின்னர் சியாட்டில் பகுதியில் உள்ள உயிரியல் நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். டார்வின் மாலிகுலர்/செல்டெக், சைமோஜெனடிக்சு, நோவோ நோர்டிசுக், டைர் பார்மா ஆகிய பல உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மூத்த நிர்வாகியாக பணியாற்றிய அன்பவம் உள்ளவர். 2016ஆம் ஆண்டின் தொடக்கத்திலலிருந்து, இவர் சான் பிரான்சிசுகோவில் உள்ள பார்க்கர் புற்றுநோய் நோயெதிர்ப்பு சிகிச்சை நிறுவனத்தில் ஆராய்ச்சி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
இசுகர்பி எலிகளிலும், கடுமையான தன்னுடல் தாக்க நோயான ஐபிஇஎக்சு நோய்க்குறி உள்ள குழந்தைகளிலும் போர்க்கெட் பாக்சு புரதம் பி3 (FOXP3) குறித்து இராம்சுடெல் குழுவினர் கண்டறிந்தனர். மேலும், ஒழுங்குமுறை டி உயிரணுக்களின் வளர்ச்சியில் பாக்சுபி3 முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை இவர்கள் தீர்மானித்தனர்.
2017ஆம் ஆண்டில், பன்மூட்டழற்சி ஆராய்ச்சிக்காக சிமோன் சகாகுச்சியும் அலெக்சாந்தர் உருடென்சுகியும் இராம்சுடெல்லுடன் இணைந்து கிராஃபோர்டு பரிசைப் பெற்றார். "கீல்வாதம் மற்றும் பிற தன்னுடல் தாக்க நோய்களில் சேதப்படுத்தும் நோயெதிர்ப்பு மறுமொழிகளை எதிர்க்கும் ஒழுங்குமுறை டி உயிரணுக்களைக் கண்டுபிடித்ததற்காக" இவர் மேற்கோள் காட்டப்பட்டார்.[2]
நோபல் பரிசு
[தொகு]இராம்சுடெல்லுக்கு 2025ஆம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனை இவர் அமெரிக்காவின் மேரி ஈ. புருன்கோவவுடனும் சப்பானின் சிமோன் சகாகுச்சியுடனும் இணைந்து பெற்றுகொள்கிறார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nobel Prize in Physiology or Medicine 2025". NobelPrize.org. Retrieved 6 October 2025.
- ↑ "The Crafoord Prize in Polyarthritis 2017". crafoordprize.se. Archived from the original on January 12, 2017. Retrieved April 6, 2019.
- ↑ https://www.nobelprize.org/prizes/medicine/2025/press-release/
வெளி இணைப்புகள்
[தொகு]- Fred Ramsdell, Ph.D. at the Parker Institute for Cancer Immunotherapy (parkerici.org)
- Ramsdell, Fred (May 23, 2017). "History of FoxP3 and implications for therapeutic intervention in disease, Crafoord Prize Lectures in Polyarthritis, 2017-5-16". YouTube.