பிரஞ்சு வெண்கலம்
Appearance
பிரஞ்சு வெண்கலம் (French Bronze) குறிப்பாக 91% தாமிரம், 2% வெள்ளீயம், 6% துத்தநாகம் 1% ஈயம் ஆகிய உலோகங்களைக் கலந்து உருவாக்கப்படும் ஒரு கலப்புலோகம் ஆகும் [1].
பயன்கள்
[தொகு]பிரஞ்சு வெண்கலம் மலிவான துத்தநாகப் படிமங்கள் மற்றும் பிற பொருட்கள் உருவாக்கத்தில் தொடர்பு கொண்ட கலப்புலோகம் ஆகும். அசல் வெண்கலம் போன்றே இவை செய்து முடிக்கப்படுகின்றன. பிரஞ்சு வெண்கலத்தை பழைய நூல்கள் பாக்சு-வெண்கலம் என்றும் அழைத்தன.
5 பகுதிகள் ஏமடைட்டு தூளும் 8 பகுதிகள் ஈய ஆக்சைடும் கலந்து உருவாக்கப்படுகிறது. தேவைப்படும் நிறச்சாயல் வேறுபாடுகளுக்கு ஏற்ப பகுதிப்பொருட்களின் விகிதங்களை மாற்றிக் கொள்ளலாம். வெண்கலமாக மாற்ற வேண்டிய பொருளின் மீது மென் தூரிகையால் தீட்டி தயார்படுத்திய பின்னர், உலர்ந்ததும் மீண்டும் ஒரு முறை வன் தூரிகையால் வண்ணம் தீட்டி நிறைவு செய்யப்படுகிறது [2].