பிரஞ்சலா யாத்லபள்ளி
தோற்றம்
| நாடு | |
|---|---|
| வாழ்விடம் | ஐதராபாத்து |
| பிறப்பு | 30 மார்ச்சு 1999 குண்டூர், இந்தியா |
| விளையாட்டுகள் | வலது-கை ஆட்டக்காரர் |
| பரிசுப் பணம் | $49,266 |
| ஒற்றையர் போட்டிகள் | |
| சாதனைகள் | 115–70 (62.16%) |
| பட்டங்கள் | 4 பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு |
| அதிகூடிய தரவரிசை | எண். 265 (13 மே 2019) |
| பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
| ஆத்திரேலிய ஓப்பன் இளையோர் | 3R (2016) |
| பிரெஞ்சு ஓப்பன் இளையோர் | 1R (2015) |
| விம்பிள்டன் இளையோர் | 2R (2015) |
| அமெரிக்க ஓப்பன் இளையோர் | 2R (2016) |
| இரட்டையர் போட்டிகள் | |
| சாதனைகள் | 57–33 (63.33%) |
| பட்டங்கள் | 6 பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு |
| அதியுயர் தரவரிசை | எண். 232 (20 ஆகஸ்ட் 2018) |
| தற்போதைய தரவரிசை | எண். 1383 (18 மார்ச் 2024) |
| பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | |
| ஆத்திரேலிய ஓப்பன் Junior | காலிறுதி (2016) |
| பிரெஞ்சு ஓப்பன் இளையோர் | காலிறுதி (2015) |
| விம்பிள்டன் இளையோர் | 1R (2015) |
| அமெரிக்க ஓப்பன் இளையோர் | 1R (2015, 2015) |
| அணிப் போட்டிகள் | |
| கூட்டமைப்புக் கோப்பை | 1–0 |
| இற்றைப்படுத்தப்பட்டது: 21 March 2024. | |
பிரஞ்சலா யாத்லபள்ளி (Pranjala Yadlapalli) (30 மார்ச் 1999 அன்று பிறந்தவர்) இந்தியாவைச் சேர்ந்த டென்னிசு வீராங்கனை ஆவார். 13 மே 2019 அன்று, இவர் உலக ஒற்றையர் தரவரிசையில் தனது உயர்ந்த நிலையான உலக எண் 265-ஐ பெற்றார். 20 ஆகஸ்ட் 2018 அன்று, இரட்டையர் தரவரிசையில் உலக எண் 232 என்ற நிலையை எட்டினார். யாத்லபள்ளி, பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பின் பெண்கள் சுற்றுப்போட்டிகளில் நான்கு ஒற்றையர் பட்டங்களையும் ஆறு இரட்டையர் பட்டங்களையும் வென்றுள்ளார். பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பின் இளையோர் பிரிவில், 4 ஜனவரி 2016 அன்று இவர் 15-வது இடத்தைப் பெற்றார்.[1] யாத்லபள்ளி 2018 ஆம் ஆண்டில் இந்தியா கூட்டமைப்புக் கோப்பை அணிக்காக தனது முதல் போட்டியில் விளையாடினார். மேலும் கூட்டமைப்பின் போட்டிகளில் இவர் இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்றுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Billie Jean King Cup – Rankings". Retrieved 25 February 2024.