பிரசெல்சு தாக்குதல், 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரசெல்சு தாக்குதல், 2017
இடம்பிரசெல்சு மத்தியத் தொடருந்து நிலையம், பிரசெல்சு, பெல்ஜியம்
நாள்20 ஜூன் 2017
8:45 பிறபகல்
தாக்குதல்
வகை
குண்டுவெடிப்பு
ஆயுதம்வெடிபொருட்கள்
இறப்பு(கள்)1 (சந்தேக நபர்)
காயமடைந்தோர்0
தாக்கியோர்அடையாளம் தெரியாத ஆண் நபர்

பெல்ஜியம் நாட்டின் பிரசெல்சு நகரில் மத்தியத் தொடருந்து நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. 20 ஜூன் 2017 அன்று நடந்த இத்தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. ரோந்துக் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மூன்று முதல் நான்கு முறை சுட்டு தாக்குதல்தாரியைக் கொன்றனர். தாக்குதல்தாரியின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.[1]

தாக்குதல்[தொகு]

உள்ளூர் நேரப்படி பிறபகல் 8:45 மணிக்கு 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க நபர் அல்லாஹூ அக்பர்[2][2][3][4] எனக் கோஷமிட்டபடி சிறு வெடிபொருள் ஒன்றை வெடிக்கச் செய்தார். தாக்குதல்தாரி அதன் பின்னர் நடுக்கூடத்திற்கு வரும்போது ரோந்துக்காவலர்களால் அடையாளம் காணப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.[5] இவரது உடலைச் சோதனையிட்ட பின்னர் அவரிடம் சக்தி வாய்ந்த குண்டுகள் இருந்தன எனவும் அவற்றை வெடிக்கும் முயற்சி தோல்வியடைந்தது என்று ஊடகங்கள் தெரிவித்தன. இத்தாக்குதலைத் தீவிரவாதத் தாக்குதல் என வகைப்படுத்தியுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]