பிரசுதி
| பிரசுதி | |
|---|---|
தக்கனும் பிரசுதியும் | |
| துணை | தக்கன் |
| குழந்தைகள் | 27 மகள்கள் |
பிரசுதி (ஆங்கிலம்: Prasuti; இந்தி: प्रसूति) என்பவர் தக்கனின் மனைவி ஆவார். இவருக்குச் சதி உட்பட இவருக்குப் பல மகள்கள் உள்ளனர். பிரசுதி சுவயம்புவ மனு மற்றும் சதரூபாவின் மகள் ஆவார்.[1]
திருமணமும் குழந்தைகளும்
[தொகு]விஷ்ணு புராணம், லிங்க புராணம் மற்றும் பத்ம புராணத்தின் படி, தக்கனும் அவரது மனைவி பிறசுதிக்குப் பல மகள்கள் இருந்தனர் (16 முதல் 60 வரை). ஆனால் பெரும்பாலான அறிஞர்கள் இந்த எண்ணிக்கையினை 24 என்று கருதுகின்றனர். இவை: சரத்தா, பக்தி, திரிதி, துசுடி, புசுடி, மேதா, கிரியா, புத்திகா, சித்திகா, சந்தீகா, சந்திகா, கியாதி, சுமிருதி, பிரீதி, சாமா, சன்னதி, ஊர்ஜ்ஜா, சுவாகா, சுவதா, சதி. பத்ம புராணம், தக்கன் தனக்கு 24 மகள்கள் போதாது என்று உணர்ந்து 60க்கும் மேற்பட்ட கன்னிப் பெண்களைப் பெற்றெடுத்ததாகப் பதிவு சொல்கிறது. இருப்பினும் இந்த அறுபது மகள்கள் மற்ற நூல்களில் அசிக்னியின் சந்ததியினர் என்று குறிப்பிடப்படுகிறார்கள்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dalal, Roshen (2010). Hinduism: An Alphabetical Guide (in ஆங்கிலம்). Penguin Books India. ISBN 978-0-14-341421-6.
- ↑ Wilkins, W.J. (2003). Hindu Mythology. New Delhi: D.K. Printworld (P) Limited. p. 373. ISBN 81-246-0234-4.